IND vs AUS : இந்தநேரம் பார்த்து அவர் இல்லாம போயிட்டாரே. ரசிகர்களை புலம்பவைத்த ரிஷப் பண்ட் – ஏன் தெரியுமா?

Pant-2
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது இந்திய அணிக்கு எதிராக தற்போது நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் இரண்டு போட்டியிலும் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றியை பெற்ற இந்திய அணியானது இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கும் வேளையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது மார்ச் ஒன்றாம் தேதி நேற்று இந்தூர் மைதானத்தில் தொடங்கியது.

IND vs AUS

- Advertisement -

இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 109 ரன்கள் மட்டுமே குவிக்க அடுத்ததாக தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 197 ரன்கள் குவித்தது. இதன் காரணமாக இந்திய அணி தற்போது 88 ரன்கள் பின் தங்கியுள்ளது.

அதனைத்தொடர்ந்து தற்போது இந்த தொடரில் முதன்முறையாக 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் தங்களது இரண்டாவது இன்னிசை விளையாடி வருகிறது. இந்த மூன்றாவது போட்டியில் டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் வீரர்கள் 9 பேருமே சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆட்டம் இழந்தனர். அதேபோன்று தற்போது நடைபெற்று வரும் இரண்டாவது இன்னிங்சிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக தடுமாற்றத்தை சந்தித்து வருகின்றது.

pant 1

இதற்கு காரணம் யாதெனில் : இந்தூர் மைதானம் முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சாளர்களுக்கு கை கொடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. எனவே இந்திய வீரர்கள் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர்.

- Advertisement -

இதனால் தற்போது இந்திய அணியின் இந்த நிலைமையை கண்ட இந்திய ரசிகர்கள் இந்நேரம் ரிஷப் பண்ட் மட்டும் அணியில் இருந்திருந்தால் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அவர்களுக்கு எதிராக ஆதிக்கத்தை செலுத்தி போட்டியை ஒரு மணி நேரத்திலேயே இந்திய அணியின் பக்கம் திருப்பி இருப்பார் என்றும் இதுபோன்ற ஆடுகளங்களில் விரைவாக ரன் குவிக்க ஒரு வீரர் தேவை அது ரிஷப் பண்ட்டால் தான் முடியும் என்று தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : ஸ்பின்னுக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேன்னு அவர என்னால ஏத்துக்க முடியல – இளம் இந்திய வீரர் மீது இயன் சேப்பல் அதிருப்தி

அதேபோன்று ஆஸ்திரேலிய மண்ணிலேயே அட்டகாசமான அதிரடி வெளிப்படுத்திய அவர் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இந்திய மைதானங்களில் அடிக்கும் பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் மிஸ் செய்கிறோம் என்று சமூகவலைதளத்தில் தங்களது வருத்தங்களை பகிர்ந்து வருகின்றனர். கடந்து டிசம்பர் மாதம் நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கி தற்போது சிகிச்சை பெற்று வரும் ரிஷப் பண்டுக்கு பதிலாக கே.எஸ் பரத் இந்த தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement