IND vs AUS : இப்போவும் சொல்றேன். நாங்க தான் இந்த டெஸ்ட் தொடரை ஜெயிப்போம் – சவால் விட்ட ஆஸி வீரர்

IND vs AUS
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே நாக்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

IND vs AUS Steve SMith

- Advertisement -

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இன்னும் சில தினங்களில் டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றினால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும்.

இதன் காரணமாக இந்திய அணிக்கு இந்த தொடர் ஒரு முக்கியமான தொடராக பார்க்கப்படுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி பந்துவீச்சு, பேட்டிங் என அசத்தலாக செயல்பட்டு ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தியுள்ளதால் நிச்சயம் இந்த தொடரை கைப்பற்றி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் இருந்து வருகிறது.

Carey

இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டியில் நாங்கள் தோல்வியை சந்தித்திருந்தாலும் மீதமுள்ள போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுவோம் என ஆஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பரான அலெக்ஸ் கேரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : முதல் டெஸ்ட் போட்டியை மட்டும் தான் நாங்கள் இழந்திருக்கிறோம். ஆனால் மனதளவில் நாங்கள் இன்னும் அதே நம்பிக்கையுடனும் சுறுசுறுப்புடனும் தான் இருக்கிறோம். நிச்சயமாக இந்த தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி சாதனை படைக்கும்.

இதையும் படிங்க : உங்கள ஒரு சிங்கப்பெண்ணே சாச்சுட்டாங்க, இதுல பிஎஸ்எல் சிறந்த தொடர்னு கதை வேறயா? பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

கடந்த 18 மாதங்களாக நாங்கள் வெளிப்படுத்தி வந்த ஆட்டம் மிகச் சிறப்பானது. அந்த வகையில் இந்த தொடரிலும் எங்களால் நிச்சயம் இந்த தோல்வியிலிருந்து மீண்டு வந்து தொடரை கைப்பற்ற முடியும். உலகின் நம்பர் 1 டெஸ்ட் அணியாக இருக்கும் நாங்கள் யார் என்பதை வெளிக்காட்டுவோம் என அலெக்ஸ் கேரி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement