IND vs AUS : இந்தியாவின் தடுமாற்றத்திற்கு உங்க ஆணவமே காரணம், ரோஹித் சர்மாவை விளாசிய ஹெய்டன், மஞ்ரேக்கர் – காரணம் இதோ

Hayden Sanjay Manjrekar
- Advertisement -

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெறுவதற்கு மார்ச் 1ஆம் தேதியன்று இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கியது. ஆனால் முதலிரண்டு போட்டிகளில் டாஸில் தோற்று ஆஸ்திரேலியா வெளிப்படுத்திய பேட்டிங்கை இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா வெளிப்படுத்தியது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்தது.

Umesh-Yadav

- Advertisement -

ஏனெனில் என்ன தான் பிட்ச் முதல் மணி நேரத்திலேயே சுழல துவங்கினாலும் ஆரம்பத்திலேயே முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழுந்து தடுமாறிய இந்தியாவுக்கு அடுத்த வந்த வீரர்களும் நிதானத்தை வெளிப்படுத்தாமல் வந்த வாக்கிலேயே அவுட்டானார்கள். அதனால் வெறும் 109 ரன்களுக்கு சுருண்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் மேத்தியூ குனேமான் 5 விக்கெட்கள் எடுத்தார். அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் ஒரு கட்டத்தில் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்தது.

ரோஹித்தின் ஆணவம்:
ஆனால் 2வது நாளில் அனலாக செயல்பட்ட இந்தியா மேற்கொண்டு 11 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளை சாய்த்து 197 ரன்களுக்கு ஆஸ்திரேலியாவை சுருட்டியது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகளும் அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் தலா 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர். அதை தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடி வரும் இந்தியா மீண்டும் ரோகித் சர்மா 12, கில் 5, விராட் கோலி 13 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 55/3 என ஆரம்பத்திலேயே தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இந்தியாவின் இந்த தடுமாற்றத்திற்கு டாஸ் வென்று பொறுப்புடன் பெரிய ரன்களை குவிக்க வேண்டிய ரோகித் சர்மாவின் சுமாரான பேட்டிங் தான் காரணம் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மேத்தியூ ஹெய்டன் விமர்சித்துள்ளார். மேலும் முதல் போட்டியில் சதமடித்து முதல் 2 போட்டிகளில் வென்று ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றி விட்டதாலும் வார்னர், கமின்ஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் காயத்தால் வெளியேறி விட்டதாலும் ஆஸ்திரேலியா என்ன செய்து விடப்போகிறது என்று லேசான ஆணவத்தில் அவர் செயல்படுவதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா சில மறக்க வேண்டிய ஷாட்களை அடித்தார். ஆனால் கேப்டனாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் முன்னின்று பேட்டிங் செய்ய வேண்டும். எனவே ஒருவேளை நாம் சோம்பேறித்தனமாக நடந்து கொண்டோமோ அல்லது பயந்து விட்டோமா என்று பெவிலியன் திரும்பியதும் தாம் அவுட்டானா ஷாட்டை பார்த்த பின் ரோகித் சர்மா வருந்துவார்”

Hayden

“ஆனால் ஆஸ்திரேலியா தடுமாறும் இந்த வேளையில் டாஸ் வென்ற பின் நீங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஏனெனில் ஆஸ்திரேலிய அணியில் அவர்களது கேப்டன் இல்லை. டேவிட் வார்னர் போன்ற முக்கிய வீரர் இல்லை. டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பும் அவர்களுக்கு சந்தேகமாக உள்ளது. ஆனால் அவை அனைத்தும் அவர்களுக்கு (இந்தியா) சற்று ஆணவத்தை ஏற்படுத்தி விட்டது என்று நினைக்கிறேன்” என கூறினார். அப்போது அவருடன் வர்ணனை செய்த சஞ்சய் மஞ்ரேக்கர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரோஹித் சர்மா விளையாடிய விதத்தில் நிறைய வித்தியாசங்கள் காணப்பட்டது. அவர் 2 முறை அவுட்டாகியும் ரிவ்யூ எடுக்காததால் தப்பித்தார். ஆனால் 3வது முறை அவுட்டானத்தில் முதலிரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மமதையில் ரோஹித் சர்மா செயல்பட்டது தெரிந்தது. அவர் முதல் பந்திலிருந்தே சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை. அங்கே சில ஆணவம் தெரிந்தது” என்று கூறினார். அதற்கு பதிலளித்து ஹெய்டன் மேலும் பேசியது பின்வருமாறு.

இதையும் படிங்க:IND vs AUS : இந்தநேரம் பார்த்து அவர் இல்லாம போயிட்டாரே. ரசிகர்களை புலம்பவைத்த ரிஷப் பண்ட் – ஏன் தெரியுமா?

“ஆம் அவர்களிடம் நாங்கள் இந்திய அணி என்பதால் இன்று அனைத்தையும் மாற்ற போகிறோம். இது எங்களுடைய கால சூழ்நிலைகள். இங்கு டாஸ் வென்றுள்ளோம் என்பதால் இந்த நாளில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியும் பெறுவோம் என்ற எண்ணம் காணப்படுகிறது” என்று கூறினார்.

Advertisement