14 வயது சிறுமியின் பேட்டிங்கை பாராட்டி விடீயோவினை பகிர்ந்த சச்சின் – யார் இந்த சிறுமி? விவரம் இதோ

Sachin
- Advertisement -

நவீன கிரிக்கெட்டில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் தற்போது பெண்கள் கிரிக்கெட்டும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் பெண்கள் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடருக்கான ஏலமும் அண்மையில் மும்பையில் நடைபெற்ற முடிந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் பல பேர் பல கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கிராமத்தில் ஒரு சிறுமி கிரிக்கெட் விளையாடும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் பெருமளவு வைரலாகியுள்ளது. அதன்படி பள்ளி படிக்கும் வயதுடைய இந்த சிறுமி தனது நண்பர்களுடன் சேர்ந்து அதிரடியாக பேட்டிங் செய்யும் காட்சி தற்போது வீடியோவாக இணையத்தில் வைரலாகி உள்ளது.

- Advertisement -

மேலும் கிரிக்கெட்டின் கடவுள் என்று போற்றப்படும் சச்சின் கூட அந்த சிறுமியின் பேட்டிங் வீடியோவை பகிர்ந்து தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார். இந்நிலையில் அந்த வீடியோவில் இருக்கும் அந்த சிறுமி யார்? என்பது குறித்த தகவலும், அவர் இப்படி பேட்டிங் செய்வது குறித்த விவரங்களும் வெளியாகி உள்ளன.

அதன்படி அந்த வீடியோவில் இருக்கும் சிறுமியின் பெயர் முமல் மெஹர். 14 வயது மட்டுமே நிரம்பிய அவர் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஷெர்புரா கனாசர் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் அங்குள்ள ஆரம்ப பள்ளி ஒன்றில் படிக்கும் அந்த சிறுமிக்கு கிரிக்கெட் விளையாடுவது என்றால் மிகவும் பிடிக்குமாம்.

- Advertisement -

எனவே தினமும் பள்ளி முடிந்து தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக அவர் வைத்துள்ளார். தற்போது அவர் சூரியகுமார் யாதவ் போன்று அதிரடியாக பேட்டிங் செய்யும் வீடியோ ஒன்று 34 வினாடிகளுடன் இருப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க : ரோஹித் கதை முடிஞ்சுது, பாண்டியா போன்ற வீரர்கள் வீட்டுக்கு வந்து பேசுனாங்க – உண்மையை உளறிய சேட்டன் சர்மா

இந்த வீடியோவானது அனைத்து தரப்பு மக்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பேட்டிங் வீடியோ ஒன்றினை அவர் பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவும் ரசிகர்களால் மில்லியன் கணக்கில் பார்க்கப்பட்டதும், ஷேர் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Advertisement