முரளிதரனை ஈஸியா சமாளிச்சுட்டேன் ஆனா அந்த இந்திய பவுலர் ரொம்ப கஷ்டப்படுத்திட்டாரு – கம்ரான் அக்மல் ஓப்பன்டாக்

Kamran
Advertisement

சர்வதேச கிரிக்கெட்டில் பேட்ஸ்மேன்களும் பவுலர்களும் சரிக்கு சமமாக மோதிக் கொண்டால் தான் அந்த போட்டியில் அனல் பறந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும். அந்த வகையில் பொதுவாகவே ஒவ்வொரு அணியிலும் இருக்கும் சில தரமான கிரிக்கெட் வீரர்களுக்கு எதிரணியில் இருக்கும் தரமான வீரர்கள் சவாலை கொடுப்பார்கள். குறிப்பாக இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கருக்கு பாகிஸ்தானை சேர்ந்த அதிரடி வேகப்பந்து வீச்சாளர் சோயப் அஃதர் மிகவும் சவாலாக இருந்தார். இது போன்ற தரமான வீரர்கள் மோதிக் கொள்ளும் போது சில தருணங்களில் மட்டுமே இருவரும் சரிக்கு சமமான போட்டியை வெளிப்படுத்தி தங்களது பலத்தை நிரூபித்து வெற்றிகரமாக செயல்படுவார்கள்.

Anderson

ஆனால் பல தருணங்களில் வல்லவனுக்கு வல்லவன் இருப்பான் என்பது போல் ஒரு தரமான வீரரை எதிரணியில் இருக்கும் மற்றொரு தரமான வீரர் சாய்ப்பது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக 2014 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் ஜேம்ஸ் ஆண்டர்சன் இளம் விராட் கோலியை பெட்டி பாம்பாக அடக்கியதை யாராலும் மறக்க முடியாது. ஆனால் அதற்கு சளைக்காமல் கடினமாக உழைத்து 2018 சுற்றுப்பயணத்தில் ஒருமுறை கூட அவுட்டாகாமல் ஆண்டர்சனுக்கு வரலாற்று சிறப்புமிக்க பதிலடி கொடுத்த விராட் கோலி சரிக்கு சமமான போட்டியை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

ரொம்ப கஷ்டப்படுத்திட்டாரு:
மற்றொரு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவின் மகத்தான வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் கிளன் மெக்ராத் எப்போதுமே சச்சினுக்கு மிகப்பெரிய சவாலை கொடுத்து வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். ஆனால் வரலாற்றில் பெரும்பாலான பேட்ஸ்மேன்களை தனது மாயாஜால சுழலால் சாய்த்து மகத்தான பெயரை பெற்ற ஷேன் வார்னேவை சச்சின் டெண்டுல்கர் பல தருணங்களில் அடித்து நொறுக்கி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார். அப்படி சவாலை கொடுப்பவர்களை ஓய்வு பெற்ற பின் நிறைய முன்னாள் வீரர்கள் பாராட்டுவது வழக்கமாகும்.

அந்த வகையில் 800 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்து உலக சாதனை படைத்த முத்தையா முரளிதரனை கூட எளிதாக எதிர்கொண்டேன் ஆனால் இந்தியாவின் ஹர்பஜன் சிங் தம்முடைய கேரியரில் மிகப் பெரிய சவாலாக இருந்ததாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்ஃமல் தெரிவித்துள்ளார். 2002 – 2017 வரை பாகிஸ்தானுக்காக ஓரளவு மிகச்சிறந்த விக்கெட் கீப்பராக விளையாடிய அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“எனது கேரியரில் ஹர்பஜன் சிங் நான் எதிர்கொள்ள மிகவும் சிரமத்தை ஏற்படுத்திய இந்திய பவுலர் ஆவார். குறிப்பாக இலங்கையின் முத்தையா முரளிதரனை நான் பல தருணங்களில் புரிந்து கொண்டு ஓரளவு சிறப்பாக எதிர்கொண்டுள்ளேன். ஆனால் எனது கேரியர் முழுவதும் ஹர்பஜன் சிங்கை எதிர்கொள்வதற்கு மிகவும் சிரமப்பட்டேன்” என்று கூறினார்.

Kamran

அவர் கூறுவது போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்களை எடுத்த முதல் இந்திய பவுலராக வரலாற்றுச் சாதனை படைத்த ஹர்பஜன் சிங் தனது கேரியரின் கடைசி காலங்களில் சுமாராக செயல்பட்டாலும் 2000 – 2011 வரையிலான காலகட்டங்களில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக உலகின் மகத்தான பேட்ஸ்மேன்களில் ஒருவராக போற்றப்படும் ரிக்கி பாண்டிங்கை பல தருணங்களில் சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய ஹர்பஜன் சிங் பெட்டி பாம்பாக அடக்கி வைத்திருந்தார் என்றால் மிகையாகாது.

- Advertisement -

அந்த வகையில் மொத்தமாக 417 டெஸ்ட் விக்கெட்டுகளை எடுத்த அவர் ஒருநாள் போட்டிகளில் 269 விக்கெட்களை சாய்த்து 2001 பார்டர் – கவாஸ்கர் கோப்பை, 2007 டி20 உலக கோப்பை, 2011 உலக கோப்பை ஆகிய தொடர்களில் இந்தியாவின் வெற்றியில் மிகவும் முக்கிய பங்காற்றினார். அதனால் அனில் கும்ப்ளே (619 விக்கெட்கள்) சாதனையை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவர் கடைசி காலங்களில் சுமாரான செயல்பாடுகளை வெளிப்படுத்தியதால் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

இதையும் படிங்க:IND vs AUS : இந்தியாவின் தடுமாற்றத்திற்கு உங்க ஆணவமே காரணம், ரோஹித் சர்மாவை விளாசிய ஹெய்டன், மஞ்ரேக்கர் – காரணம் இதோ

அதை தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடி வந்த அவர் கடந்த வருடத்துடன் ஒட்டுமொத்தமாக ஓய்வு பெற்று தற்போது வர்ணையாளராகவும் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement