நான் அப்படி விளையாடியும் எனக்கு வாய்ப்பு கிடைக்காதது வருத்தம் தான். ஐ.பி.எல் குறித்து மனம்திறந்த – சத்தீஸ்வர் புஜாரா

Pujara
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான புஜாரா டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக தவிர்க்க முடியாத வீரராக இருந்து வரும் வேளையில் டெஸ்ட் ஸ்பெசலிஸ்ட்டாக பார்க்கப்பட்டு வரும் அவர் சிகப்பு பந்து கிரிக்கெட்டில் நல்ல அனுபவம் வாய்ந்த வீரராக திகழ்கிறார். ஆனால் வெள்ளை பந்து கிரிக்கெட்டை பொருத்தவரை அவருக்கு இன்று அளவு பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

Pujara 1

- Advertisement -

குறிப்பாக இந்தியாவில் நடைபெறும் பிரபல கிரிக்கெட் தொடரான ஐபிஎல் போட்டிகளில் கூட அவர் டெஸ்ட் பிளேயர் என்பதனால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வருகிறார். கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை அவர் ஐபிஎல் தொடரில் இடம் பெற்றிருந்தாலும் அதன் பிறகு பல ஆண்டுகள் அவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்தது. கடைசியாக 2021 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட அவர் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் அந்த ஆண்டு அணியில் இருந்து கழற்றி விடப்பட்டார்.

ஆனாலும் வெள்ளை பந்து கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாட முடியும் என்பதை அவர் இங்கிலாந்து சென்று கவுண்ட்டி போட்டியில் அதனை சாதித்து காட்டினார். ஏனெனில் இங்கிலாந்தில் நடைபெற்ற கவுண்டி அணியில் சசெக்ஸ் அணிக்காக விளையாடிய அவர் பேட்டிங்கில் அதிரடியாக செயல்பட்டு அனைவரையும் வியக்க வைத்தார்.

pujara 2

இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் இடம் பெற்றிருக்கும் அவர் ஐபிஎல் தொடரில் தான் இடம் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : டி20 கிரிக்கெட் என்பது ஒரு வித்தியாசமான வடிவம். இந்த ஷாட்டர் ஃபார்மேட் விளையாட்டில் எனக்கு திறமை இருப்பதாக எப்போதுமே நம்புகிறேன்.

- Advertisement -

ஏனெனில் நான் உள்நாட்டிலும் சரி, இங்கிலாந்து கவுண்டி போட்டிகளிலும் சரி வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் விளையாடும் போதெல்லாம் மிகச் சிறப்பாகவே விளையாடியுள்ளேன். ஆனாலும் ஐபிஎல் தொடரில் எனக்கு வாய்ப்பு நிராகரிக்கப்படுவது கஷ்டமாகத்தான் இருக்கிறது. இருந்தாலும் எப்போதும் நான் என்னுடைய நம்பிக்கையை கைவிட்டது கிடையாது .என்னுடைய ஆட்டத்தை நான் மேம்படுத்தி வருகிறேன்.

இதையும் படிங்க : IND vs AUS : அந்த ஆஸ்திரேலிய பவுலர்கிட்ட விராட் கோலி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் – ரஷித் லத்தீப் கருத்து

வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் பெரிய உயரத்தை தொடமுடியாதது குறித்து எதையும் யோசிக்கவில்லை. ஏனெனில் கடந்த காலத்தைப் பற்றி யோசிப்பதை விட நிகழ்காலத்தில் இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். நிச்சயம் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டை நான் மிகவும் ரசிக்கிறேன் என்று புஜாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement