- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஹாட்ரிக் சதங்கள்! முரட்டு பார்முக்கு திரும்பிய புஜாரா. கவுண்டி போட்டியில் நடந்தது என்ன? – கம் பேக் உறுதி

இங்கிலாந்தின் பிரபல உள்ளூர் கிரிக்கெட் தொடரான கவுண்டி சாம்பியன்ஷிப் தொடரில் டிவிஷன் 2 பிரிவில் சசக்ஸ் மற்றும் டுர்ஹாம் ஆகிய அணிகள் மோதிய போட்டி ஏப்ரல் 28-ஆம் தேதியன்று துவங்கியது. அப்போட்டியில் டாஸ் வென்ற டுர்ஹாம் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்த நிலையில் சசக்ஸ் அணியின் அற்புதமான பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாத அந்த அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ட்ரேவஸ்கிஸ் 88 ரன்கள் எடுத்த நிலையில் சசக்ஸ் சார்பில் அதிகபட்சமாக டாம் கிளார்க் மற்றும் ஆரோன் பியர்ட் ஆகியோருடன் எடுத்தனர்.

அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய சசக்ஸ் அணிக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டாம் ஹெய்ன்ஸ் 54 ரன்கள் எடுக்க அலெஸ்டர் ஓர் 27, மேசன் கிரேன் 13 போன்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாகி நடையை கட்டினார்.

- Advertisement -

புஜாரா அசத்தல்:
அந்த சமயத்தில் களமிறங்கிய நட்சத்திர இந்திய வீரர் செடேஸ்வர் புஜாரா தனக்கே உரித்தான பாணியில் சரிந்த தனது அணியை தூக்கி நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். அவருக்கு உறுதுணையாக டாம் அஸ்லோப் கை கொடுக்க 4-வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் குவித்த இந்த ஜோடியில் டாம் அஸ்லோப் 66 ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த டாம் கிளார்க் உடன் கை கோர்த்த புஜாரா மீண்டும் டுர்ஹாம் பந்துவீச்சாளர்களை நிதானமாக எதிர்கொண்டு ரன்களைக் குவித்தார்.

4-வது விக்கெட்டுக்கு 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்த இந்த ஜோடியில் டாம் கிளார்க் 50 ரன்களில் ஆட்டமிழந்தாலும் மறுபுறம் தொடர்ந்து டுர்ஹாம் அணியினருக்கு பெரும் தொல்லையாக அமைந்து சிம்ம சொப்பனமாக பேட்டிங் செய்த புஜாரா 16 பவுண்டரிகள் உட்பட அற்புதமான சதமடித்து 2-வது நாளான நேற்றைய ஆட்ட நேர முடிவில் 128* ரன்கள் எடுத்து கடைசி வரை அவுட்டாகாமல் களத்தில் நங்கூரமாக நின்று பேட்டிங் செய்து வருகிறார். இதனால் 139 ரன்கள் முன்னிலை பெற்றுள்ள சசக்ஸ் இந்த போட்டியில் தோல்வியை தவிர்த்து நல்ல நிலைமையில் உள்ளது.

- Advertisement -

ஹாட்ரிக் சதங்கள்:
முன்னதாக கடந்த 10 வருடங்களாக இந்திய டெஸ்ட் பேட்டிங் துறையின் முதுகெலும்பாக விளங்கி வந்த புஜாரா ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது போன்ற சரித்திர வெற்றிகளுக்கு முக்கிய பங்காற்றி வந்தார். ஆனால் 2019க்கு பின் அவரின் பேட்டிங்கில் சரிவு ஏற்பட்ட நிலையில் 2 வருடங்களாக ஒரு சதம் கூட அடிக்க முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடிய அவரை சமீபத்தைய இலங்கைக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரின்போது இந்திய அணி நிர்வாகம் அதிரடியாக நீக்கியது.

அந்த மோசமான சூழ்நிலையில் ரஞ்சி கோப்பையில் சொதப்பிய அவரை ஐபிஎல் தொடரிலும் எந்த அணியும் வாங்காத காரணத்தால் இந்த வருட கவுண்டி தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாட தன்னை ஒப்பந்தம் செய்துகொண்டார். அந்த வகையில் டெர்பிஷைர் அணிக்கு எதிரான முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் பாலோ – ஆன் பெற்ற தனது அணிக்கு 2வது இன்னிங்சில் நங்கூரமாக நின்று சொல்லி அடித்த புஜாரா இரட்டை சதமடித்து அந்த போட்டி ட்ராவில் முடிவடையும் வரை அவுட்டாகாமல் 201* ரன்கள் விளாசி 2 வருடங்களுக்குப்பின் சூப்பரான பார்முக்கு திரும்பினார். அதோடு நிற்காத அவர் வோர்ஸெஸ்ட்க்ஷைர் அணிக்கு எதிரான 2-வது போட்டியிலும் தனி ஒருவனாக அபார சதமடித்து 109 ரன்கள் விளாசிய போதிலும் அந்த போட்டியில் அவரது அணி தோல்வி அடைந்தது.

- Advertisement -

கம் பேக் உறுதி:
அந்த நிலைமையில் தற்போது டுர்ஹாம் அணிக்கு எதிரான 3-வது போட்டியிலும் சதமடித்து 128* ரன்களை விளாசியுள்ள அவர் அடுத்தடுத்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக சதங்களை அடித்து ஹாட்ரிக் சதங்களை விளாசி முரட்டுத்தனமான பார்முக்கு திரும்பி தன் மீதான விமர்சனங்களுக்கு அழுத்தமான முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தற்போது 34 வயதாகும் அவர் இந்த அடுத்தடுத்த சிறப்பான செயல்பாடுகளால் மீண்டும் இந்திய அணியில் கம் பேக் கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

ஏனெனில் இந்தியா அடுத்ததாக வரும் ஜூலை மாதம் 1-ஆம் தேதி இதே இங்கிலாந்து மண்ணில் அந்த அணிக்கு எதிராக பாதியில் நிறுத்தப்பட்டுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் விளையாட உள்ளது. அதில் 4 போட்டிகளின் முடிவில் 2 – 1* என என முன்னிலை வகிக்கும் இந்திய அணியில் புஜாரா சேர்க்கப்படுவார் என நம்பப்படுகிறது.

- Advertisement -

ஏனென்றால் ஜாம்பவான் ராகுல் டிராவிட்டை போல பொறுமையாகவும் நிதானமாகவும் விளையாடி டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் என பெயரெடுத்த புஜாராவிடம் ஏற்கனவே ஏகப்பட்ட அனுபவம் உள்ள நிலையில் மோசமான பார்ம் மட்டுமே இந்திய அணியில் அவரின் இடத்தை பறிபோக செய்தது.

இதையும் படிங்க : இந்த ஐ.பி.எல் தொடரின் ஸ்ட்ராங்கான டீம்னா அது இந்த டீம் தான் – கெவின் பீட்டர்சன் அதிரடி

ஆனால் தற்போது ஹாட்ரிக் சாதனைகளால் நல்ல பார்முக்கு திரும்பியுள்ள அவர் இழந்த பார்மை மீட்டடெடுத்துள்ளதால் ராகுல் டிராவிட் – ரோகித் சர்மா போன்ற அனுபவத்தை மதிக்கும் பயிற்சியாளரும் கேப்டனும் அவருக்கு மீண்டும் வாய்ப்பளிப்பார்கள் என நம்பலாம்.

- Advertisement -