IND vs AUS : என்னடா பிட்ச் இது? இவ்ளோ கஷ்டமா இருக்கு. அரைசதம் அடித்தும் புலம்பிய – சத்தீஸ்வர் புஜாரா

Pujara-1
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று மார்ச் ஒன்றாம் தேதி துவங்கியது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே குவித்தது. பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது இரண்டாம் நாளான இன்று 197 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

Nathan Lyon

- Advertisement -

இதன் காரணமாக 88 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இந்திய அணியானது இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 163 ரன்களை குவித்தது. இதன் காரணமாக 75 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

போட்டியின் மூன்றாம் நாளான நாளை இந்த ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும் என்கிற நிலையில் இரண்டாம் நாளான இன்று இந்திய அணி வீரர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக முற்றிலுமாக தடுமாறினர். அதற்கு முழு காரணம் மைதானத்தில் பந்து அதிகளவு சுழன்றது தான். அந்த வகையில் இன்றைய போட்டி முடிந்து இந்த மைதானம் குறித்து பேசிய புஜாரா கூறியதாவது :

Pujara

இது ஒரு கடினமான மைதானம். இங்கு பேட்டிங் செய்வது அவ்வளவு எளிது கிடையாது. உங்களுடைய டிபென்சை நீங்கள் நம்பி தான் ஆகவேண்டும். இதுபோன்ற மைதானங்களில் ஆடவேண்டுமெனில் பந்து வரும்போது முன்கூட்டியே கணித்தால் தான் இந்த மைதானத்தில் நாம் விக்கெட் விழாமல் தற்காத்துக் கொள்ள முடியும். நாங்கள் அடித்த ரன்கள் குறைவு என்றாலும் வெற்றிக்கு இன்னும் ஒரு வாய்ப்பு இருப்பதாகவே கருதுகிறேன். இது போன்ற மைதானங்களில் விரைவாக விக்கெட்டுகளை வீழ்த்துவது எளிதான ஒன்றுதான்.

- Advertisement -

இந்த மைதானத்தில் நாதன் லயனுக்கு எதிராக பேட்டிங் செய்வது மிகவும் கடினமாக இருந்தது. இருந்தாலும் அவ்வப்போது அவர் லைனை சேஞ்ச் செய்தால் மட்டுமே ரன்களை அடிக்க முடிந்தது. மற்றபடி ஸ்டம்ப் திசையை நோக்கி அவர் தொடர்ச்சியாக பந்து வீசியதால் ரன்கள் வர கடினமாக இருந்தது. அக்சர் பட்டேலுடன் இன்னும் சிறிது நேரம் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

இதையும் படிங்க : முரளிதரனை ஈஸியா சமாளிச்சுட்டேன் ஆனா அந்த இந்திய பவுலர் ரொம்ப கஷ்டப்படுத்திட்டாரு – கம்ரான் அக்மல் ஓப்பன்டாக்

தற்போது இந்த இன்னிங்ஸில் இருந்து இன்னும் என்னுடைய பேட்டிங்கில் சில ஷாட்டுகளை முன்னேற்ற வேண்டும் என்று தான் கருதுவதாக புஜாரா இந்த மைதானத்தின் தன்மை குறித்து பேசினார். இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 163 ரன்கள் மட்டுமே அடித்து இருந்தாலும் புஜாரா மட்டும் தனிநபராக 142 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 59 ரன்கள் குவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement