இந்த ஐ.பி.எல் தொடரின் ஸ்ட்ராங்கான டீம்னா அது இந்த டீம் தான் – கெவின் பீட்டர்சன் அதிரடி

Pietersen
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி துவங்கிய 15-வது ஐபிஎல் தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் முடிவில் சாம்பியன் அணிகளான மும்பை மற்றும் சென்னை அணி ஆகியவை தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இரண்டு இடங்களில் இருக்கின்றன. அதன் காரணமாக இவ்விரு அணிகளும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவது கடினமாகி உள்ள வேளையில் மற்ற அனைத்து அணிகளும் தற்போது தங்களது பிளே ஆப் சுற்று வாய்ப்பிற்காக கடுமையாக போட்டி போட்டு வருகின்றன.

Hardik Pandya GT Vs RR 2.jpeg

- Advertisement -

இதில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜென்ட்ஸ் ஆகிய மூன்றும் மிக பலம் வாய்ந்த அணிகளாக புள்ளிப் பட்டியலில் முன்னிலையில் இருக்கின்றன. அவர்களை தவிர்த்து மற்ற அணிகளும் சரிசமமாக தற்போது போட்டியினை வெளிப்படுத்தி வருவதால் இந்த ஐபிஎல் தொடரானது தற்போது அதிக சுவாரசியத்தை பெற்றுள்ளது என்று கூறலாம்.

ஏற்கனவே கடந்த ஆண்டு 8 அணிகளுடன் நடைபெற்ற இந்த தொடரானது இம்முறை 10 அணிகளுடன் நடைபெற்று வருவதால் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்றும் எந்த அணி மிக வலுவான அணி என்பது குறித்தும் பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இந்த ஐபிஎல் தொடரில் மிக வலுவான அணியாக தான் கருதும் அணி இதுதான் என்பது குறித்து ஒரு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

gt

இதுகுறித்து அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்டிக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி மிக வலிமையான அணியாக பார்க்கிறேன். அவர்களை வீழ்த்துவது என்பது அனைத்து அணிகளுக்குமே எளிதாக இருக்காது. ஏனெனில் மோசமாக விளையாடினால் கூட குஜராத் அணியால் எப்படியாவது போட்டியில் வெற்றிபெற முடிகிறது.

- Advertisement -

அதோடு அவர்களுக்கு அதிர்ஷ்டமும் கை கொடுப்பதால் தொடர்ச்சியாக வெற்றிகளை மட்டுமே அவர்கள் ருசித்து வருகிறார்கள். இதன் காரணமாக அவர்களை தடுத்து நிறுத்துவது என்பது எளிதல்ல என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் :

இதையும் படிங்க : பரவால்ல வெற்றிய நீங்க வெச்சுக்கோங்க! லக்னோவுக்கு பரிசளித்த பஞ்சாப் – வகைவகையாய் கலாய்க்கும் ரசிகர்கள்

அதே வேளையில் ராஜஸ்தான் அணியும் தற்போது பலம் வாய்ந்த அணியாக இத்தொடரில் மாறியுள்ளது. டெல்லி அணியை நான் மிகவும் எதிர்பார்த்தேன். ஆனால் தற்போது வரை அவர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. இருப்பினும் அவர்களால் முதல் நான்கு இடத்திற்குள் வரமுடியும் என்று தான் நம்புவதாக கெவின் பீட்டர்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement