முதல் நாளில் கெத்தாக இருந்தாலும் இரண்டாம் நாளில் 11 ரன்களுக்குள் ஆஸி அணியை சுருட்டிய வீசிய இந்திய அணி

Umesh-Yadav
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது மார்ச் ஒன்றாம் தேதி நேற்று இந்தூர் மைதானத்தில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 109 ரன்கள் மட்டுமே குவித்தது. இந்திய அணி சார்பாக விராட் கோலி 22 ரன்களையும், சுப்மன் கில் 21 ரன்களையும் குவித்தனர்.

Pujara

- Advertisement -

அதன் பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது நேற்று முதல்நாள் ஆட்ட நேர முடிவில் இந்த தொடரில் முதல் முறையாக இந்திய அணிக்கு எதிராக தங்களது சிறப்பான ஆதிக்கத்தை செலுத்தி 4 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் அடித்து 47 ரன்கள் முன்னிலை பெற்றிந்தது. இந்நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த இரண்டாம் நாள் ஆட்டம் துவங்கியதும் ஆஸ்திரேலியா அணி பெரிய ரன் குவிப்பினை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை 19 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வீழ்த்தினார். அந்த ஐந்தாவது விக்கெட் விழுந்ததுமே இந்திய அணி அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்தடுத்த விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியது.

Umesh Yadav 1

குறிப்பாக ஆஸ்திரேலிய அணி 185 ரன்கள் வரை 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்திருந்த வேளையில் 186-ஆவது ரன்னில் ஐந்தாவது விக்கெட்டாக அஸ்வின் பீட்டர் ஹேண்ட்ஸகோம்பை வீழ்த்தினார். அதனை தொடர்ந்து அணியின் எண்ணிக்கை 188-ஆக இருந்தபோது கேமரூன் கிரீனை உமேஷ் யாதவ் வீழ்த்தினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணியின் எண்ணிக்கை 192-ஆக இருந்தபோது மிச்சல் ஸ்டார்க்கை உமேஷ் யாதவ் ஆட்டம் இழக்க வைத்தார்.

- Advertisement -

அதனை தொடர்ந்து 196 ரன்கள் இருக்கும்போது அலெக்ஸ் கேரியை அஸ்வின் ஆட்டம் இழக்க வைத்து வெளியேற்றினார். அதன் பின்னர் 197 ரன்களில் இருந்தபோது டாட் முற்பியை உமேஷ் யாதவ் வெளியேற்றினார். அதன் பிறகு அணியின் எண்ணிக்கை 197-ல் இருக்கும் போது நேதன் லையனை அஸ்வின் வீழ்த்தினார். இப்படி அஸ்வின் மற்றும் உமேஷ் யாதவ் ஆகியோரது மிகச் சிறப்பான செயல்பாடு காரணமாக இந்திய அணி கடைசி 11 ரன்களில் ஆறு விக்கெட்டை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியை இறுதியில் 197 ரன்களுக்குள்ளேயே சுருட்டியது.

இதையும் படிங்க : வீடியோ : மிட்சேல் ஸ்டார்க் ஸ்டம்பை பறக்க விட்ட உமேஷ் யாதவ் – விக்கெட்களில் சதமடித்து புதிய சாதனை, போராடும் இந்தியா

முதல்நாள் ஆட்ட நேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வலுவான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா அணியை இன்று இரண்டாம் நாள் 11 ரன்களுக்குள் இந்திய அணி கடைசி 6 விக்கட்டுகளையும் எடுத்து சுருட்டி வீசியுள்ளது என்றே கூறலாம். அதன்பிறகு தற்போது 88 ரன்கள் பின்தங்கிய நிலையில் இந்திய அணி தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது. இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் குவித்து விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement