இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் நடப்பு ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது இறுதி கட்டத்தை எட்டியுள்ள வேளையில் இந்த தொடரினை இங்கிலாந்து அணி கைப்பற்றுமா? அல்லது இந்த தொடரை இந்திய அணி சமன் செய்யுமா? என்பது இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். தற்போது வரை இந்திய அணி இந்த தொடரில் ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இந்திய அணியின் தற்போதைய கபில் தேவ் : சேத்தன் சர்மா
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது நேற்று ஜூலை 31-ஆம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கு முன்னதாக இந்திய அணியின் வீரர்களை பாராட்டி பேசியிருந்த முன்னாள் வீரரான சேத்தன் சர்மா சில வெளிப்படையான கருத்துக்களையும் பகிர்ந்திருந்தார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இங்கிலாந்து மண்ணில் எப்போது பந்து அதிகளவில் ஸ்விங்காகும் அதனால்தான் போட்டியின் ஐந்தாம் நாள் கூட பந்து ஸ்விங்காவதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த தொடரில் இந்திய அணியின் பலவீரர்கள் சிறப்பாக செயல்பட்டனர்.
குறிப்பாக கே.எல் ராகுல், ஜடேஜா, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இங்குள்ள சூழலை சரியாக கணித்து சிறப்பாக விளையாடி வருகின்றனர். கே.எல் ராகுல் இந்திய அணியின் முதுகெலும்பாக திகழ்ந்து வருகிறார். ஏனெனில் போட்டியின் துவக்க வீரராக களமிறங்கும் அவர் 40, 50 ரன்கள் அடித்தால் கூட நிலையாக நின்று நல்ல அடித்தளத்தை அமைக்கிறார்.
அதன் காரணமாக மிடில் ஆர்டரில் வரும் வீரர்களுக்கு அழுத்தம் குறைகிறது. அதேபோன்று ரவீந்திர ஜடேஜா தான் என்னுடைய ஃபேவரைட் கிரிக்கெட்டர். அவருடைய திறமைக்கான பாராட்டு இன்னும் அவருக்கு முழுமையாக கிடைக்கவில்லை. என்னை பொருத்தவரை ஒரு முழுமையான வீரர் என்றால் ஜெடேஜா தான் அவரால் பேட்டிங், பௌலிங் மற்றும் ஃபீல்டிங் என அனைத்து துறையிலும் 100% சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த முடியும்.
இதையும் படிங்க : ஓவல் டெஸ்ட் : விராட் கோலியை பின்னுக்கு தள்ளிய புதிய கேப்டன் சுப்மன் கில் – விவரம் இதோ
அவர் எனக்கு அப்படியே கபில் தேவை ஞாபகப்படுத்துகிறார். தற்போதைய இந்திய அணியின் கபில் தேவ் என்றால் நான் ஜடேஜாவினை தான் கூறுவேன். அதன் காரணமாகவே அவர் உலகின் நம்பர் 1 டெஸ்ட் ஆல்ரவுண்டராக இருப்பதாகவும் சேத்தன் சர்மா பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



