வீடியோ : லோக்கல் போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை பறக்க விட்ட பாக் வீரர் – முரட்டு அடி வாங்கிய சீனியர் வீரர்

iftikhar ahmed
- Advertisement -

பாகிஸ்தானில் கடந்த 2016 முதல் நடைபெற்ற வரும் பிஎஸ்எல் டி20 கிரிக்கெட் தொடரின் 2023 சீசன் விரைவில் துவங்குகிறது. பாபர் அசாம் உள்ளிட்ட பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர்களுடன் வெளிநாட்டு வீரர்களும் களமிறங்கும் இத்தொடர் அந்நாட்டில் மிகவும் புகழ் பெற்றதாக நடந்து வருகிறது. மேலும் பிஎஸ்எல் தொடர் தான் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை விட மிகவும் தரமானது என்றும் அந்நாட்டவர்கள் சமீப காலங்களாகவே பெருமை பேசி வருகிறார்கள். அந்த நிலைமையில் இத்தொடரில் ரசிகர்களை கவர்வதற்காக பிப்ரவரி 5ஆம் தேதியன்று குயிட்டா கிளாடியேட்டர் மற்றும் பெசாவர் ஜால்மி ஆகிய அணிகள் மோதிய கண்காட்சி போட்டி புக்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

அதில் டாஸ் வென்ற பெசாவர் அணி கேப்டன் பாபர் அசாம் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய கிளாடியேட்டர் அணிக்கு ஆரம்பத்திலேயே அசான் அலி மற்றும் உமர் அஹ்மத் ஆகிய 2 முக்கிய வீரர்களை காலி செய்து நட்சத்திர சீனியர் வீரர் வகாப் ரியாஸ் நல்ல தொடக்கத்தை கொடுத்தார். அதனால் ஆரம்பத்திலேயே தடுமாறிய கிளாடியேட்டர் அணிக்கு மிடில் ஆர்டரில் நங்கூரமாக செயல்பட்ட நட்சத்திர வீரர் இஃப்திகார் அகமது கடைசியில் நன்கு செட்டிலாகி அதிரடியாக ரன்களை குவித்தார்.

- Advertisement -

6 சிக்ஸர்கள்:
குறிப்பாக வாகப் ரியாஸ் வீசிய கடைசி ஓவரில் அதிரடியை துவக்கிய அவர் முதல் பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்ஸரை பறக்க விட்டு அடுத்த 2 பந்துகளிலும் நேராக அடுத்தடுத்த சிக்ஸர்களை தெறிக்க விட்டார். அப்படி ஹாட்ரிக் சிக்ஸர்களை அடித்த அவரை தனது அனுபவத்தால் கட்டுப்படுத்த நினைத்த வஹாப் ரியாஸ் அரௌண்ட் தி விக்கெட் திசையிலிருந்து பந்து வீசினார். ஆனால் மீண்டும் சுமாராக வீசியதை பயன்படுத்திய இப்திகார் அஹமது 4வது பந்தில் கவர் திசையிலும் 5வது பந்தில் தேர்ட் மேன் திசையிலும் மீண்டும் சிக்ஸர்களை அடித்து கட்டுக்கடங்காமல் செயல்பட்டார்.

அதோடு நிற்காமல் கடைசி பந்திலும் தேர்ட் மேன் திசைக்கு மேலே அதிரடி சிக்ஸரை பறக்க விட்ட அவர் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்து மைதானத்துக்கு வந்த ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஈடுபட வைத்தார். அதனால் கிளாடியேட்டர் அணி 20 அவர்களின் 184 ரன்கள் எடுத்த நிலையில் 6 சிக்ஸர்களை பறக்க விட்ட இப்திகார் அகமது 94* (50) ரன்கள் விளாசினார். முன்னதாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையிலும் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி அதிரடி காட்டிய அவர் அரை சதமடித்து அசத்தலாக செயல்பட்டார்.

- Advertisement -

அத்துடன் வங்கதேசத்தில் நடைபெற்ற 2023 பங்களாதேஷ் பிரிமியர் லீக் தொடரில் 10 போட்டிகளில் ஒரு சதம் 3 அரை சதங்கள் உட்பட 347 ரன்களை 161.39 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் எடுத்த அவர் தற்போது நல்ல பார்மில் இருப்பதன் காரணத்தாலேயே இப்படி ஒரே ஓவரில் 6 சிக்சர்களை தெறிக்க விட்டு அசத்தியுள்ளார். மறுபுறம் தனது அனுபவத்திற்கு அடையாளமாக செயல்படாமல் கடைசி ஓவரில் முரட்டு அடி வாங்கிய வகாப் ரியாஸ் 4 ஓவரில் 47 ரன்கள் கொடுத்தார்.

இதையும் படிங்க: வேலையில்லாம விளம்பரம் தேடும் நீங்க பேசலாமா? இளம் இந்திய வீரரை கலாய்த்த முன்னாள் பாக் வீரருக்கு இர்பான் பதான் பதிலடி

இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 13 முதல் துவங்கும் பிஎஸ்எல் தொடர் மார்ச் 19ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. அதில் 30 லீக் சுற்றுப்போட்டிகளில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்ததாக நடைபெறும் பிளே ஆப் சுற்றில் விளையாடி மார்ச் 19ஆம் தேதி லாகூரில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் கோப்பைக்காக மோத உள்ளன. இந்த தொடரில் ஷாஹீன் அப்ரிடி, ஹாரீஸ் ரவூப் போன்ற சமீப காலங்களில் காயமடைந்த நட்சத்திர பாகிஸ்தான் வீரர்களும் கம்பேக் கொடுப்பதால் பாகிஸ்தான் ரசிகர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement