கங்குலிக்கு விராட் கோலியை பிடிக்கல, அவர் ஏன் பொய் சொன்னாருன்னு தெரில – கேமராவில் சிக்கிய சேட்டன் சர்மா

CHetan Sharma
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக ஜொலிக்கும் இந்திய கிரிக்கெட் அணியில் சமீப காலங்களாகவே நிறைய குளறுபடிகளும் ரசிகர்கள் விரும்பாத நிகழ்வுகளும் நடந்தேறி வருகின்றன. அதில் இருதரப்பு தொடர்களில் அபாரமாக செயல்பட்டும் உலகக் கோப்பை வென்று தரவில்லை என்ற ஒரே காரணத்திற்காக கடுமையான விமர்சனங்களை சந்தித்த விராட் கோலியின் கேப்டன்ஷிப் பதவி பறிக்கப்பட்டது பெரிய சர்ச்சை ஏற்படுத்தியது. அதாவது தன் மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பணிச்சுமையை நிர்வகிப்பதற்காக 2021 டி20 உலகக் கோப்பை வென்றாலும் இல்லையென்றாலும் டி20 கேப்டன்சிப் பதவியை ராஜினாமா செய்ததாக அறிவித்த விராட் கோலி ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்வதாக தெரிவித்திருந்தார்.

இருப்பினும் டி20 கேப்டன்சிப் பதிவியில் விலக வேண்டாம் என்று பிசிசிஐ தலைவர் சௌரவ் கேட்டுக் கொண்டும் அதை ஏற்காமல் விராட் கோலி அப்படி அறிவித்ததாக தெரிகிறது. ஆனால் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்று லீக் சுற்றுடன் வெளியேறியதால் விராட் கோலி கேப்டன்ஷிப் மீது மேலும் அதிருப்தியடைந்த சேட்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுவினர் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு 2 வெவ்வேறு கேப்டன்கள் தேவையில்லை என்ற கண்ணோட்டத்துடன் அவருடைய ஒருநாள் கேப்டன்சிப் பதவியையும் பறித்து ரோகித் சர்மாவிடம் ஒப்படைத்தது.

- Advertisement -

சிக்கிய சேட்டன்:
அதனால் மனமுடைந்த விராட் கோலி வெற்றிகரமான ஆசிய கேப்டனாக இருந்தும் டெஸ்ட் கேப்டன்சிப் பதவியையும் ராஜினாமா செய்தார். மேலும் ஒருநாள் கேப்டன்ஷிப் பதவி பறிப்பு பற்றி ஒரு மணி நேரத்திற்கு முன்பாக தான் தேர்வு குழுவினர் தம்மிடம் தெரிவித்ததாக குற்றம் சாட்டிய அவர் டி20 கேப்டன்சிப் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று சௌரவ் கங்குலி உட்பட யாரும் தன்னிடம் கேட்கவில்லை என்று 2022 ஜனவரி மாதம் நடந்த தென்னாப்பிரிக்க தொடரின் போது தெரிவித்தார். இந்நிலையில் டி20 கேப்டன்ஷிப் பதவியில் விலக வேண்டாம் என்று சௌரவ் கங்குலி சொன்னது உண்மைதான் என்று தெரிவிக்கும் சேட்டன் சர்மா ஆனால் விராட் கோலி அவ்வாறு சொல்லவில்லை என்று பொய் சொன்னதாக கூறியுள்ளார்.

அதனால் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாகவும் விராட் கோலிக்கு எதிராகவும் கங்குலி நடந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இது பற்றி ஜீ நியூஸ் தொலைக்காட்சி சேட்டன் சர்மாவிடம் பேசுவது போல் நடித்து ரகசிய கேமராவில் அனைத்து தகவல்களையும் அவரது வாயாலேயே கூற வைத்தது பின்வருமாறு. “வீடியோ மீட்டிங்கில் அந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு சௌரவ் கங்குலி கேட்டுக் கொண்டார். ஆனால் விராட் கோலி அதைக் கேட்கவில்லை அந்த மீட்டிங்கில் ஒருவர் மட்டும் இல்லாமல் 9 பேர் இருந்தோம். நானும் அதிலிருந்தேன். பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் தேர்வுக்குழுவை சேர்ந்த அனைவரும் இருந்தனர்”

- Advertisement -

“இருப்பினும் எங்களது பேச்சை விராட் கோலி கேட்கவும் இல்லை பின்பற்றி நடக்கவும் இல்லை. மேலும் தென்னாபிரிக்காவுக்கு கேப்டனாக சென்ற அவர் இதைப் பற்றி ஏன் பேச வேண்டும்? அங்கு நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு அணியை பற்றியது. இந்த விஷயத்தை அங்கே பேச வேண்டிய அவசியமே கிடையாது. இருப்பினும் விராட் கோலி அங்கே பொய் சொன்னார். ஆனால் ஏன் பொய் சொன்னார் என்று யாருக்கும் தெரியாது. அந்த சமயத்தில் கிரிக்கெட் வாரியத்திற்கும் அந்த வீரருக்கும் இடையே சண்டை இருந்தது”

“மேலும் தென்னாப்பிரிக்க தொடரில் டிக்ளேர் செய்வதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பாக தேவையின்றி விராட் கோலி கேப்டன்சிப் பதிவிலிருந்து விலகுவதாக அறிவித்தார். அவர் கங்குலிக்கு பதிலடி கொடுக்க விரும்பிய காரணத்தாலே அவ்வாறு செய்தார். அதனால் நாங்கள் ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இல்லை. ஆனால் நாங்கள் விராட் கோலிக்கு எதிராக இருந்தோம்”

இதையும் படிங்க: IND vs AUS : இப்போவும் சொல்றேன். நாங்க தான் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிப்போம் – சவால் விட்ட ஆஸி வீரர்

“சௌரவ் கங்குலி ரோகித் சர்மாவுக்கு ஆதரவாக இல்லை ஆனால் அவர் எப்போதும் விராட் கோலியை விரும்பவில்லை. இதை நீங்கள் இவ்வாறு எடுத்துக் கொள்ளலாம்” என்று கூறினார். இது போல மேலும் சில 4 சுவற்றுக்குள் நடந்த விஷயங்களை அவர் வெளியிட்டுள்ளது இந்திய கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement