IND vs AUS : நீங்க 2 ஆவது போட்டியில் விளையாடலாம். எந்த தடையும் இல்ல – பச்சை கொடி காட்டிய நிர்வாகம்

IND
- Advertisement -

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியானது தற்போது இந்திய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் அசத்தலான வெற்றியை பதிவு செய்த இந்திய அணியானது ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் இந்த தொடரில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS

- Advertisement -

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் பிப்ரவரி 17-ஆம் தேதி டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் காயம் காரணமாக இடம் பெறாமல் இருந்த இந்திய அணியின் மிடில் ஆர்டர் வீரரான ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது போட்டியின் போது அணியில் இணைவார் என்று இந்திய கிரிக்கெட் நிர்வாகம் உறுதி செய்துள்ளது.

அதன்படி ஏற்கனவே வங்கதேசத்தில் நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்ற அவர் அதன் பின்னர் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார்.

Shreyas Iyer

அதன் பிறகு பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மற்றும் சிகிச்சையை மேற்கொண்டு வந்த அவர் தற்போது இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அளவிற்கு உடற்தகுதியை எட்டி விட்டதால் டெல்லி சென்று இந்திய அணியுடன் இணைவார் என்றும் மேலும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாட எந்த ஒரு தடையும் இல்லை என்றும் பிசிசிஐ மருத்துவ குழு சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் இடம்பிடிப்பது மட்டுமின்றி பிளேயிங் லெவனிலும் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த முதலாவது போட்டியின் போது ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் அறிமுகமான சூரியகுமார் யாதவ் வெறும் 8 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றம் அளித்ததார்.

இதையும் படிங்க : வீடியோ : கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்கல, அவர் ஏன் பொய் சொன்னாருன்னு தெரில – கேமராவில் சிக்கிய சேட்டன் சர்மா

இதன்காரணமாக அவருக்கு பதிலாக மீண்டும் ஷ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தை பிடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக கடந்த 2021-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான ஷ்ரேயாஸ் ஐயர் 7 போட்டிகளில் விளையாடி 56.7 ரன்கள் சராசரியுடன் 624 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement