வேலையில்லாம விளம்பரம் தேடும் நீங்க பேசலாமா? இளம் இந்திய வீரரை கலாய்த்த முன்னாள் பாக் வீரருக்கு இர்பான் பதான் பதிலடி

Irfan Pathan Sohail Khan
- Advertisement -

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் தனது அதிரடியான வேகத்தால் உலக அளவில் பல வெளிநாட்டு ஜாம்பவான் முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை பெற்று அசத்தி வருகிறார். 2021 ஐபிஎல் தொடரில் கடைசி நேரத்தில் ஓரிரு போட்டிகளில் விளையாடி 145 கி.மீ வேகத்தில் தொடர்ச்சியாக பந்து வீசி எதிரணி பேட்ஸ்மேன்களின் ஸ்டம்ப்களை தெறிக்க விட்ட அவர் 2022 சீசனில் முழுமையான வாய்ப்பு பெற்று அதிக விக்கெட்களை எடுத்து அசத்தலாக செயல்பட்டார். அதனால் இந்தியாவுக்காக அறிமுகமான அவர் வேகத்தை மட்டுமே நம்பி பந்து வீசியதால் ரன்களை வாரி வழங்கினார்.

அதன் காரணமாக ரன் மெஷின் என கிண்டல்களுக்கு உள்ளாகி 2 போட்டிகளுடன் கழற்றி விடப்பட்ட அவரை 2022 ஆசிய மற்றும் டி20 உலகக்கோப்பை இந்தியா தவற விட்டு தவறு செய்து விட்டதாக பிரெட் லீ, வாசிம் அக்ரம் போன்ற முன்னாள் ஜாம்பவன்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். அதைத்தொடர்ந்து உள்ளூர் கிரிக்கெட்டுக்கு சென்று சில முன்னேற்றங்களை செய்த உம்ரான் மாலிக் இந்தியாவுக்காக பெற்ற 2வது வாய்ப்பில் 150 கி.மீ வேகத்துடன் நல்ல லைன், லென்த் போன்ற விவேகங்களையும் பின்பற்றி குறைவான ரன்களை கொடுத்து விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

- Advertisement -

வேலை இல்லாம:
குறிப்பாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய இந்திய பவுலர் என்ற சாதனை படைத்த அவர் ஏற்கனவே ஐபிஎல் தொடரிலும் அதிவேகமான பந்தை வீசிய இந்திய கிரிக்கெட் வீரராக சாதனை படைத்துள்ளார். அதன் காரணமாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமான பந்தை வீசிய பவுலராக சாதனை படைத்துள்ள சோயப் அக்தரின் உலக சாதனையும் அவர் முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலைமையில் உம்ரான் மாலிக் போன்ற 150 கி.மீ வேகத்தில் வீசக்கூடிய பவுலர்கள் பாகிஸ்தானின் லோக்கல் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் இருப்பதாகவும் அவரால் எப்போதுமே சோயப் அக்தர் சாதனையை தொடக்கூட முடியாது என்றும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் சோஹைல் கான் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

முன்னதாக 2015 உலக கோப்பையில் விராட் கோலியை மகனே என்றழைத்து பதிலடி கொடுத்ததாகவும் சமீபத்தில் அவர் தெரிவித்திருந்தார். அதைப் பார்த்த இந்திய ரசிகர்கள் ஜாம்பவான்கள் கூட இந்த அளவுக்கு கீழ்த்தரமாக பேச மாட்டார்கள் ஆனால் குறைவான சர்வதேச போட்டிகளில் விளையாடி விட்டு பேசும் நீங்கள் யார் என்று அவரை கலாய்த்தார்கள். அந்த நிலையில் உம்ரான் மாலிக் பற்றி சோஹைல் கான் தெரிவித்த கருத்துகளை பார்த்த முன்னாள் இந்திய ராணுவ வீரர் மேஜர் கௌரவ் ஆர்யா 2004இல் இர்பான் பதானை இதே போல் உதாசீனப்படுத்தி பின்னர் வாங்கி கட்டிக் கொண்டது நினைவில்லையா என்று ட்விட்டரில் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

அதாவது 2004ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது இர்பான் பதான் போன்றவரை பாகிஸ்தானின் ஒவ்வொரு தெருவிலும் பார்க்க முடியும் என்று அப்போதைய தலைமை பயிற்சியாளர் மற்றும் முன்னாள் வீரர் ஜாவேத் மியான்தத் உதாசினமாக பேசியிருந்தார். ஆனால் அத்தொடரின் ஒரு போட்டியில் முதல் 3 பந்துகளில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த இர்பான் பதான் செயலால் அவருக்கு தக்க பதிலடி கொடுத்து மிரட்டினார். அதை சுட்டி காட்டிய மேஜர் கௌரவ் ஆர்யா வரலாற்றில் நடந்ததை மனதில் வைத்துக் கொண்டு பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் குறைவாக பேச வேண்டும் என்று ட்விட்டரில் பதிலடி கொடுத்தார்.

இதையும் படிங்க: மீண்டும் 2 பிரிவில் போடப்பட்டுள்ள FIR. அடுத்த சர்ச்சையில் சிக்கிய வினோத் காம்ளி – என்ன நடந்தது?

அதை பார்த்த இர்ஃபான் பதான். “மேஜர். அவர்கள் விளம்பரத்துக்காக இது போன்ற கருத்துக்களை தெரிவிக்கிறார்கள். தயவு செய்து கண்டு கொள்ளாமல் விட்டு விடுங்கள்” என்று பதிலளித்துள்ளார். அதாவது வேலை எதுவுமில்லாமல் விளம்பரத்தை தேடி பிரபலமடைவதற்காக மிகச் சிறப்பாக செயல்படும் உம்ரான் மாலிக் போன்ற இளம் வீரரை சோஹைல் கான் விமர்சிக்கிறார் என்பதால் அவரை போன்றவர் கூறும் கருத்துக்களை இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யாரும் கண்டு கொள்ள வேண்டாம் என்றும் இர்பான் பதான் நெத்தியடி பதிலை கொடுத்துள்ளார்.

Advertisement