ஸ்பின்னுக்கு எதிராக சிறந்த பேட்ஸ்மேன்னு அவர என்னால ஏத்துக்க முடியல – இளம் இந்திய வீரர் மீது இயன் சேப்பல் அதிருப்தி

Ian Chappell
- Advertisement -

சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியாவை அடுத்தடுத்து தோற்கடித்த இந்தியா கோப்பையை கைப்பற்றி ஜூலை மாதம் லண்டனில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளது. அந்த பைனலுக்கு அதிகாரப்பூர்வமாக தகுதி பெற இன்னும் ஒரு வெற்றி தேவைப்படும் நிலையில் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் துவங்கிய 3வது போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் தரமாக பந்து வீசிய ஆஸ்திரேலியாவுக்கு பதில் சொல்ல முடியாமல் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து வெறும் 109 ரன்களுக்குச் சுருண்டது.

Umesh-Yadav

- Advertisement -

அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் முதல் நாள் முடிவில் 156/4 என நல்ல நிலையில் இருந்தாலும் 2வது நாளில் பீட்டர் ஹன்ஸ்கோப் 19, அலெக்ஸ் கேரி 3, கேமரூன் க்ரீன் 21 என முக்கிய வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து 197 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளையும் உமேஷ் யாதவ் மற்றும் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

ஏத்துக்க முடியல:
அதை தொடர்ந்து 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்தியா விளையாடி வருகிறது. முன்னதாக சுழலுக்கு சாதகமான மைதானங்களை கொண்ட இந்த தொடரில் விராட் கோலி, புஜாரா உள்ளிட்ட சீனியர்களுடன் சேர்ந்து கொண்டு இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் திணறுவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்து வருகிறது. ஏனெனில் கடந்த 2021ஆம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே சதமடித்து நம்பிக்கையை ஏற்படுத்திய அவர் அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளில் அவுட்டாவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

Shreyas-Iyer

இருப்பினும் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகரமாக செயல்பட்ட அவர் 2022ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்களை எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்தார். அப்படி பலவீனத்தையும் மிஞ்சி சாதனை படைத்த அவர் பொதுவாக சுழல் பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் இந்திய வீரராக அறியப்படுகிறார். ஆனால் இந்தூர் போட்டியில் டக் அவுட்டாகி இந்த தொடரில் இது வரை மொத்தமாக 16 ரன்கள் மட்டுமே எடுத்துள்ள ஸ்ரேயாஸ் ஐயரை தரமான சூழல் பந்து வீச்சை எதிர்கொள்ளும் சிறந்த பேட்ஸ்மேன் என்று தம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இயன் சேப்பல் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “புஜாரா இப்போட்டி மட்டுமல்லாது இந்த தொடர் முழுவதிலும் தடுமாற்றமாக செயல்பட்டு வருகிறார். மேலும் ஸ்ரேயாஸ் ஐயர் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர் என்று நான் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து கேட்டு வருகிறேன். ஆனால் அதை இதுவரை நான் பார்க்கவில்லை. அதனால் அவரை சுழல் பந்து வீச்சை திறம்பட எதிர்கொள்ளும் சிறந்த வீரர் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்ன கேட்டால் அவர் சுழல் பந்து வீச்சுக்கு எதிராக அவசரப்படுபவராக இருக்கிறார்”

Ian Chappell Ashwin

“அவரை போலவே சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் வீரர்கள் என்ற பெயரைக் கொண்ட மேலும் சில இந்திய வீரர்கள் இதுவரை என்னை கவரவில்லை. அதை பயன்படுத்தி இப்போட்டியில் ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஸ்பின்னர்கள் மிகவும் துல்லியமாகப் பந்து வீசினார்கள். ஆனால் இந்த தொடரில் ஆஸ்திரேலியா வெளிப்படுத்திய பேட்டிங்கை இப்போட்டியில் இந்தியா வெளிப்படுத்தியது”

இதையும் படிங்க:முதல் நாளில் கெத்தாக இருந்தாலும் இரண்டாம் நாளில் 11 ரன்களுக்குள் ஆஸி அணியை சுருட்டிய வீசிய இந்திய அணி

“கவாஜா, லபுஸ்ஷேன் ஆகியோர் நல்ல ரன்களை எடுத்தனர். மறுபுறம் முதல் போட்டியில் அடித்த சதத்தை தவிர்த்து ரோகித் சர்மாவிடம் ரன்கள் வரவில்லை. எனவே இந்தியாவை தற்சமயத்தில் பின்னுக்கு தள்ளியுள்ள ஆஸ்திரேலியா இப்போட்டியில் முன்னிலை பெறுவதற்கு தகுதியான செயல்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

Advertisement