ரோஹித் கதை முடிஞ்சுது, பாண்டியா போன்ற வீரர்கள் வீட்டுக்கு வந்து பேசுனாங்க – உண்மையை உளறிய சேட்டன் சர்மா

Chetan
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மா பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் இந்திய அணியில் நடக்கும் பல குளறுபடிகளை பற்றி உண்மை தெரியாமலேயே பேசி வசமாக சிக்கியுள்ளார். குறிப்பாக விராட் கோலியின் கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டதில் அவருக்கும் அப்போதைய பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலிக்கும் ஏற்பட்ட மோதல் உண்மையாக்கும் வகையில் அவர் பேசியது இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்படி அவர் பேசியதில் இந்திய அணியின் தேர்வு ரசிகர்களை மிகப்பெரிய மிகப்பெரிய அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது என்றே சொல்லலாம். சமீப காலங்களாகவே இந்திய அணியில் தரமான வீரர்கள் அல்லது முந்தைய போட்டியில் ஆட்டநாயகன் விருது வெல்லும் வீரர்கள் பெஞ்சில் அமர வைக்கப்படுவது ரசிகர்களை கோபமடைய வைத்துள்ளது.

CHetan Sharma

- Advertisement -

அதே போல் ராகுல் போன்ற சில வீரர்கள் சொதப்பலாக செயல்படும் தொடர்ந்து வாய்ப்பு பெறுவதும் ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் சுமாராக செயல்பட்ட ரோகித் சர்மா உள்ளிட்ட சீனியர்களின் டி20 கேரியர் முடிந்து விட்டதாக சேட்டன் சர்மா கூறியுள்ளார். மேலும் ஹர்திக் பாண்டியா தான் இந்தியாவின் வருங்கால கேப்டன் என்று இதுநாள் வரை ஊடகங்கள் யூகித்த செய்திகளை உண்மையாக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.

வீட்டுக்கு வருவாங்க:
அதை விட இந்திய அணியின் வருங்கால கேப்டனாக நியமிக்கப்படுவதற்காக ஹர்திக் பாண்டியா அடிக்கடி தமது வீட்டுக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தியதாக தெரிவிக்கும் அவர் தீபக் ஹூடா போன்ற சில வீரர்களும் தமது வீட்டுக்கு வந்து தம்மிடம் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறியுள்ளார். இது பற்றி ரகசிய கேமராவில் உண்மையை அவர் உளறியது பின்வருமாறு. “ஹர்திக் பாண்டியா விரைவில் கேப்டனாக பொறுப்பேற்று அதிக நாட்கள் செயல்பட உள்ளார். மறுபுறம் ரோகித் சர்மா இனிமேலும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு பெறப்போவதில்லை”

Hardik Pandya and Rohit Sharma

“மேலும் சூரியகுமார் யாதவ், இசான் கிசான், தீபக் ஹூடா, சுப்மன் கில் போன்ற 15 – 20 வீரர்களை டி20 அணிக்குள் நான் தான் கொண்டு வந்தேன். எனவே ஹர்திக் பாண்டியா தான் இந்தியாவின் வருங்காலம். அவர் மிகவும் நல்ல கிரிக்கெட்டர். அவர் சமீபத்தில் எனது வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது வருங்கால கேப்டன்ஷிப் பதவி பற்றி விவாதித்த அவர் எனது வீட்டு சோபாவிலேயே உறங்கி விட்டார். அவரைப் போல் நிறைய வீரர்கள் இந்திய அணியில் தங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி பேசுவதற்கு எனது வீட்டுக்கு வருவார்கள்”

- Advertisement -

“அந்த வகையில் எனது தலைமையிலான 5 தேர்வு குழுவினர் தான் இந்தியாவில் கிரிக்கெட்டை நடத்துகிறோம். நாங்கள் தான் இந்திய கிரிக்கெட்டின் நிகழ்காலத்தையும் வருங்காலத்தையும் நிர்ணயிக்கிறோம். சமீபத்தில் ரோகித் சர்மா என்னுடன் 30 நிமிடங்கள் மொபைல் போனில் பேசினார். மேலும் ஹர்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், தீபக் ஹூடா போன்ற சில வீரர்கள் சமீபத்தில் எனது வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் என்னை நம்புகிறார்கள்” என்று கூறினார்.

Chetan-1

பொதுவாக உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு பயிற்சி களத்தில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து தான் ஒவ்வொரு வீரர்களின் தரத்தையும் தனித்துவத்தையும் அறிந்து அவர்களை இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டியது தேர்வு குழுவினரின் தலையாய கடமையாகும். ஆனால் உள்ளூர் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டது மட்டுமல்லாமல் நேரடியாக தேர்வுக்குழு தலைவர் வீட்டுக்கே சென்று சில வீரர்கள் வாய்ப்பு கேட்டதும் அதற்கு சேட்டன் சர்மா எதிர்ப்பு தெரிவிக்காமல் ஆதரவு தெரிவித்து உட்கார வைத்து பேசி வாய்ப்பு கொடுப்பதும் தற்போது அம்பலமாகியுள்ளது.

இதையும் படிங்க: முழுவதுமாக விற்றுத்தீர்ந்த 40 ஆயிரம் டிக்கெட்டுகள். காரணம் என்ன தெரியுமா? – டெல்லி கிரிக்கெட் நிர்வாகி தகவல்

குறிப்பாக கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் சுமாராக செயல்பட்டதால் அதிரடியாக நீக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா இன்று 2022 ஐபிஎல் கோப்பையை வென்ற ஒரே காரணத்தால் இந்தியாவின் அடுத்த கேப்டனாக வருவதற்கு சேட்டன் சர்மாவை பயன்படுத்தியுள்ளது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது. மொத்தத்தில் இந்திய அணியின் தேர்வில் எதுவுமே நியாயமாக நடக்கவில்லை என்று சமீப காலங்களாகவே ரசிகர்கள் சந்தேகித்தது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement