எமெர்ஜிங் ஆசிய கோப்பை: 10.5 ஓவரிலேயே 111 ரன்ஸ்.. 4, 6, 2, 6, 4.. அபிஷேக் அதிரடி.. அமீரகத்தை நொறுக்கிய இந்தியா

IND vs UAE
- Advertisement -

ஓமனில் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் திலக் வர்மா தலைமையில் விளையாடும் இந்தியா ஏ அணி முதல் போட்டியில் பாகிஸ்தானை தோற்கடித்தது. அதைத்தொடர்ந்து இந்தியா ஏ தங்களுடைய இரண்டாவது போட்டியில் ஐக்கிய அரபு நாடுகள் ஏ அணியை எதிர்கொண்டது. அப்போட்டி இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு ஓமனில் நடைபெற்றது.

அந்தப் போட்டியில் டாஸ் வென்ற அமீரகம் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய அமீரகம் அணி எதிர்ப்பார்த்ததை போலவே இந்தியாவின் தரமான பந்து வீச்சில் சுமாராக விளையாடி 16.5 ஓவரில் 107 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ராகுல் சோப்ரா 50 (50), கேப்டன் பசில் ஹமீத் 22 (12) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

நொறுக்கிய இந்தியா:

இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரசிக் சலாம் 3, ரமந்தீப் சிங் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் 108 ரன்களை துரத்திய இந்தியா ஏ அணிக்கு பிரப்சிம்ரன் சிங் 8 ரன்களில் அவுட்டாக்கி சென்றார். அடுத்ததாக வந்த கேப்டன் திலக் வர்மா 21 (18) ரன்களில் அவுட்டானார். ஆனால் மறுபுறம் துவக்க வீரர் அபிஷேக் ஷர்மா தம்முடைய ஸ்டைலில் சுமாராக பந்து வீசிய அமீரக பந்து வீச்சாளர்களை அதிரடியாக எதிர்கொண்டார்.

குறிப்பாக கேப்டன் பசில் வீசிய 2வது ஓவரில் 0, 4, 6, 2, 6, 4 என 22 ரன்கள் விளாசினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடிய அவர் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 58 (24) ரன்களை 241.66 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி இந்தியாவின் வெற்றியை உறுதி செய்து அவுட்டானார். இறுதியில் நேஹல் வதேரா 6*, ஆயுஷ் படோனி 12* ரன்கள் எடுத்தனர். அதனால் 10.3 ஓவரில் 111-3 ரன்கள் எடுத்த இந்தியா ஏ அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது.

- Advertisement -

2 வெற்றிகள்:

இந்த வெற்றிக்கு 3 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய ரசிக் சலாம் ஆட்டநாயகன் விருதை வென்றார். அதனால் 2 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஏ அணி அசத்தியுள்ளது. இந்த அடுத்தடுத்த வெற்றிகளால் குரூப் பி பிரிவில் 4 புள்ளிகளை பெற்றுள்ள இந்தியா முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. அதன் காரணமாக இந்த தொடரில் இந்தியா செமி ஃபைனல் செல்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்றே சொல்லலாம்.

இதையும் படிங்க: இதை செஞ்ச ரோஹித் பெரிய மனசு கொண்டவர்.. இந்தியா கம்பேக் கொடுத்து ஜெயிக்கும்.. ஷமி உறுதி

குறிப்பாக இந்தியா தங்களுடைய கடைசி போட்டியில் ஓமன் அணியை அதனுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்கிறது. மறுபுறம் ஓமன் அணி ஏற்கனவே 2 போட்டிகளில் 2 தோல்விகளை சந்தித்துள்ளது. எனவே அந்தப் போட்டியிலும் ஓமன் அணியை தோற்கடித்து இந்தியா ஹாட்ரிக் வெற்றியை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement