யோ யோ டெஸ்டில் தோல்வியடைந்த 22 வயது இளம் வீரர் – இந்திய அணியில் விளையாட முடியாத சோகம்

ind
- Advertisement -

இந்திய அணியில் விளையாட வேண்டும் எனில் அனைத்து வீரர்களுக்கும் உடல் தகுதி தேர்வான யோ-யோ டெஸ்ட் கட்டாயம் என்பது நாம் அறிந்ததே. யோ யோ டெஸ்டின் போது 16.5 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே அவர்கள் உடற் தகுதியில் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதும் அப்படி தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்திய அணியில் விளையாட முடியும் என்பதும் நிதர்சனமான உண்மை .இதன் காரணமாக அனைத்து வீரர்களும் தங்களது உடலைக் கட்டுக்கோப்பாகவும், திறம்படவும் வைத்திருப்பார்கள்.

pandya 1

- Advertisement -

மேலும் தொடரின் இடையே வீரர்கள் காயம் ஏற்பட்டு வெளியேறும் பட்சத்தில் கட்டாயம் தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று சிகிச்சை மற்றும் பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டு மீண்டும் யோ-யோ டெஸ்டில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே இந்திய அணிக்கு திரும்ப முடியும். அந்த வகையில் தற்போது இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக வெளியேறிய பல வீரர்கள் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் தங்கி சிகிச்சை மற்றும் பயிற்சி எடுத்து வருகின்றனர்.

அந்த வகையில் அண்மையில் குஜராத் அணியின் கேப்டனும், இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டருமான ஹர்டிக் பாண்டியா தற்போது காயத்தில் இருந்து மீண்டு தனது உடற் தகுதியை நிரூபித்து யோ-யோ டெஸ்டில் தேர்ச்சியும் அடைந்துள்ளார்.

Shaw

ஆனால் அதே போன்று யோ-யோ தேர்வில் இந்திய அணியின் இளம் வீரரான ப்ரித்வி ஷா தோல்வி அடைந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் தக்க வைக்கப்பட்ட அவர் யோ-யோ டெஸ்டில் 15-க்கும் குறைவான மதிப்பெண்களை மட்டுமே பெற்றுள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரால் மீண்டும் இந்திய அணியில் குறிப்பிட்ட காலத்திற்கு இணைய முடியாது என்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இது வெறும் பிட்னஸ் டெஸ்ட் தான் என்பதனால் ஐபிஎல் தொடரில் விளையாட இவருக்கு எந்த நிபந்தனையும் கிடையாது. தடையின்றி இவர் ஐபிஎல் போட்டிகளில் விளையாடலாம் என்று முக்கிய நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : டி20 கிரிக்கெட்டுல எனக்கு பிடிச்ச பேட்டிங் பொசிஷன்னா அது இந்த இடம் தான் – ஷ்ரேயாஸ் ஐயர் ஓபன்டாக்

அதுமட்டுமின்றி அடுத்தடுத்து மும்பை அணிக்காக ரஞ்சி போட்டிகளில் அவர் விளையாடியுள்ள காரணமாகவும் சோர்வடைந்த அவரது நிலை யோ-யோ டெஸ்ட் மதிப்பெண்களில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார். இருப்பினும் இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ப்ரித்வி ஷா மீண்டும் யோ-யோ டெஸ்ட்டில் தேர்ச்சி அடைந்தால் மட்டுமே இந்திய அணிக்கு தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுமவது குறிப்பிடத்தக்கது.

Advertisement