- Advertisement -
இந்திய கிரிக்கெட்

சோகத்தில் இருப்பவருக்கு மேலும் சோதனை! மொய்ன் அலி போல விசா பிரச்சனையில் சிக்கிய நட்சத்திர இந்திய வீரர்

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஐபிஎல் 2022 தொடர் கோலாகலமாக துவங்கி வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் துவங்கி ஒரு வாரம் கடந்த நிலையிலும் தங்கள் நாட்டுக்காக விளையாடிய டேவிட் வார்னர், ஜானி பேர்ஸ்ட்டோ போன்ற நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் இன்னும் அவர்களின் அணிக்காக விளையாட முடியவில்லை. தற்போது அந்தந்த அணிகளில் இணைந்துள்ள அவர்கள் கட்டுப்பாட்டு விதிமுறைகளின்படி தனிமைப் படுத்திக் கொண்டிருப்பதால் இன்னும் ஒரு சில நாட்களில் களத்தில் விளையாட உள்ளனர்.

மொய்ன் அலியின் விசா பிரச்சனை:
அதிலும் நாட்டுக்காக விளையாடாத போதிலும் இங்கிலாந்தைச் சேர்ந்த நட்சத்திர வீரர் மொய்ன் அலி ஐபிஎல் தொடரில் இணைவதற்கு விசா ஒரு பிரச்சனையாக இருந்தது பல ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக ஒரு சில வாரங்களுக்கு முன்பாகவே விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்த அவருக்கு அது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக விசா வழங்காமல் இழுக்கடித்தனர். இதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவரால் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் பங்கேற்க முடியாமல் போனது.

- Advertisement -

அதை தொடர்ந்து ஒருசில போராட்டங்களை கடந்த அவர் ஒரு வழியாக விசா பெற்று இந்தியா வந்தடைந்து ஐபிஎல் தொடரில் சென்னை அணியுடன் இணைந்தார். முதல் போட்டியில் அவர் இல்லாதது சென்னைக்கு பெரிய பின்னடைவாக இருந்த நிலையில் அவர் வந்த பின் விளையாடிய 2 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்து மொத்தம் 3 தோல்விகளுடன் தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் தள்ளாடி வருகிறது.

கழற்றிவிடப்பட்ட புஜாரா:
இந்நிலையில் மொயீன் அலிக்கு ஏற்பட்ட விசா பிரச்சினை இந்தியாவைச் சேர்ந்த நட்சத்திர அனுபவ வீரர் செடேஸ்வர் புஜாராவுக்கும் ஏற்பட்டுள்ளது. ஆம் கடந்த பல வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியில் விளையாடி வந்த அவர் தனது அபார திறமையால் கடந்த காலங்களில் இந்தியாவிற்கு தனி ஒருவனாக பல சரித்திர வெற்றியைத் தேடிக் கொடுத்தார். சொல்லப்போனால் ஜாம்பவான் ராகுல் டிராவிட் ஓய்வுக்குப் பின் அவரின் இடத்தில் அப்படியே அவரைப்போலவே களத்தில் நங்கூரமாக நின்று விளையாடும் யுக்தியை கையாண்ட அவர் எதிரணி பவுலர்களை களைப்படையச் செய்து ரன்களைக் குவிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார்.

- Advertisement -

அப்படி கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் அணியின் மிடில் ஆர்டரில் தூணாக செயல்பட்டு வந்த அவர் கடந்த சில வருடங்களாக பெரிய அளவில் ரன்கள் குவிக்க முடியாமல் தனது பார்ம்மை இழந்தார். அதிலும் கடந்த 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வந்த அவரை சமீபத்தில் இலங்கைக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது. மேலும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 35 வயதை கடந்த அவருக்கு பதிலாக இனி இளம் வீரர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்படும் என்றும் இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

விசா கிடைக்காத புஜாரா:
ஏற்கனவே டெஸ்ட் அணியில் விளையாடிய டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்த அவருக்கு டெஸ்ட் அணியில் இடமில்லை என்ற நிலையில் சமீபத்தில் நடந்த ரஞ்சி கோப்பையிலும் சொதப்பிய அவருக்கு இனி இந்திய அணியில் வாய்ப்பே கிடையாது என்ற நிலை உருவாகியுள்ளது. அத்துடன் சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடருக்கான ஏலத்திலும் அவரை ஏற்கனவே வாங்கியிருந்த சென்னை உட்பட எந்த அணியும் வாங்கவில்லை.

- Advertisement -

எனவே இந்திய அணிக்கு திரும்புவதற்கான முயற்சியில் வேறு வழியில்லாமல் திண்டாடிய அவர் இங்கிலாந்தில் நடக்கும் பிரபல கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்து கொண்டார். குறிப்பாக இந்த வருட கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் சசெக்ஸ் அணிக்காக முதல் 6 போட்டிகளில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்ட அவர் அதன்பின் அடுத்த ஒரு சில மாதங்களுக்கு பின் நடைபெறும் ராயல் லண்டன் கப் உள்ளிட்ட எஞ்சிய அனைத்து கவுண்டி போட்டிகளிலும் விளையாட உள்ளார். அதிலும் வரும் ஏப்ரல் 7ஆம் தேதி சசெக்ஸ் அணி தனது முதல் போட்டியில் நாட்டிங்காம்ஷைர் அணிக்கு எதிராக விளையாட உள்ளது.

இதையும் படிங்க : டு பிளேஸிஸ் வந்தாலும் ஒன்னும் மாறப்போவதில்லை ! ஆர்சிபி ரசிகர்களை கடுப்பாக்கும் வகையில் பேசும் பாக் வீரர்

அதில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்வதற்கான விசாவுக்கு விண்ணப்பம் செய்திருந்த புஜாராவுக்கு இன்னும் விசா கிடைக்கவில்லை. ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடைபெற்று வருவதால் இந்த தாமதம் என தெரிய வருகிறது. இருப்பினும் 2-வது போட்டிக்கு முன்பாக அவர் சசெக்ஸ் அணியுடன் இணைவார் என அந்த அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே இந்திய அணியில் இடத்தை இழந்து பிசிசிஐ வருடாந்திர மத்திய சம்பள ஒப்பந்தத்தில் கிரேட் ஏ பிளஸ் பிரிவிலிருந்து பி பிரிவுக்கு தள்ளப்பட்டு நிறைய சரிவுகளை சந்தித்துள்ளதால் சோகத்தில் இருக்கும் புஜாராவுக்கு இது மேலும் ஒரு சோதனையாக அமைந்துள்ளது.

- Advertisement -
Published by