விராட் கோலிக்கு ட்விட்டரில் ஆதரவு கொடுத்தது ஏன்? முதல் முறையாக பேசிய பாபர் அசாம் – இந்திய ரசிகர்கள் நெகிழ்ச்சி

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

ஆசிய கண்டத்தின் டாப் 2 கிரிக்கெட் அணிகளாக கருதப்படும் இந்தியாவும் பாகிஸ்தானும் பரம எதிரிகளாக பாவிக்கப்பட்டாலும் பல தருணங்களில் உடன்பிறவா சகோதரர்களாக நட்பை வெளிப்படுத்தியுள்ளனர். அந்த வகையில் கடந்த வருடம் விராட் கோலிக்கு பாபர் அசாம் கொடுத்த ஆதரவு யாராலும் மறக்க முடியாது. கடந்த 10 வருடங்களுக்கு மேலாக 3 வகையான கிரிக்கெட்டிலும் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தி ஏராளமான சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்து வரும் விராட் கோலி பகலானால் இரவு வரும் என்று இயற்கையின் நியதிக்கேற்ப 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் ஃபார்மை இழந்து தடுமாறினார்.

வரலாற்றில் சச்சின் டெண்டுல்கர் உட்பட அனைத்து ஜாம்பவான்களும் தங்களது கேரியரில் ஃபார்மை இழந்து தடுமாறினாலும் அதிலிருந்து மீண்டெழுந்து சிறப்பாக செயல்பட்டுள்ளனர். ஆனால் அதை உணராத நிறைய முன்னாள் இந்திய வீரர்கள் 2 வருடங்களுக்கும் மேலாக சதமடிக்காமல் இருந்து வரும் விராட் கோலியை அணியிலிருந்து நீக்குமாறு கடுமையாக விமர்சித்து அதுவரை பெற்றுக் கொடுத்த வெற்றிகளின் நன்றியை மறந்து பேசினர். இருப்பினும் ரிக்கி பாண்டிங் உட்பட ஏராளமான முன்னாள் வெளிநாட்டு ஜாம்பவான் வீரர்கள் விராட் கோலியின் அருமை உணர்ந்து அவருக்கு விமர்சனங்களை மிஞ்சிய ஆதரவு கொடுத்து வந்தனர்.

- Advertisement -

என்னா மனுஷன்யா:
அந்த வரிசையில் 2022 ஆசிய கோப்பைக்கு முன்பாக நடைபெற்ற இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் மோசமாக செயல்பட்ட விராட் கோலி கடும் விமர்சனங்களை சந்தித்த போது “இதுவும் கடந்து போகும். தன்னம்பிக்கையுடன் இருங்கள்” என்று ட்வீட் போட்டு பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதற்கு நன்றி தெரிவித்து நீங்களும் தொடர்ந்து தொடர்ந்து ஜொலிக்க வேண்டும் என்று அவருக்கு பதிலளித்த விராட் கோலி துபாயில் நடைபெற்ற ஆசிய கோப்பையில் நேரடியாக சந்தித்து கை கொடுத்து நன்றி தெரிவித்தார்.

இந்நிலையில் அனைவருக்குமே மோசமான தருணங்கள் வருவது சகஜம் தான் என்று தெரிவிக்கும் பாபர் அசாம் அது போன்ற தருணங்களில் அவர்களுக்கு ஆதரவு கொடுத்தால் மட்டுமே அவர்களால் அதிலிருந்து மீண்டு வர முடியும் என்ற எண்ணத்துடன் அந்த ட்வீட் போட்டதாக கூறியுள்ளார். இது பற்றி ஐசிசி இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு விளையாட்டு வீரராக யார் வேண்டுமானாலும் அது போன்ற மோசமான தருணங்களை சந்திக்க நேரிடலாம். அந்த சமயத்தில் ஒருவேளை அதுபோன்ற ட்வீட் போட்டால் அது அவருக்கு தன்னம்பிக்கையும் உதவியையும் ஏற்படுத்தலாம் என்று நான் நினைத்தேன்”

- Advertisement -

“மேலும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது மோசமான தருணங்களில் நீங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும். அத்துடன் கடினமான காலங்களில் தான் மற்றவர்களைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்ள முடியும். எனவே அந்த சமயத்தில் நான் அவ்வாறு செய்தால் ஒருவேளை அதில் ஏதாவது அவருக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும் என்று நினைத்தேன். அது ஒரு கூடுதல் புள்ளியை ஏற்படுத்தலாம்” என்று கூறினார்.

அந்த வகையில் என்னதான் இரு நாட்டுக்குமிடையே சர்ச்சைகள் இருந்தாலும் ஒரு விளையாட்டு வீரராக விராட் கோலிக்கு ஆதரவு கொடுத்த பாபர் அசாமின் எண்ணத்தை பார்க்கும் இந்திய ரசிகர்கள் “என்ன மனுஷன்யா” என்ற வகையில் சமூக வலைதளங்களில் பாராட்டுகளை தெரிவிக்கிறார்கள். அத்துடன் அந்த ட்வீட்டில் ஏதோ ஒரு மேஜிக் இருந்தது போல ஆசிய கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக டி20 கிரிக்கெட்டில் சதமடித்து ஃபார்முக்கு திரும்பி விமர்சனங்களை அடித்து நொறுக்கிய விராட் கோலி அதே வேகத்தில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக வரலாற்றின் மிகச் சிறந்த இன்னிங்ஸ் விளையாடி சரித்திர வெற்றியை பெற்றுக் கொடுத்தார்.

இதையும் படிங்க:கிரிக்கெட்டில் டென்னிஸா? பெங்களூருவில் சானியா மிர்சாவா? ஆரம்பத்திலேயே ஆர்சிபியை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

அதே போல் சமீபத்திய வங்கதேசம் மற்றும் இலங்கை ஒருநாள் தொடர்களில் சதமடித்து முழுமையான பார்முக்கு திரும்பியுள்ள விராட் கோலியை வாழ்த்திய நீங்களும் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முன்னேற வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பாபர் அசாமுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement