இந்திய டெஸ்ட் அணியில் முடிவுக்கு வந்த 2 வீரர்களின் கரியர். இனிமே வாய்ப்பே கிடையாது – பி.சி.சி.ஐ அறிவிப்பை கவனிச்சீங்களா?

Umesh-Yadav
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு ஜூலை மாதம் முதல் வாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியானது அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. மிகப்பெரிய இந்த தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் பட்டியல் அனைவரது மத்தியிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

IND

- Advertisement -

இந்நிலையில் இந்த வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளுக்கான அணியை இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் சீனியர் வீரர்கள் பெரிய அளவில் ஓய்வு கொடுக்காமல் ரோகித் சர்மாவின் தலைமையிலேயே இரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்படி வெளியான இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இரண்டு வீரர்கள் நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதன்படி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய அணியில் விளையாடிய 35 வயதான புஜாரா அந்த போட்டியில் சோபிக்காததால் தற்போது அவர் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டுள்ளார்.

Umesh

மேலும் இனி அவருக்கு இந்த இடம் கிடைப்பது கடினம் என்று கூறப்படுகிறது. இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான அவர் இதுவரை 103 போட்டிகளில் விளையாடியுள்ள வேளையில் 35 வயதான அவர் இனியும் தொடர்ந்து இடம்பெற வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. எனவே அவரது இடம் எதிர்காலத்தை கணக்கில் கொண்டு இளம்வீரருக்கு வழங்கப்பட உள்ளது.

- Advertisement -

அதேபோன்று ஏற்கனவே இந்திய அணியில் இருந்து வயது மூப்பு காரணமாக இஷாந்த் சர்மா கழட்டிவிடப்பட்ட வேளையில் தற்போது மற்றொரு அனுபவ வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவ் நீக்கப்பட்டுள்ளார். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய அவரும் பந்து வீச்சில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தாததால் 35 வயதான இவரும் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக வரப்போறீங்களா? சேவாக் கொடுத்த நேரடியான பதில் இதோ

கடந்த 2011 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான உமேஷ் யாதவி இதுவரை இந்திய அணிக்காக 57 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 170 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வீரர்களுக்கும் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை என்று கூறப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement