பாகிஸ்தான் கிரிக்கெட் அணியானது கடந்த சில ஆண்டுகளாகவே சொந்த மண்ணில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருவது அந்த அணியின் மீது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியது. வெளிநாடுகளில் நடைபெறும் தொடர்களை தாண்டி உள்நாட்டிலும் அந்த அணி தொடர் தோல்விகளை சந்தித்து வருவது ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது.
பாபர் அசாமுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் :
அதன் காரணமாக பாகிஸ்தான் அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம், ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா ஆகிய முக்கிய சீனியர் வீரர்களை அந்த அணி டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றியது.
தற்போது பாகிஸ்தான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து அணியானது பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இன்னிங்ஸ் வெற்றியை ருசித்தது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சீனியர் வீரர்களான ஷாஹீன் அப்ரிடி, நசீம் ஷா, பாபர் அசாம் ஆகியோரை அணியிலிருந்து நீக்கியிருந்தது.
அவர்களுக்கு பதிலாக புதிய வீரர்களை சேர்த்திருந்த வேளையில் ஒரு வழியாக இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று பாகிஸ்தான் அணி மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியுள்ளது. இப்படி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பாபர் அசாம் கழட்டிவிடப்பட்ட வேளையில் அடுத்ததாக அவருக்கு ஒருநாள் போட்டிகளிலும் வாய்ப்பு மறுக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடைபெறும் முன்னர் பாகிஸ்தான அணி 9 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கும் வேளையில் அந்த ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் பாபர் அசாம் நீக்கப்படுவார் என்றும் புதிய கேப்டனாக முகமது ரிஸ்வான் அறிவிக்கப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? மாட்டாரா? என்ன நடக்கும் – விவரம் இதோ
முன்னணி நட்சத்திர வீரரான பாபர் அசாம் அணியிலிருந்து நீக்கப்பட்டது பலரது மத்தியிலும் விவாத பொருளாக மாறியிருக்கும் வேளையில் தற்போது அடுத்ததாக ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்தும் அவர் நீக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது பாபர் அசாமின் கரியருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம் என்றும் தெரிகிறது.



