வீடியோ : மிட்சேல் ஸ்டார்க் ஸ்டம்பை பறக்க விட்ட உமேஷ் யாதவ் – விக்கெட்களில் சதமடித்து புதிய சாதனை, போராடும் இந்தியா

- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலிரண்டு போட்டிகளில் படுதோல்வியை சந்தித்து கோப்பையை வெல்லும் வாய்ப்பை கோட்டை விட்ட ஆஸ்திரேலியா குறைந்தபட்சம் ஒயிட் வாஷ் தோல்வியை தவிர்த்து தங்களது நம்பர் ஒன் இடத்தை காப்பாற்றிக் கொள்ளும் முனைப்புடன் மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் துவங்கிய முதல் போட்டியில் களமிறங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியாவை முதல் மணி நேரத்திலேயே சுழலத் துவங்கிய பிட்ச்சில் தரமாக பந்து வீசி மடக்கிப்பிடித்த ஆஸ்திரேலியா வெறும் 109 ரன்களுக்கு சுருட்டியது. அதிகபட்சமாக விராட் கோலி 22 ரன்கள் எடுக்க ஆஸ்திரேலியா சார்பில் அதிகபட்சமாக மேத்தியூ குனேமான் 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.

அதை தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியாவுக்கு ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகளை எடுத்து சவாலை கொடுத்த போதிலும் உஸ்மான் கவாஜா 60, மார்னஸ் லபுஸ்ஷேன் 31 என இதர முக்கிய வீரர்களின் ரன் குவிப்பால் முதல் நாள் முடிவில் 156/4 ரன்களுடன் 47 ரன்கள் முன்னிலை பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுத்தது. அதனால் இந்திய ரசிகர்கள் கவலையடைந்தாலும் இன்று துவங்கிய 2வது நாள் ஆட்டத்தில் பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்பை 19 ரன்களில் அஷ்வின் காலி செய்த நிலையில் மறுபுறம் சவாலை கொடுத்த கேமரூன் கிரீனை 21 ரன்களில் உமேஷ் யாதவ் எல்பிடபிள்யூ முறையில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

பறந்த ஸ்டம்ப்:
அடுத்து வந்த ஆஸ்திரேலியாவின் நம்பிக்கை நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் மிட்சேல் ஸ்டார்க்கை க்ளீன் போல்ட்டாக்கிய உமேஷ் யாதவ் ஆஃப் ஸ்டம்ப்பை பறக்க விட்டது ரசிகர்களுக்கு கண்கொள்ளாத காட்சியாக அமைந்தது. ஏனெனில் பொதுவாக மிட்சேல் ஸ்டார்க் தான் உலகின் பல தரமான பேட்ஸ்மேன்களின் ஸ்டம்புகளை இது போல் பறக்க விட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை தனது அதிரடியான வேகத்தால் தெறிக்க விட்ட உமேஷ் யாதவ் கடைசி நேரத்தில் டோட் முர்பியின் ஸ்டம்ப்களையும் பறக்க விட்டு டக் அவுட்டாக்கினார்.

கூடவே அலெக்ஸ் கேரி 3, நேதன் லயன் 5 என இதர வீரர்களை அஷ்வின் சொற்ப ரன்களில் அவுட்டாக்கியதால் ஒரு கட்டத்தில் 186/4 என்ற நல்ல நிலையில் இருந்த ஆஸ்திரேலியா 197 ரன்களுக்கு சுருண்டது. குறிப்பாக கடைசி 6 விக்கெட்டுகளை அடுத்த 11 ரன்களுக்குள் சுருட்டிய இந்தியா சார்பில் அதிகபட்சமாக உமேஷ் யாதவ் மற்றும் அஷ்வின் தலா 3 விக்கட்டுகளும் ரவீந்திர ஜடேஜா ஏற்கனவே 4 விக்கெட்களும் எடுத்தனர்.

- Advertisement -

அதனால் குறைந்தது 100 ரன்களுக்கு மேல் முன்னிலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலியா 88 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. அதை தொடர்ந்து இந்தியா விளையாடி வரும் நிலையில் இப்போட்டியில் 3 விக்கெட்டுகளை எடுத்த உமேஷ் யாதவ் இந்திய மண்ணில் 100 விக்கெட்டுகளை எடுத்த 5வது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற என்ற சாதனையை கபில் தேவ், ஜவகல் ஸ்ரீநாத், ஜாகிர் கான் மற்றும் இசாந்த் சர்மா ஆகியோருக்கு பின் படைத்துள்ளார்.

மொத்தமாக இதுவரை 168 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் அதிரடியாக 17 (13) ரன்கள் குவித்து இந்தியாவை 100 ரன்களை தாண்ட வைத்து முக்கிய அவமானத்திலிருந்து காப்பாற்றினார். குறிப்பாக 2 சிக்ஸரை அடித்து மொத்தமாக தனது கேரியரில் 24 சிக்ஸர்களை பறக்க விட்டுள்ள அவர் விராட் கோலியின் (24) சிக்ஸர் சாதனையை சமன் செய்து அசத்தினர். தற்போது பந்து வீச்சிலும் இந்தியா தடுமாறிய போது கடைசி நேரத்தில் அதிரடியாக செயல்பட்ட அவர் இந்தியாவை போராடினால் வெற்றி பெறலாம் என்ற நல்ல நிலைமைக்கு கொண்டு வந்துள்ளார் என்றே கூறலாம்.

இதையும் படிங்க: வீடியோ : அடுத்தடுத்த ரிவியூக்களை வீணடித்த ஜடேஜா – கடுப்பில் பிரபல ஹிந்தி கெட்ட வார்த்தையால் திட்டிய ரோஹித் சர்மா

முன்னதாக கடந்த சில தினங்களுக்கு முன் தனது தந்தை இறப்பிற்காக அணியிலிருந்து விலகி தனது கடமையை முடித்து விட்டு மீண்டும் இணைந்துள்ள அவர் இந்தியாவுக்காக சிறப்பாக செயல்பட்டு வருவது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது.

Advertisement