தொடர் தோல்வியின் பழியை இல்லாத அவர்மீது போட்டு எஸ்கேப் ஆகாதீங்க! சி.எஸ்.கேவை வெளுக்கும் இர்பான் பதான்

Irfan-pathan
- Advertisement -

மும்பை நகரில் மிகுந்த விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமான முதல் வாரத்தை கடந்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக விளையாடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை பெற்று தடுமாறி நிற்கிறது. தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் பரிதவிக்கும் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமெனில் அடுத்த போட்டியில் நிச்சயம் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

இதுவரை பங்கேற்ற போட்டிகளில் படுமோசமான பேட்டிங் அந்த அணியின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக கொல்கத்தா மற்றும் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக அந்த அணி பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் ரன்களை குவிக்க தவறியதால் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

- Advertisement -

மோசமான பேட்டிங், பவுலிங்:
அதிலும் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியிலும் பஞ்சாப்க்கு எதிரான போட்டியிலும் அந்த அணியின் தொடக்க வீரர்களும் டாப் ஆர்டர் வீரர்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்கள். குறிப்பாக கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் 62/5 என திண்டாடிய அந்த அணி பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் 36/5 என டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் 100 ரன்களைக் கூட தொடுமா என்ற பரிதாபத்திற்கு உள்ளானது.

நல்ல வேளையாக அந்தத் தருணங்களில் அனுபவ வீரர் எம்எஸ் தோனி 38 பந்துகளில் 50* ரன்களும் இளம் வீரர் சிவம் துபே 30 பந்துகளில் அதிரடியாக 57 ரன்களும் குவித்து மானத்தை காப்பாற்றியதால் 100 ரன்களை தொட்ட சென்னை அடுத்தடுத்து சந்திக்க இருந்த எக்ஸ்ட்ரா அவமானங்களை தவிர்த்தது. சரி அந்த அணியின் பேட்டிங் மட்டும் பிரச்சனையா என்று பார்த்தால் லக்னோவுக்கு எதிரான போட்டியில் அசத்திய சென்னை பேட்ஸ்மேன்கள் கஷ்டப்பட்டு 210 ரன்களை சேர்த்தனர்.

- Advertisement -

ஆனால் அதை வாரி வழங்கும் வள்ளல் பரம்பரையாக மாறிய சென்னை பவுலர்கள் படுமோசமாக பந்துவீசி 211 ரன்களை கொடுத்ததுடன் நல்ல வெற்றியையும் எதிரணிக்கு பரிசளித்தனர். அதிலிருந்து அந்த அணியின் பந்துவீச்சும் மோசமாக உள்ளது தெரிய வந்தது. இத்தனைக்கும் நடப்பு சாம்பியன் என்ற பெயரோடு விளையாடும் அந்த அணி இப்படி தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சொதப்புவதால் எப்படி கோப்பையை தக்க வைக்கப் போகிறது என்ற கவலை சென்னை ரசிகர்களிடம் காணப்படுகிறது.

தீபக் சஹரை இழுக்காதீங்க:
இந்த சீசனில் சென்னைக்கு இதுவரை எதுவுமே சரியாக அமையவில்லை என்றே கூறலாம். அதிலும் கடந்த வருடங்களில் அபாரமாக செயல்பட்டதால் 14 கோடிக்கு வாங்கப்பட்ட அந்த அணியின் முக்கிய வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹர் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக துரதிருஷ்டவசமாக காயத்தால் விலகினார். அவரின் காயம் சென்னை அணியின் பவுலிங் மோசமாக மாறியதற்கு ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் இந்த வருடம் ஷார்துல் தாகூரும் இல்லாத நிலையில் சஹர் இல்லாத காரணத்தால் ஒரு நல்ல தரமான அனுபவம் வாய்ந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் சென்னை தவித்து வருகிறது. அந்த நிலையில் தற்போது அடுத்தடுத்த தோல்விகளால் தவித்து வரும் சென்னை அணியின் மோசமான பந்து வீச்சுக்கு தீபக் சஹர் இல்லாததுதான் ஒரு முக்கிய காரணம் என ஸ்டீபன் பிளமிங் போன்ற சென்னை அணி நிர்வாகத்தினர் அவ்வப்போது கூறி வருகின்றனர்.

ஆனால் பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் சொதப்பும் சென்னை அணி அதற்கு பரிசாக கிடைக்கும் தோல்வியின் பழியை அணியில் இல்லாத தீபக் சஹர் மீது போட்டு தப்பித்துக் கொள்ள வேண்டாம் என்று முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் சாடியுள்ளார். இதுபற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வெறும் ஒரு வீரர் (தீபக்) இல்லாத காரணத்தால் நீங்கள் தொடர்ச்சியாக 3 போட்டிகளில் தோற்க முடியாது. ஒரு அணியாக சேர்ந்து படியேற வேண்டும்” என காட்டத்துடன் கூறியுள்ளார்.

- Advertisement -

அதாவது கிரிக்கெட்டில் வெற்றி பெற வேண்டுமெனில் ஒரு அணியாக 11 பேரும் சேர்ந்து பாடுபட்டால் மட்டுமே முடியும் என அழுத்தமாக பெரிய எழுத்துக்களில் குறிப்பிட்டுள்ள அவர் ஒரே ஒரு வீரர் இல்லாமல் போவது தோல்விக்கான நிச்சய காரணமாக இருக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

எனவே அணியில் இல்லாத அவரைப் பற்றி பேசுவதை விட்டுவிட்டு அணியில் உள்ள வேறு தரமான வீரரை அவரின் இடத்தில் விளையாட வைத்து எப்படி வெற்றி பெறலாம் என்பதை பற்றி சென்னை அணி நிர்வாகம் யோசிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர். இனிமே வெற்றி உறுதி – மும்பை ரசிகர்களுக்கு நற்செய்தி

மேலும் எம்எஸ் தோனி, சிவம் துபே, ட்வயன் ப்ராவோ என ஒரு சிலர் மட்டும் சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடியாது எனக் கூறியுள்ள அவர் ஒரு அணியாக இணைந்து இனி வரும் போட்டிகளில் வெற்றி பெற பாடுபட வேண்டும் அதை தான் சென்னை ரசிகர்கள் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

Advertisement