100 டெஸ்ட் போட்டிக்கு முன்பு பிரதமர் மோடியை சந்தித்த புஜாரா – நரேந்திர மோடி என்ன சொல்லியிருக்காரு?

Pujara
- Advertisement -

இந்திய அணியின் அனுபவ ஆட்டக்காரரான சத்தீஷ்வர் புஜாரா ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அதன்படி கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான புஜாரா இதுவரை 99 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7021 ரன்களை குவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது போட்டி அவருடைய நூறாவது சர்வதேச டெஸ்ட் போட்டியாக அமைய உள்ளது.

இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக 100 போட்டிகளில் பங்கேற்ற 13-வது இந்திய வீரர் என்று பெருமையையும் புஜாரா படைக்க இருக்கிறார். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக பெங்களூரு மைதானத்தில் தனது டெஸ்ட் கரியரை துவங்கிய புஜாரா அதே ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது 100-ஆவது போட்டியில் விளையாட காத்திருக்கிறார்.

- Advertisement -

அதன்படி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் பிப்ரவரி 17-ம் தேதி துவங்கும் இந்த போட்டியில் புஜாரா இந்த வரலாற்று சாதனையை நிகழ்த்த இருக்கிறார். தனது 100 டெஸ்ட் போட்டியில் பங்கேற்க காத்திருக்கும் புஜாராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் புஜாரா இந்த நூறாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் புஜாராவின் மனைவியும் அவருடன் இருந்துள்ளார். பின்னர் பிரதமரை சந்தித்த பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டுள்ள புஜாரா அதில் குறிப்பிட்டதாவது : நமது நாட்டு பிரதமர் மோடிஜியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி.

- Advertisement -

என்னுடைய நூறாவது போட்டியில் நான் விளையாட இருக்கும்போது அவர் எனக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பேசினார் என்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு புஜாரா நன்றி தெரிவித்துள்ளார். அதேவேளையில் புஜாராவின் இந்த பதிவிற்கு பதில் அளித்து மோடி பதிவிட்டுள்ள அந்த கருத்தில் :

இதையும் படிங்க : விராட் கோலிக்கு ட்விட்டரில் ஆதரவு கொடுத்தது ஏன்? முதல் முறையாக பேசிய பாபர் அசாம் – இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி

“உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி புஜாரா”, “உங்களுடைய நூறாவது டெஸ்ட் போட்டிக்கு எனது வாழ்த்துக்கள்”, “அதோடு உங்களது கிரிக்கெட் கரியரும் நன்றாக அமைய வேண்டும் அதற்கும் வாழ்த்துக்கள்” என்று சத்தீஸ்வர் புஜாராவை டேக் செய்து அவர் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement