- Advertisement -
இந்திய கிரிக்கெட்

எதை சொன்னாலும் கேக்க மாட்றாரு.. ரஞ்சி அணியில் இருந்தும் கழட்டிவிடப்பட்ட ப்ரித்வி ஷா – இதுதான் காரணம்

மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான ப்ரித்வி ஷா கடத்த 2018 மற்றும் 19-ஆம் ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்டோர் இந்திய அணியை தலைமை தாங்கி உலகக் கோப்பையை வாங்கி கொடுத்தார். அதன் பின்னர் தனது 18-வது வயதிலேயே இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் வெஸ்டட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன் காரணமாக இந்திய அணியின் அடுத்த நட்சத்திர வீரராக அவர் பார்க்கப்பட்டார்.

மும்பை அணியிலிருந்து நீக்கப்பட்ட ப்ரித்வி ஷா :

ஆனால் இந்திய அணிக்காக அறிமுகமான சில போட்டிகளுக்குப் பிறகு ஃபார்ம் அவுட்டான அவர் ஊக்க மருந்து பிரச்சனையில் சிக்கி தடையை சந்தித்தார். அதன் பின்னர் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த அவர் அந்த தொடரின் முதல் போட்டியோடு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். பின்னர் படிப்படியாக அவரது பேட்டிங் பார்மும் குறைந்தது, கூடுதலாக உடல் எடையும் அதிகரித்ததால் அவர் பெரிய பின்னடைவை சந்தித்தார்.

- Advertisement -

இந்தியாவின் அடுத்த நட்சத்திர வீரராக பார்க்கப்பட்ட அவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதும், பிட்னஸ் விஷயத்தில் கவனமாக இல்லாததன் காரணமாக ஆசிய கோப்பை இந்திய அணி, இந்திய ஏ அணி, துலீப் டிராபி அணி என எந்த ஒரு அணியிலும் இடம் பிடிக்கவில்லை. இதன் காரணமாக விரக்தி அடைந்த அவர் கவுண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்று அங்கு விளையாடி வந்தார்.

அந்த வகையில் இங்கிலாந்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு மீண்டும் மும்பை ரஞ்சி அணியில் இடம் கிடைத்திருந்த வேளையில் நடைபெற்று வரும் ரஞ்சி கோப்பை தொடரிலும் அவர் மோசமான ஆட்டத்தை இதுவரை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில் தற்போது ரஞ்சி கோப்பை தொடர்கான மும்பை அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டுள்ளார். ஒரு பேட்ஸ்மேன் பார்ம் அவுட்டாவது என்பது சாதாரண விடயம் தான். அதனால் அவர் அந்த அணியில் இருந்து வெளியேற்றப்படவில்லை.

- Advertisement -

தொடர்ச்சியாக அவர் செய்து வரும் சில மோசமான நடவடிக்கைகள் தான் நீக்கத்திற்கு காரணம் என மும்பை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது குறித்து மும்பை தேர்வுக்குழுவினர் ஒருவர் பேசுகையில் : அவர்மீது நாங்கள் ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். ஏனெனில் எம்சிஏ விதிப்படி ஒரு வீரரின் உடலில் 35 சதவீதம் வரை தான் கொழுப்பு இருக்க வேண்டும். ஆனால் ப்ரித்வி ஷா பிட்னஸில் கொஞ்சம் கவனம் செலுத்தாமல் இருக்கிறார். அதே போன்று நாங்கள் சொல்லும் எந்த ஒரு செயலையும் அவர் காது கொடுத்து கேட்பதில்லை.

இதையும் படிங்க : ஏற்கனவே அணியில் இருந்து நீக்கப்பட்ட பாபர் அசாமை மீண்டும் தண்டிக்க இருக்கு – பாகிஸ்தான் வாரியம்

பயிற்சிக்கு வந்தால் கூட அவருக்கு தோன்றும் சில மணி நேரங்கள் தான் பயிற்சி செய்கிறார். மற்றபடி பல்வேறு நேரங்களை அவர் பயிற்சியை தவிர்த்து விடுகிறார். இதனால் தான் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை நாங்கள் எடுத்துள்ளோம். அதன் காரணமாகவே அவர் ரஞ்சி கோப்பை அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -