இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? மாட்டாரா? என்ன நடக்கும் – விவரம் இதோ

Pant
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மனான ரிஷப் பண்ட் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 99 ரன்கள் குவித்து அசத்தினார். அதோடு முதல் இன்னிங்சில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராகவும் அவரே இருந்தார். அந்த அளவிற்கு அவர் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விளையாடுவாரா? :

டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணியின் மிக முக்கியமான வீரராக விளையாடி வரும் அவர் முதன்மை விக்கெட் கீப்பராக நீடித்து வருகிறார். ஆனால் தற்போது அவர் நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று சில தகவல்கள் வெளியாகி வருகின்றன.

- Advertisement -

ஏனெனில் இந்த தொடரின் முதலாவது போட்டி பெங்களூரு நகரில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றபோது பயிற்சியின் இடையே ரிஷப் பண்ட் தான் அறுவை சிகிச்சை செய்து கொண்ட காலிலேயே பந்து பட்டதால் வலியால் துடித்தார். இதனால் அவர் அந்தப்போட்டியின் மூன்றால் நாள் அன்று அவர் விக்கெட் கீப்பிங் செய்யக்கூட மைதானத்திற்கு வரவில்லை.

அவருக்கு பதிலாக மாற்று விக்கெட் கீப்பராக துருவ் ஜுரேல் தான் விக்கெட் கீப்பிங் பணியை மேற்கொண்டார். இந்நிலையில் முதல் போட்டியின் போது காயமடைந்த அவர் இரண்டாவது போட்டியில் விளையாடி காயம் அதிகரிக்கக்கூடாது என்பதனால் அவரை இந்திய மருத்துவ குழு கண்காணிப்பில் வைத்துள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக நிச்சயம் முன்னெச்சரிக்கை காரணமாக அவர் இரண்டாவது போட்டியில் விளையாட மாட்டார் என்று தெரிகிறது. மேலும் ரிஷப் பண்ட்டின் காயம் குறித்து அணி நிர்வாகம் கூடுதல் கவனத்துடன் இருப்பதாக ரோகித் சர்மாவை கூறியுள்ளதால் இரண்டாவது போட்டியில் ரிஷப் பண்ட் விளையாட வாய்ப்பு குறைவு தான்.

இதையும் படிங்க : அடுத்த இரண்டாவது போட்டியிலாவது அவரை சேருங்க ப்ளீஸ்.. ரோஹித் சர்மாவிற்கு – ரசிகர்கள் கோரிக்கை

ஒருவேளை ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் போனால் அவரது இடத்தில் துருவ் ஜுரேல் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்திய அணிக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் ஒரு அரைசதத்துடன் 190 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement