எங்ககிட்ட அந்த பலம் இருக்கு, நீங்க சுழலுக்கு சாதகமான பிட்ச் தயாரிச்சலும் கவலை இல்ல – ஆஸி கேப்டன் அதிரடி பேட்டி

- Advertisement -

2023 ஜூலை மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் விளையாடப் போகும் அணிகளை வரும் பிப்ரவரி 9 முதல் துவங்கும் பார்டர் கவாஸ்கர் – கோப்பை தொடர் தீர்மானிக்க உள்ளது. குறிப்பாக இதுவரை நடைபெற்ற லீக் போட்டிகளின் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியா ஏற்கனவே பைனலுக்கு தகுதி பெற்றுள்ளதால் 2004க்குப்பின் இந்தியாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடிக்கும் வெறியுடன் களமிறங்குகிறது. மேலும் 2018/19, 2020/21 ஆகிய அடுத்தடுத்த வருடங்களில் தங்களது சொந்த மண்ணில் முதல் முறையாக அவமான தோல்விகளை பரிசளித்த இந்தியாவுக்கு இம்முறை அதன் சொந்த மண்ணில் தோல்வியை பரிசளித்து பழி தீர்க்க ஆஸ்திரேலியா போராட உள்ளது.

IND-vs-AUS

- Advertisement -

மறுபுறம் பைனலுக்கு தகுதி பெற இத்தொடரில் குறைந்தபட்சம் 3 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்தில் விளையாடும் இந்தியா சொந்த மண்ணில் 2012க்குப்பின் உலகின் எந்த அணிக்கு எதிராகவும் ஒரு தொடரில் தோற்காமல் வெற்றி நடை போட்டு வருவதால் இம்முறையும் ஆஸ்திரேலியாவை தோற்கடித்து லண்டனுக்கு பறக்க போராட உள்ளது. முன்னதாக இயற்கையாகவே இந்தியாவில் முதலிரண்டு நாட்களுக்குப் பின் அனைத்து மைதானங்களுமே சுழலுக்கு கை கொடுக்கும் என்ற நிலைமையில் கடந்த 2017 இந்திய சுற்றுப்பயணத்தில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச் உருவாக்கப்பட்டிருந்ததாக அப்போதைய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் முன்னாள் வீரர் இயன் ஹீலி சமீபத்தில் விமர்சித்திருந்தார்கள்.

எங்களுக்கு கவலையில்ல:
அதனால் இம்முறை இந்தியாவை நம்பாமல் சிட்னியில் வேண்டுமென்றே தாறுமாறாக சுழலும் பிட்ச்சில் பயிற்சி எடுத்து விட்டு இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய வீரர்கள் அஷ்வின் போலவே பந்து வீசும் லோக்கல் ஸ்பின்னரை தேடி பிடித்து வெறியுடன் பயிற்சி செய்து வருகிறார்கள். இந்நிலையில் இந்த தொடரில் மைதானங்கள் சுழலுக்கு சாதகமாக இருந்தாலும் அதற்காக கவலைப்பட போவதில்லை என்று ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் தெரிவித்துள்ளார். ஏனெனில் ஆசிய கண்டத்திலும் அசத்தக்கூடிய தரமான வேகப்பந்து வீச்சு கூட்டணி தங்களிடம் இருப்பதாக தெரிவிக்கும் அவர் லயன், அஸ்டன் அகர், ஸ்வெப்சன், டிராவிஸ் ஹெட் என தங்களிடமும் தரமான ஸ்பின்னர்கள் இருப்பதால் இம்முறை வெற்றி உறுதி என்று தைரியமாக பேசியுள்ளார்.

இது பற்றி இத்தொடருக்கான முதற்கட்ட செய்தியாளர் சந்திப்பில் அவர் பேசியது பின்வருமாறு. “சில நேரங்களில் எக்ஸ்ட்ராஸ் ஸ்பின்னர்களை வைத்து விளையாடுவதைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் எங்களிடம் அனைத்து வகையான சூழ்நிலைகளிலும் அசத்தக்கூடிய வேகப்பந்து வீச்சாளர்கள் இருப்பதை நீங்கள் மறந்து விட்டீர்கள். குறிப்பாக எஸ்சிஜி பந்துகளில் கூட எங்களுடைய வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படும் வழியை கண்டுபிடிப்பார்கள். அத்துடன் எங்களிடமும் கைவிரல், மணிக்கட்டு ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள். மேலும் 2வது போட்டியில் மிட்சேல் ஸ்டார்க் வருவார்”

- Advertisement -

“எதிரணியின் 20 விக்கெட்டுகளையும் எடுப்பார்கள் என்று கருதப்படும் பவுலர்களை மட்டுமே நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். இருப்பினும் அது இன்னும் 100% உறுதியாகவில்லை. அத்துடன் முதல் போட்டியில் எத்தனை ஸ்பின்னர்களை உபயோகிப்பது என்பதை நாக்பூர் மைதானத்தை நேரில் பார்த்ததும் முடிவெடுக்க உள்ளோம். மேலும் கடந்த இந்திய சுற்றுப்பயணத்தில் விளையாடிய அணியில் இருந்த அஸ்டன் அகர் தற்போதும் உள்ளார். ஸ்வெப்சன் கடந்த சில வெளிநாட்டு தொடர்களில் விளையாடிய அனுபவத்தை கொண்டுள்ளார்”

PatCummins

“முர்பியும் நல்ல அனுபவத்தையும் கொண்டுள்ளதால் இவர்கள் அனைவரும் சேர்ந்து நேதன் லயனுக்கு ஆதரவு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். டிராவிஸ் ஹெட்டும் நல்ல ஆஃப் ஸ்பின் பந்துகளை வீசக்கூடியவர். எனவே எங்களுக்கு ஏராளமான பவுலர்கள் உள்ளனர். அத்துடன் இந்தியாவில் 6 வருடங்கள் கழித்து முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளேன். கடைசியாக ராஞ்சியில் விளையாடிய போது மிகவும் மகிழ்ச்சியுடன் விளையாடினேன்”

இதையும் படிங்க: வீடியோ : லோக்கல் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்க விட்ட பாக் வீரர் – முரட்டு அடி வாங்கிய சீனியர் வீரர்

“டெஸ்ட் கிரிக்கெட் எப்போதும் உங்களுக்கு கடினமாக இருக்கும் என்பதை ஏற்றுக் கொண்டாக வேண்டும். இந்தியாவில் எப்போதும் சுழலுக்கு சாதகமான மைதானங்கள் இருக்கும் என்று பேசுகிறார்கள். ஆனால் அது அனைத்து நேரங்களிலும் அவ்வாறு இருக்காது. சில நேரங்களில் வேகப்பந்து வீச்சாளர்களும் தங்களது வேலையை செய்தால் நிச்சயம் பரிசு கிடைக்கும். அதை கடந்த சுற்றுப்பயணத்திலேயே நான் மகிழ்ச்சியுடன் செய்தேன்” என்று கூறினார்.

Advertisement