மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பும் நட்சத்திர வீரர். இனிமே வெற்றி உறுதி – மும்பை ரசிகர்களுக்கு நற்செய்தி

MI
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் 15-வது ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனான சிஎஸ்கே அணி தாங்கள் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்து சிக்கலை சந்தித்துள்ள வேளையில் அதேபோன்ற சிக்கலை ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்ற மிகப்பெரிய அணியான மும்பை அணியும் சந்தித்துள்ளது. ஏனெனில் இந்த ஐபிஎல் தொடரின் முதல் 2 போட்டிகளிலுமே மும்பை அணி தோல்வியை சந்தித்துள்ளது. இதன்காரணமாக மும்பை அணி துவக்கத்திலேயே சறுக்கலை சந்தித்துள்ளது.

Mi

- Advertisement -

எனவே இனிவரும் போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளன. மும்பை அணியின் இந்த தொடர் தோல்விகளுக்கு அவர்கள் அணியில் இருந்த நட்சத்திர வீரர்களை தவறவிட்டது, சரியான வீரர்களை தேர்வு செய்யாதது போன்ற சில விடயங்கள் முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன.

அதோடு மட்டுமின்றி மும்பை அணிக்காக கடந்த பல சீசன்களாகவே மிடில் ஆர்டரில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சூர்யகுமார் யாதவ் தற்போது அணியில் இல்லாததும் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி இரண்டிலும் தோற்றுள்ளது. அதேபோன்று கொல்கத்தா அணி மூன்று போட்டிகளில் இரண்டு வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாம் இடம் வகிக்கிறது.

SKY

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான லீக் போட்டி ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த போட்டி மும்பை அணிக்கு முக்கியமான போட்டி என்பதனால் இந்த போட்டியில் நிச்சயம் மும்பை அணி வெற்றிப் பாதைக்கு திரும்பும் என்று ரசிகர்கள் உறுதியாக நம்புகின்றனர். இந்நிலையில் மும்பை அணியில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி காயம் காரணமாக சமீப காலமாக இந்திய அணியிலும் சரி, மும்பை அணி விளையாடிய 2 போட்டிகளிலும் சரி இடம்பெறாத சூர்யகுமார் யாதவ் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் அணிக்கு திரும்புகிறார் என்று செய்தி வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க : ருதுராஜ் வீக்னெஸ் இதுதான், இதனால் தான் அவர் தடுமாறுகிறார்! பிரச்சனையை உடைக்கும் முன்னாள் வீரர்

அவரது இந்த வருகை நிச்சயம் மும்பை அணிக்கு பலம் சேர்க்கும் என்றும் இனி வரும் போட்டிகளில் மும்பை அணி தொடர்ந்து வெற்றி பெற அவர் உறுதுணையாக இருப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக அவரது இந்த வருகை ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement