இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக வரப்போறீங்களா? சேவாக் கொடுத்த நேரடியான பதில் இதோ

Sehwag
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் முதன்மை அணியாக திகழும் இந்தியாவுக்கு விளையாடும் தரமான வீரர்களை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை நிர்வகிக்கும் தேர்வுக்குழுவை புதிதாக பிசிசிஐ நியமிக்க உள்ளது. அதனால் அந்த பதவிக்கு யார் வரப்போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு கடந்து சில தினங்களாகவே இந்திய ரசிகர்களிடம் காணப்படுகிறது. ஏனெனில் பெரும்பாலான ரசிகர்கள் அறியாத முன்னாள் வீரரான எம்எஸ்கே பிரசாத் முந்தைய தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்று அம்பத்தி ராயுடுவின் கேரியரை வீணடித்தது 2019 உலகக் கோப்பையில் இந்தியா தோல்வியை சந்திப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.

அவருக்குப்பின் சர்வதேச கிரிக்கெட்டில் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியராக சாதனை படைத்து ஓரளவு பிரபலமாக இருக்கும் சேட்டன் சர்மா தேர்வுக்குழு தலைவராக வந்ததால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்தது. ஆனால் அவரும் சஞ்சு சாம்சன், நடராஜன் போன்ற வீரர்களுக்கு மறு வாய்ப்புகள் கொடுக்காமல் 2022 ஆசிய மற்றும் டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்திய அணியை தேர்ந்தெடுத்து சுமாராகவே செயல்பட்டார். அதை விட பிரபல தொலைக்காட்சியின் ரகசிய கேமராவில் சிக்கி இந்திய கிரிக்கெட்டின் பின்னணியில் நடக்கும் பல உண்மைகளை உளறிய அவர் சர்ச்சைக்குரிய முறையில் சமீபத்தில் பதவி விலகினார்.

- Advertisement -

சேவாக் பதில்:
அதனால் எஸ்எஸ் தாஸ் தலைமையில் எஸ் சரத், சுப்ரதோ பேனர்ஜி, சலீல் அன்கோலா ஆகியோர் அடங்கிய தற்காலிக தேர்வுக்குழு 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் விளையாடிய அணியை தேர்வு செய்தது. ஆனால் அதிலும் இந்தியா தோல்வியை சந்தித்துள்ள நிலையில் அடுத்ததாக தேர்வுக்குழுவில் இடம் பெற விரும்பும் தகுதியானவர்கள் ஜூன் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி 7 டெஸ்ட் அல்லது 30 முதல் தர போட்டிகள் அல்லது 10 ஒருநாள் மற்றும் 20 முதல் தர போட்டிகளில் விளையாடியவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

அந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே முன்னாள் இந்திய ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் அடுத்த தேர்வுக்குழு தலைவராக பொறுப்பேற்க உள்ளதாக நிறைய செய்திகள் உலா வந்தன. மேலும் யார் என்றே தெரியாத முன்னாள் வீரர்களுக்கு பதிலாக இந்திய கிரிக்கெட்டில் அதிரடி எனும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தத்தை காண்பித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 முச்சதங்கள் அடித்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த அவர் தேர்வுக்குழு தலைவராக வந்தால் சிறப்பாக இருக்கும் என்று நிறைய ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் பதவியை ஏற்குமாறு யாரும் தம்மை தொடர்பு கொண்டு அணுகவில்லை என்று வீரந்தேர் சேவாக் தெரிவித்துள்ளார். இது பற்றி பிரபல செய்தி நிறுவனம் நேரடியாக சென்று எழுப்பிய கேள்விக்கு “இல்லை” என்று அவர் பதிலளித்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. முன்னதாக 2017ஆம் ஆண்டு பயிற்சியாளராக பொறுப்பேற்குமாறு அவரிடம் பிசிசிஐ கேட்ட போது தாம் விரும்பும் வீரர்களை தேர்வு செய்தால் மட்டுமே அந்த பதவிக்கு வர முடியும் என்று தெரிவித்தார்.

இருப்பினும் அதற்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததால் 2017 சாம்பியன்ஸ் ட்ராபியில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்திற்கு பயிற்சியாளராக செல்ல காத்திருந்த சேவாக் கடைசி நேரத்தில் அந்த முடிவை வாபஸ் பெற்றதாக கடந்த சில மாதங்களுக்கு முன் தெரிவித்திருந்தார். மேலும் தேர்வுக்குழு தலைவர் பதவிக்கு மிகவும் குறைவான சம்பளம் கொடுக்கப்படுவதால் சேவாக் நட்சத்திர ஜாம்பவான் முன்னாள் வீரர்கள் விண்ணப்பிப்பதில்லை என்றும் அதனாலேயே பிரபலமில்லாத சில முன்னாள் வீரர்கள் அந்த பதவிக்கு வருவதாக ஒரு பிசிசிஐ நிர்வாகி சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:IND vs WI : தமிழக வீரர்கள் யாருமே இல்ல, வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணி இதோ

மொத்தத்தில் இந்திய அணியின் அடுத்த தேர்வுக்குழு தலைவராக மீண்டும் ஏதோ ஒரு குறைந்த அனுபவம் கொண்ட ரசிகர்களிடம் பிரபலமில்லாத முன்னாள் வீரர் வரப்போகிறார் என்று எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement