ருதுராஜ் வீக்னெஸ் இதுதான், இதனால் தான் அவர் தடுமாறுகிறார்! பிரச்சனையை உடைக்கும் முன்னாள் வீரர்

Ruturaj
Ruturaj Gaikwad
- Advertisement -

மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடரில் நடப்பு சாம்பியனாக விளங்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்துள்ளது. இதன் காரணமாக வரலாற்றிலேயே முதல் முறையாக ஹாட்ரிக் தோல்விகளை சந்தித்துள்ள அந்த அணி தற்போது புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் அதலபாதாளத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படி முதல் வெற்றியை பெறுவதற்கே திண்டாடும் அந்த அணி எப்படி கோப்பையை தக்க வைக்கப்போகிறது என்ற கவலை அந்த அணி ரசிகர்களிடையே காணப்படுகிறது.

CSK

- Advertisement -

இந்த தொடர் தொடங்குவதற்கு ஒருசில நாட்கள் முன்பாக அந்த அணிக்கு 4 கோப்பைகளை வென்று கொடுத்த ஐபிஎல் வரலாற்றில் 2-வது வெற்றிகரமான கேப்டன் எம்எஸ் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதுடன் அந்தப் பொறுப்பை ரவீந்திர ஜடேஜாவிடம் ஒப்படைத்துவிட்டு அவரின் தலைமையில் சாதாரண வீரராக விளையாடி வருகிறார். இத்தனைக்கும் ஜடேஜாவுக்கு உறுதுணையாக அவர் இருந்தபோதிலும் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்த ஜடேஜா ஒரு வெற்றியை பதிவு செய்வதற்கு முன்பாகவே வரலாற்றிலேயே ஹாட்ரிக் தோல்வியை பதிவு செய்த முதல் சென்னை கேப்டன் என்ற பரிதாப பெயரைப் பெற்றுள்ளார்.

படுமோசமான பேட்டிங்:
அந்த அணியின் இந்த தோல்விக்கு படுமோசமான பேட்டிங் முக்கிய காரணமாக அமைந்து வருகிறது. ஏனெனில் கொல்கத்தாவுக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங்கில் 131 ரன்களை மட்டுமே எடுத்து அந்த அணி பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் வெறும் 126 ரன்களுக்கு சுருண்டு மண்ணை கவ்வியது. மேலும் பேட்டிங்கில் அசத்திய லக்னோவுக்கு எதிரான போட்டியில் 210 ரன்களை குவித்த போதிலும் அதற்கு ஈடாக சென்னை பவுலர்கள் 211 ரன்களை வாரி வழங்கி வெற்றியை கோட்டை விட்டனர்.

CSK vs PBKS 2

இப்படி அந்த அணிக்கு இதுவரை எதுவுமே சரியாக அமையாத நிலையில் 3 போட்டிகளில் 2 தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்த மோசமான பேட்டிங் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது. குறிப்பாக அந்த அணி பெரிதும் நம்பியிருக்கும் நம்பிக்கை நட்சத்திர இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கைக்வாட் இதுவரை பங்கேற்ற 3 போட்டிகளிலும் 0, 1, 1 என ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றினார்.

- Advertisement -

வீக்னெஸ் இதுதான்:
தற்போதைய நிலைமையில் அந்த அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டுமெனில் இவரின் பேட்டில் இருந்து நிச்சயமாக ரன்கள் வர வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் கடந்த வருடம் நடந்த ஐபிஎல் தொடரில் 635 ரன்களை நொறுக்கிய அவர் ஆரஞ்சு தொப்பியை வென்று 4-வது முறையாக சென்னை சாம்பியன் பட்டத்தை வெல்வதற்கு துருப்பு சீட்டாக செயல்பட்டார். அப்படி திறமை வாய்ந்தவராக இருக்கும் அவர் இந்த வருடம் களமிறங்கிய 3 போட்டிகளிலும் ஆச்சரியப்படும் வண்ணமாக 4-வது பந்துகளில் தொடர்ந்து அவுட்டாகி உள்ளார்.

ruturaj

அவரை போன்ற ஒரு நல்ல திறமை வாய்ந்த வீரர் பெரிய ரன்கள் அடிப்பதற்கு முதலில் நிலைத்து நின்று நிறைய பந்துகள் சந்திக்க வேண்டும். ஆனால் சந்தித்த முதல் ஓவரிலேயே ஒருசில பந்துகளுக்கு பின் நடையைக் கட்டும் அவரின் இந்த தடுமாற்றத்திற்கு என்ன காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவர் எட்ஜ் வாங்கி அவுட்டாகி வருகிறார். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் இதே வகையில் அவர் நிறைய முறை அவுட்டானதை பார்த்துள்ளேன்.

- Advertisement -

தற்போது ஐபிஎல் தொடர் நடைபெறும் மும்பை பிட்ச்சுகள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வருகிறது. இங்கு துபாய் போல் அல்லாமல் பந்து நன்கு ஸ்விங் ஆகிறது. அவர் நல்ல தரமான வீரர் என்பதால் மீண்டும் ரன் குவிப்பதற்கு தேவையான முயற்சிகளை செய்தால் மட்டுமே சென்னையால் மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்ப முடியும்” என கூறினார்.

Gaikwad 3

ஸ்விங்கில் தடுமாற்றம்:
அதாவது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் முறையாக ஐபிஎல் தொடரில் அறிமுகமான ருதுராஜ் அந்த சீசனில் அற்புதமாக செயல்பட்டு அதன்பின் 2021 தொடரிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். ஆனால் அந்த 2 ஐபிஎல் தொடர்களின் பெரும்பாலான போட்டிகள் துபாயில் நடைபெற்றதாகும். அங்கு எப்போதும் வெப்பம் நிறைந்த சூழ்நிலை நிலவும் என்பதால் பந்து நிறைய ஸ்விங் ஆகாது.

- Advertisement -

ஆனால் தற்போதைய ஐபிஎல் நடைபெறும் மும்பை நகரில் அதுவும் இரவுநேர போட்டி என்பதால் அவர் பேட்டிங் செய்யும் பவர்ப்ளே ஓவர்களில் பந்து நன்றாகவே ஸ்விங் ஆகிறது. எனவே அதை பயன்படுத்தி அதிரடியாக பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஸ்விங் பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் ருதுராஜ் கைக்வாட் தடுமாறுவதாக வாசிம் ஜாபர் தெரிவித்துள்ளார்.

Jaffer

துபாய் ஆடுகளங்களில் இதுவரை நிறைய ஐபிஎல் விளையாடி வெற்றி கண்ட அவர் அதேபோல சூழ்நிலை மும்பையில் நிலவாது என்பதால் அதற்கு ஏற்றார்போல் தயார்படுத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இருப்பினும் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ருதுராஜ் நிச்சயமாக மும்பை ஆடுகளங்களை பற்றி தெரிந்து வைத்திருப்பார் என்பதாலும் இந்தியாவில் நடந்த ஐபிஎல் 2021 தொடரின் முதல் பகுதியில் அவர் ஏற்கனவே விளையாடிய அனுபவம் பெற்றிருக்கிறார் என்பதாலும் இதிலிருந்து அவர் விரைவில் மீண்டு வருவார் என நம்பலாம்.

இதையும் படிங்க : இன்னும் 90களிலேயே இருக்கோம்! நியாயமான ஆதங்கத்துடன் இந்திய மகளிர் அணியை விளாசும் முன்னாள் வீரர்

இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “கடந்த வருடம் ருதுராஜ் தன்னை ஒரு அற்புதமான வீரர் என நிரூபித்தார். இருப்பினும் இந்த வருடம் அவருக்கும் அவரது அணிக்கும் எதுவும் சரியாக அமையவில்லை. சென்னையில் உள்ள ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயுடு, ரவீந்திர ஜடேஜா மற்றும் எம்எஸ் தோனி போன்றவர்களுக்கு நிறைய அனுபவம் உள்ளது. தற்சமயம் அவர்கள் பக்கம் காற்று வீசவில்லை” என இதுபற்றி வாசிம் ஜாபர் மேலும் தெரிவித்தார்.

Advertisement