IND vs AUS : அந்த ஆஸ்திரேலிய பவுலர்கிட்ட விராட் கோலி கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கனும் – ரஷித் லத்தீப் கருத்து

Latif
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி நாக்பூர் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இந்த முதல் போட்டிக்கான இரு அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணி கடந்த 2004 ஆம் ஆண்டு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. அதற்கடுத்து இதுவரை கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வருகிறது.

INDvsAUS

- Advertisement -

அதேவேளையில் இந்திய அணியோ கடைசியாக இரண்டு முறை ஆஸ்திரேலியா சென்ற சுற்றுப்பயணத்திலும் டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. இதன் காரணமாக இந்திய அணியின் வெற்றிக்கு பதிலடி கொடுக்கும் வகையாக இம்முறை ஆஸ்திரேலிய அணி பலமாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

அதுமட்டுமின்றி இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மூன்று போட்டிகளில் வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷித் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதனால் இந்த தொடரின் மீதுடை எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

kohli 1

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலிக்கு ஆபத்தாக பேட் கம்மின்ஸ் இருப்பார் என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான ரஷீத் லத்தீப் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : பேட் கம்மின்ஸ் ஆறு போட்டிகளில் ஐந்து முறை இந்திய அணியின் வீரரான விராட் கோலியை வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் நிச்சயம் விராட் கோலிக்கு அவரது பந்துவீச்சில் சில தொந்தரவுகள் இருக்கிறது என்பது வெளிப்பட்டுள்ளது. எனவே அவரது பந்துவீச்சை விராட் கோலி சற்று நிதானமாக எதிர்கொள்ள வேண்டும். விராட் கோலிக்கு அவரே அச்சுறுத்தலாக இருப்பார் என்று தெரிவித்துள்ளார். மேலும் சிராஜ் குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இதையும் படிங்க : எங்ககிட்ட அந்த பலம் இருக்கு, நீங்க சுழலுக்கு சாதகமான பிட்ச் தயாரிச்சலும் கவலை இல்ல – ஆஸி கேப்டன் அதிரடி பேட்டி

தற்போது இந்திய அணியில் சிராஜ் மிகச் சிறப்பாக பந்துவீசி வருகிறார். அதிலும் குறிப்பாக இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் மிக அற்புதமாக பந்துவீசி வருகிறார். எனவே ஆஸ்திரேலியா அணியின் இடதுகை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் அச்சுறுத்தலாக இருப்பார் என ரசித் லத்தீப் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement