உங்கள ஒரு சிங்கப்பெண்ணே சாச்சுட்டாங்க, இதுல பிஎஸ்எல் சிறந்த தொடர்னு கதை வேறயா? பாகிஸ்தானை கலாய்க்கும் இந்திய ரசிகர்கள்

PSL WIPL
- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் மகளிர் ஐபிஎல் தொடர் வரலாற்றில் முதல் முறையாக வரும் மார்ச் 4 முதல் 26 வரை முழுமையான பெரிய தொடராக நடைபெறுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகள் 30 வருடங்களுக்கு முன்பே உலகக் கோப்பைகளை வென்று விட்ட நிலையில் இந்தியா மட்டும் இன்னும் மகளிர் கிரிக்கெட்டில் ஒரு ஐசிசி கோப்பையை கூட வெல்லாமல் திண்டாடி வருகிறது. மேலும் 90களில் சச்சினை மட்டும் நம்பிக்கொண்டிருந்தது போல இப்போதைய அணியில் ஓரிரு தரமான வீராங்கனைகளை மட்டும் நம்பிக் கொண்டிருப்பதே இந்திய மகளிர் அணியின் தடுமாற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

எனவே தரமான இளம் வீராங்கனைகளை கண்டறியும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மகளிர் ஐபிஎல் தொடருக்கான ஏலம் பிப்ரவரி 13ஆம் தேதியன்று நடைபெற்றது. சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற அண்டர்-19 உலக கோப்பையை வென்ற இந்திய மகளிர் கிரிக்கெட்டில் இந்த ஐபிஎல் தொடரும் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உத்திரபிரதேசம் ஆகிய 5 அணிகளைச் சேர்ந்த நிர்வாகங்கள் உலகம் முழுவதிலுமிருந்து பங்கேற்ற 409 வீராங்கனைகளை வாங்குவதற்காக போட்டி போட்டன.

- Advertisement -

சாய்த்த மங்கை:
அதில் எதிர்பார்க்கப்பட்டது போலவே இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திர அதிரடி தொடக்க வீராங்கனையான ஸ்மிருதி மந்தனாவை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி நிர்வாகம் 3.40 கோடி என்ற பெரிய தொகைக்கு போட்டி போட்டு வாங்கியது. அதே போல் ஹர்மன்ப்ரீத் கௌர் 1.8 கோடி, தீப்தி சர்மா 2.6 கோடி, ஜெமிமா ரோட்ரிகர்ஸ் 2.2 கோடி, ஷபாலி வர்மா 2 கோடி, ரிச்சா கோஸ் 1.9 கோடி, பூஜா வஸ்திரகர் 1.9 கோடி என நிறைய இந்திய வீராங்கனைகள் இந்த ஏலத்தில் பெரிய தொகைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

ஆனால் உலகிலேயே ஐபிஎல் தொடரை விட சிறந்த டி20 கிரிக்கெட் தொடர் என்று அண்டை நாடான பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் மார்தட்டும் பிஎஸ்எல் தொடரில் அந்நாட்டின் உச்சகட்ட நட்சத்திரமாகவும் கேப்டனாகவும் விளங்கும் பாபர் அசாம் சம்பளத்தை விட ஒவ்வொரு இந்திய வீராங்கனைகளும் இந்த மகளிர் ஐபிஎல் தொடரில் அதிக சம்பளத்தை பெற்றுள்ளார்கள். குறிப்பாக பாபர் அசாம் வாங்கும் 1.2 கோடி சம்பளத்தை விட ஸ்மிரிதி மந்தனா இருமடங்கு அதிக சம்பளத்தை வாங்குகிறார். அத்துடன் பிஎஸ்எல் தொடரில் வெற்றி பெறும் அணிக்கு மந்தனாவின் சம்பளத்தை விட குறைவாக வெறும் 3 கோடி மட்டுமே பரிசு தொகையாக வழங்கப்படுகிறது.

- Advertisement -

இதனால் எங்களுடைய ஒரே ஒரு சாதனை சிங்கப்பெண் உங்களுடைய கேப்டன் மற்றும் பிஎஸ்எல் தொடரின் மதிப்பை தாண்டி விட்டதாக பாகிஸ்தான் இந்திய ரசிகர்கள் கலாய்க்கிறார்கள். முன்னதாக கடந்த சில வருடங்களாகவே ஐபிஎல் தொடரை விட பிஎஸ்எல் தொடர் தான் சிறந்தது என்று பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் தெரிவித்து வருவதே இந்திய ரசிகர்கள் இப்படி பதிலடி கொடுப்பதற்கு முக்கிய காரணமாகும். குறிப்பாக தற்போது பாகிஸ்தானில் துவங்கியுள்ள 2023 பிஎஸ்எல் தொடர் துவங்குவதற்கு முன்பாக முன்பாக கூட ஷாஹீன் அப்ரிடி போன்ற நட்சத்திர பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரை விட தங்களது தொடர் தான் சிறந்தது என்றும் அதை வெளிநாட்டவர்களிடம் கேட்டு அறியுமாறும் தெரிவித்திருந்தனர்.

ஆனால் பாபர் அசாம் 1.2, ஷாஹீன் அப்ரிடி 1.6 என 2 பாகிஸ்தான் வீரர்களின் சம்பளத்தை சேர்த்தால் கூட வெறும் 2.8 கோடி தான் வருகிறது. மறுபுறம் ஸ்மிருதி மந்தனாவின் சம்பளம் 3.4 கோடியாகும். இருப்பினும் டெயில் எண்டருக்கும் பாபர் அசாமுக்கும் பந்து வீசுவது ஒன்று தான் என்பது போல் இந்திய ரசிகர்கள் தேவையற்ற ஒப்பீடு செய்து வருவதாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இதற்கு பதிலடி கொடுக்கின்றனர்.

இதையும் படிங்க: அஷ்வினை விட சேவாக் மாதிரி அவர் தான் இந்தியாவுக்கு சூப்பரான தொடக்கம் கொடுத்துருக்காரு – ரவி சாஸ்திரி பாராட்டு

ஆனால் பிஎஸ்எல் தொடரால் தரத்திலும் சரி பணத்திலும் சரி எங்களுடைய ஐபிஎல் தொடரை மட்டுமல்ல மகளிர் தொடரை கூட எப்போதும் ஏணி வச்சாலும் எட்ட முடியாது என்று இந்திய ரசிகர்கள் பாகிஸ்தானை தொடர்ந்து சமூக வலைதளங்களில் கலாய்த்து வருகிறார்கள்.

Advertisement