
இந்திய கிரிக்கெட் அணியின் அனுபவ வீரர்களான சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜின்க்யா ரஹானே ஆகியோர் கடந்த சில ஆண்டுகளாகவே டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணியில் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறார்கள். தற்போது தங்களது கரியரின் கடைசி கட்டத்தை எட்டியுள்ள அவர்கள் இருவருமே இந்திய டெஸ்ட் அணியின் கம்பேக் அழைப்புக்காக காத்திருக்கிறார்கள்.
ஆனால் இன்றளவும் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு என்பது கிடைக்காமல் இருந்து வருகிறது. தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் அனுபவ வீரர்கள் இன்றி இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி விளையாடி வரும் வேளையில் அவர்களைப் போன்ற அனுபவ வீரர்கள் வேண்டும் என்று பலரும் கூறி வந்தனர்.
ஆனால் இனி அவர்கள் இருவருமே இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பில்லை என்கிற வகையில் பிசிசிஐ ஒரு முடிவு எடுத்துள்ளது. அந்த வகையில் பிசிசிஐ எடுத்த அந்த நடவடிக்கை யாதெனில் : எதிர்வரும் உள்ளூர் தொடரான துலீப் டிராபி தொடருக்கான இரண்டு மண்டல அணியை பிசிசிஐ வெளியிட்டு இருந்தது.
அதில் அனுபவ வீரர்களான சத்தீஸ்வர் புஜாரா மற்றும் அஜின்க்யா ரஹானே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர்களது டெஸ்ட் கரியரானது முடிவுக்கு வரும் என்று தெரிகிறது. அவர்களை தவிர்த்து மற்ற இளம் வீரர்கள் பலரும் மண்டல அணிகளில் இடம்பெற்றுள்ளனர்.
இதன் காரணமாக இனி அவர்கள் இருவரும் இந்திய அணிக்கு திரும்ப வாய்ப்பே இல்லை என்று கூறப்படுகிறது. ஏற்கனவே புஜாராவின் மூன்றாவது இடத்தில் தற்போது தமிழக வீரரான சாய் சுதர்சன் விளையாடி வரும் வேளையில் ரஹானே விளையாடும் ஐந்தாவது இடம் கருண் நாயருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கபில் தேவ் இவர்தான்.. அனுபவ வீரருக்கு – சேத்தன் சர்மா பாராட்டு
இனிவரும் டெஸ்ட் தொடர்களிலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இளம் வீரர்களுக்கே வாய்ப்பு கிடைக்கும் என்பதனால் அவர்கள் இருவரது கரியர் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருக்கும் வேளையில் ரஹானே 85 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.