டு பிளேஸிஸ் வந்தாலும் ஒன்னும் மாறப்போவதில்லை ! ஆர்சிபி ரசிகர்களை கடுப்பாக்கும் வகையில் பேசும் பாக் வீரர்

Advertisement

மிகவும் திரில்லாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை ஒருமுறை கூட கோப்பையை வெல்ல டெல்லி, பஞ்சாப் போன்ற அணிகள் முதல்முறையாக கோப்பையை வெல்வதற்காக தீவிரமாக போராடி வருகின்றன. அதிலும் குறிப்பாக ஆரம்பம் முதல் கடந்த வருடம் வரை நீண்ட காலமாக முதல் ஐபிஎல் கோப்பையை தேடித்தேடி தோல்வி அடைந்த ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு இந்த வருடம் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸ் தலைமையில் புத்துணர்ச்சியுடன் விளையாடி வருகிறது.

faf du plessis RCB

ஏனெனில் கடந்த 2008 முதல் ராகுல் டிராவிட், அனில் கும்ப்ளே, டேனியல் வெட்டோரி போன்றவர்களின் தலைமையில் எவ்வளவோ போராடியும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. அதிலும் 2013 – 2021 வரை அந்த அணிக்காக மலைபோல ரன்களை குவித்து முழுமூச்சுடன் போராடிய முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி அந்த முயற்சியில் கடைசிவரை தோல்வி அடைந்ததால் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி ஓய்ந்து போய் ஒரு வழியாக கடந்த வருடம் கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

- Advertisement -

நம்பிக்கையுடன் ஆர்சிபி ரசிகர்கள்:
தற்போது நீண்ட வருடங்களுக்கு பின் மீண்டும் ஒரு சாதாரண வீரராக விளையாடத் துவங்கியுள்ள விராட் கோலி புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள டு பிளேஸிஸ்க்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அந்த வகையில் டு பிளேஸிஸ் தலைமையில் முதல் முறையாக பஞ்சாப் அணிக்கு எதிராக களமிறங்கிய பெங்களூரு அபாரமாக செயல்பட்டு 205 ரன்கள் குவித்த போதிலும் பரிதாப தோல்வி அடைந்தது.

Virat Faf Du Plessis

இருப்பினும் அதற்கு அசராமல் கொல்கத்தாவுக்கு எதிரான 2வது போட்டியில் மீண்டெழுந்த அந்த அணி அபாரமாக செயல்பட்டு இந்த வருடத்தின் முதல் வெற்றியை பதிவு செய்து வெற்றி பாதைக்கு திரும்பியது. இதே சமயத்தில் ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை, சென்னை உள்ளிட்ட அணிகள் இதுவரை ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் திண்டாடி வருகிறது. எனவே மும்பை, சென்னை போன்ற அணிகளை காட்டிலும் வெற்றிகரமான தொடக்கத்தை பெற்றுள்ள பெங்களூரு இந்த வருடம் கோப்பையை வெல்லும் என அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர்.

- Advertisement -

ஒன்றும் மாறாது:
இந்நிலையில் புதிய கேப்டன் டு பிளசிஸ் வந்தாலும் பெங்களூரு அணியில் எதுவும் புதிதாக மாறப்போவதில்லை என்று பாகிஸ்தானைச் சேர்ந்த முன்னாள் நட்சத்திர வீரர் சோயப் அக்தர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகியுள்ளார். அதை டு பிளசிஸ் ஏற்றுள்ள நிலையில் அவர் தனது ஸ்டைலில் பெங்களூரு அணியை வழிநடத்துவார். இருப்பினும் நான் டு பிளேஸியின் பெரிய ரசிகன் கிடையாது. ஏனெனில் அவரின் கேப்டன்ஷிப்பில் எதையும் நான் ஸ்பெஷலாக பார்க்கவில்லை” என கூறினார்.

அவரின் இந்தக் கருத்துக்கள் நம்பிக்கையோடு இருக்கும் பெங்களூர் அணி ரசிகர்களைக் கடுப்பாக வைத்துள்ளது. ஏனெனில் ஐபிஎல் தொடரில் இதற்கு முன் கேப்டன்ஷிப் செய்த அனுபவம் டு பிளேஸிஸ்க்கு இல்லை என்றாலும் தென் ஆப்பிரிக்காவுக்காக அதிலும் 3 வகையான கிரிக்கெட்டிலும் கேப்டன்ஷிப் செய்த தரமான அனுபவத்தை கொண்டவர். அப்படிப்பட்ட நிலையில் அவரிடம் ஸ்பெஷலாக எதுவும் இல்லை என சோயப் அக்தர் கூறுவது பல பெங்களூரு ரசிகர்களை அதிருப்தியடைய வைத்துள்ளது.

- Advertisement -

கப் வாங்கட்டும் பாப்போம்:
“டு பிளேஸிஸ் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பில் நிரூபிக்க வேண்டிய நிலையில் உள்ளார். இதற்கு முன் அவர் வழி நடத்திய போட்டிகளில் அவரின் கேப்டன்ஷிப் எப்போதும் கூர்மையாக இருந்ததில்லை. அப்படிப்பட்ட அவரிடம் பெங்களூரு போன்ற மிகப்பெரிய அணியை வழிநடத்தும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவே அந்தப் பொறுப்பில் பெங்களூர் அணி நிர்வாகம் மற்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அவரால் பூர்த்தி செய்ய முடியுமா என பொருத்திருந்து பார்க்கலாம்” என இது பற்றி சோயப் அக்தர் மேலும் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தொடர் தோல்வியின் பழியை இல்லாத அவர்மீது போட்டு எஸ்கேப் ஆகாதீங்க! சி.எஸ்.கேவை வெளுக்கும் இர்பான் பதான்

அவர் கூறுவது போல ஐபிஎல் தொடரில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களை கொண்டுள்ள ஒரு அணியாக திகழும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஒவ்வொரு ஐபிஎல் தொடர் துவங்கும் போதும் கண்டிப்பாக கோப்பையை வெல்லும் என்ற அதிகப்படியான எதிர்பார்ப்பு அந்த அணி ரசிகர்களிடம் காணப்படுகிறது. எனவே அந்த எதிர்பார்ப்பை டு பிளேஸிஸ் பூர்த்தி செய்வாரா என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement