முழுவதுமாக விற்றுத்தீர்ந்த 40 ஆயிரம் டிக்கெட்டுகள். காரணம் என்ன தெரியுமா? – டெல்லி கிரிக்கெட் நிர்வாகி தகவல்

Delhi
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய இந்திய அணியானது இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கிலோ அல்லது மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கிலோ கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறும் என்பதினால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையே நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துவிட்டன என்று டெல்லி கிரிக்கெட் நிர்வாகம் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது. மொத்தம் 40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட இந்த மைதானத்தில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்துள்ளன.

IND vs AUS Siraj SMith

இதற்கு காரணம் யாதெனில் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் தற்போது தான் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது. அதற்காகவே மக்கள் ஆர்வமாக டிக்கெட்டுகளை வாங்கியதாக தகவல்கள் கூறுகின்றன. இது குறித்து பேசிய டெல்லி கிரிக்கெட் சங்க இணை செயலாளர் ராஜன் மஞ்சந்தா கூறுகையில் : இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளுமே விற்று தீர்ந்துவிட்டன.

- Advertisement -

மைதானம் முழுவதுமாக ரசிகர்கள் கூட்டத்தினால் நிரம்பி வழியப்போவதை காண ஆவலாக உள்ளோம். நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு டெஸ்ட் போட்டி நடைபெறுவதால் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி உள்ளனர். இதில் 24 ஆயிரம் டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்பட்டது. 8000 டிக்கெட்டுகள் டெல்லி கிரிக்கெட் சங்க உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : IND vs AUS : நீங்க 2 ஆவது போட்டியில் விளையாடலாம். எந்த தடையும் இல்ல – பச்சை கொடி காட்டிய நிர்வாகம்

மீதமுள்ள டிக்கெட்டுகள் போட்டியை காண வரும் பிரமுகர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று மைதானத்தில் உள்ள ஒருபகுதி கிரிக்கெட் போட்டிக்கான பாதுகாப்பை வழங்கும் குடும்பங்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக டெல்லி கிரிக்கெட் நிர்வாகியான ராஜன் மஞ்சந்தா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement