இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையே ஏற்கனவே அக்டோபர் 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை சந்தித்து இந்த தொடரின் ஆரம்பத்திலேயே ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்துள்ளது.
இரண்டாவது போட்டியில் ஏற்படவேண்டிய மாற்றம் :
அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது அக்டோபர் 24-ம் தேதி புனே நகரில் நடைபெற இருக்கிறது. இந்த இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று இந்த தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்யும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் தீப்பை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஏனெனில் பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியின் போது மைதானத்தின் தன்மையை கணிக்க முடியாமல் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் சென்றது இந்திய அணிக்கு பின்னடைவை தந்தது.
இதன் காரணமாக இரண்டாவது போட்டியிலாவது அந்த தவறை செய்யாமல் மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராக ஆகாஷ் தீப்பை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சமீபத்தில் இந்திய அணிக்காக அறிமுகமாகிய ஆகாஷ் தீப் புதுப்பந்தில் அட்டகாசமாக செயல்பட்டு விக்கெட்டுகளை கைப்பற்றி தொடர்ச்சியாக அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வந்த வேளையில் அவருக்கு இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியின் போது வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 10.5 ஓவரிலேயே 111 ரன்ஸ்.. 4, 6, 2, 6, 4.. அபிஷேக் அதிரடி.. அமீரகத்தை நொறுக்கிய இந்தியா
இந்திய டெஸ்ட் அணியில் முகமது ஷமிக்கு மாற்று வீரராக பார்க்கப்படும் ஆகாஷ் தீப் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் வேளையில் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்கினால் தான் அவருடைய அனுபமும் அதிகரிக்கும் என்பதே பலரது கருத்தாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.



