கிரிக்கெட்டில் டென்னிஸா? பெங்களூருவில் சானியா மிர்சாவா? ஆரம்பத்திலேயே ஆர்சிபியை கலாய்க்கும் ரசிகர்கள் – காரணம் இதோ

Sania Mirza RCB
- Advertisement -

சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் இதுவரை ஒரு ஐசிசி உலகக் கோப்பையை கூட வெல்ல முடியாமல் தடுமாறும் இந்திய மகளிர் அணிக்கு தரமான இளம் வீரர்களை கண்டறியும் நோக்கத்துடன் வரலாற்றில் முதல் முறையாக மகளிர் ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 4 முதல் 26 வரை முழுமையாக பெரிய தொடராக நடைபெற உள்ளது. அதற்கான வீராங்கனைகள் ஏலம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று மும்பையில் நடைபெற்றது அதில் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்ற 409 வீராங்கனைகளை வாங்குவதற்கு மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய அணி நிர்வாகங்கள் போட்டி போட்டன. அதில் முதலாவதாக இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர தொடக்க வீராங்கனை ஸ்மிரிதி மந்தனாவை 3.4 கோடி என்ற பெரிய தொகைக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் போட்டி போட்டு வாங்கியது.

அத்துடன் ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் எலிஸ் பெரி, நியூசிலாந்து கேப்டன் சோபி டேவின் போன்ற தரமான வீராங்கனைகளை வாங்கிய அந்த அணி நிர்வாகம் ரிச்சா கோஸ், ரேணுகா சிங் போன்ற தரமான இளம் இந்திய கிரிக்கெட் வீராங்கனைகளையும் வாங்கியது. அந்த வகையில் மும்பை உள்ளிட்ட இதர மகளிர் ஐபிஎல் அணிகளை காட்டிலும் பெங்களூரு மிகவும் வலுவான அணியாக காட்சியளிக்கிறது.

- Advertisement -

கிரிக்கெட்டில் டென்னிஸ்:
அதனால் 15 வருடங்களாக ஆடவர் அணி வாங்க முடியாத ஐபிஎல் கோப்பையை முதல் வருடத்திலேயே மகளிர் பெங்களூரு அணி வாங்க போவதாக ஆர்சிபி ரசிகர்கள் கடந்த சில நாட்களாகவே சமூக வலைதளங்களில் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் மகளிர் பெங்களூரு அணியின் ஆலோசகராக இந்தியாவுக்காக கடந்த பல வருடங்களாக டென்னிஸ் விளையாட்டில் விளையாடி 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்று சமீபத்தில் ஓய்வு பெற்ற நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா நியமிக்கப்படுவதாக அந்த அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதை பார்க்கும் பெரும்பாலான ரசிகர்கள் என்னப்பா இது சம்பந்தமின்றி கிரிக்கெட்டில் டென்னிஸ் விளையாட்டவுட் சேர்ந்தவர் அதுவும் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளாரே என்று வியப்பை வெளிப்படுத்துகிறார்கள். மேலும் ஆடவர் அணியில் முதல் முறையாக மகளிர் உடற்பயிற்சியாளரை நியமித்தது போலவே இந்த முடிவும் சம்பந்தமின்றி இருப்பதாக தெரிவிக்கும் பெரும்பாலான ரசிகர்கள் களமிறங்குவதற்கு முன்பாகவே சொதப்பலான முடிவை எடுத்துள்ளதாக பெங்களூரு அணியை வழக்கம் போல கலாய்க்கிறார்கள்.

- Advertisement -

ஏனெனில் சமீப காலங்களில் கூட இந்திய அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட தோனியும் லக்னோ அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட்ட கம்பீரும் கிரிக்கெட்டை சேர்ந்தவர்களாகவே இருந்தனர். அப்படிப்பட்ட நிலையில் என்ன தான் டென்னிஸ் ஜாம்பவான் வீராங்கனையாக இருந்தாலும் கிரிக்கெட் பற்றி பெரிய அளவில் தெரியாத அவரை மகளிர் அணிக்கு ஆலோசகராக நியமித்துள்ளது சரியான முடிவாக தோன்றவில்லை என நிறைய ரசிகர்கள் பெங்களூரு அணியின் இந்த முடிவுக்கு அதிருப்தியை வெளிப்படுத்துகிறார்கள்.

இருப்பினும் ஆலோசகருக்கும் பயிற்சியாளருக்கும் இருக்கும் வித்தியாசத்தை முதலில் புரிந்து கொள்ளுங்கள் என அதற்கு பெங்களூரு ரசிகர்கள் பதிலடி கொடுக்கின்றனர். அதாவது சானியா மிர்சா பயிற்சியாளராக நியமிக்கப்படவில்லை என்று தெரிவிக்கும் பெங்களூரு ரசிகர்கள் போட்டியின் போது ஏற்படும் மனதளவிலான அழுத்தத்தை கட்டுப்படுத்தி சமாளித்து வெற்றிகரமாக செயல்படும் ஆலோசனைகளைத் தான் பெங்களூரு அணி வீராங்கனைகளுக்கு வழங்கப் போவதாக தெளிவுபடுத்துகிறார்கள்.

- Advertisement -

இது பற்றி சானியா மிர்சா பேசியது பின்வருமாறு. “இது எனக்கும் சற்று ஆச்சரியமாக அமைந்துள்ளது ஆனால் இதற்காக ஆவலுடன் காத்திருக்கிறேன். அதிர்ஷ்டவசமாக நானும் 20 வருடங்களாக ஒரு விளையாட்டு வீராங்கனையாக இருந்துள்ளேன். மகளிர் மற்றும் இளம் பெண்களுக்கு விளையாட்டு என்பது தங்களுடைய கேரியரின் முதல் வாய்ப்பாக அமைய வேண்டும் என்பதை உணர்த்துவதே என்னுடைய அடுத்த வேலையாகும்”

இதையும் படிங்க:14 வயது சிறுமியின் பேட்டிங்கை பாராட்டி விடீயோவினை பகிர்ந்த சச்சின் – யார் இந்த சிறுமி? விவரம் இதோ

“மேலும் கிரிக்கெட்டுக்கும் டென்னிஸ்க்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. விளையாட்டில் விளையாடும் ஒவ்வொருவருக்கும் அதில் ஏற்படும் அழுத்தத்தை கையாள வேண்டியது மிகவும் முக்கியமாகும். அதை நீங்கள் கையாள விட்டால் உங்களால் கட்டுப்படுத்த முடியாது. அதை கட்டுப்படுத்துபவர்கள் தான் பெரிய சாம்பியன்களாக ஜொலிக்கிறார்கள்” என்று கூறியுள்ளார்.

Advertisement