மீண்டும் 2 பிரிவில் போடப்பட்டுள்ள FIR. அடுத்த சர்ச்சையில் சிக்கிய வினோத் காம்ளி – என்ன நடந்தது?

Kambli-1
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் வீரரும், சச்சின் டெண்டுல்கரின் நெருங்கிய நண்பருமான வினோத் காம்ளி ஏற்கனவே பல்வேறுமுறை தனது தனிப்பட்ட வாழ்க்கையில் சர்ச்சையான பல விஷயங்களில் சிக்கி சமூக வலைதளத்தில் ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உரிய நபராகவே இருந்து வருகிறார். அவரது கிரிக்கெட் கரியர் சிறியதாக இருந்தாலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய அவர் தனிப்பட்ட நடவடிக்கைகளில் ஒழுக்கமின்மை காரணமாக அவர் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.

Kambli

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே அவரிடம் இருந்த பல்வேறு பிரச்சனைகள் சமூக வலைதளத்தில் பெரிய அளவில் பேசப்பட்டு வந்த வேளையில் தற்போது மீண்டும் மும்பை போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்த ஒரு விவகாரம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் தான் பென்ஷன் பணத்தை மட்டுமே நம்பி இருப்பதாகவும் அதை தவிர்த்து வேறு எந்த வருமானமும் இல்லை என்பதனால் தனக்கு மும்பை கிரிக்கெட் வாரியம் ஒரு வேலைவாய்ப்பினை உருவாக்கித் தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார். அவரது அந்த வேண்டுகோளுக்கு இணங்க மும்பை கிரிக்கெட் வாரியமும் குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட்டால் வேலை தருவதாக கூறியிருந்தது.

kambli

மேலும் தொழில் நிறுவனம் ஒன்றும் அவருக்கு மாதம் ஒரு லட்ச ரூபாய் அளவிற்கு சம்பளம் வரும் அளவிற்கு வேலை தருவதாகவும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். இந்நிலையில் மீண்டும் அவர் சர்ச்சைக்குரிய ஒரு விடயத்தில் மாட்டியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் அவருடைய மனைவியான ஆண்ட்ரியா அளித்த புகாரின் பேரில் வினோத் காம்ளி மீது 324 ஆயுதத்தால் தாக்கியது. 504 அவமதிப்பது போன்ற பிரிவுகளில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை போலீசார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது மனைவி அளித்த புகாரில் குறிப்பிடப்பட்டதாவது : கடந்த வாரம் வீட்டில் குடித்துவிட்டு ரகளையில் ஈடுபட்ட அவர் சமையலறையில் இருந்த பாத்திரங்களால் அவரது மனைவியை தாக்கியுள்ளார்.

இதையும் படிங்க : உங்கள விட அஷ்வின் 100 மடங்கு சிறந்தவர், வன்மத்தை காட்டிய ஹர்பஜன் சிங்கை விளாசும் ரசிகர்கள் – நடந்தது என்ன

பிறகு மேலும் ஒரு பேட்டை எடுத்து வந்து அடிக்க முயன்றுள்ளார். இதனால் காயமடைந்த அவரது மனைவி மருத்துவமனையில் சிகிச்சை முடித்துவிட்டு தற்போது அவர் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்றுக்கொண்ட போலீசாரும் தற்போது வினோத் காம்ளியிடம் விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement