IPL 2023 : அடிக்காம வெறும் பெயரை வெச்சுகிட்டு எத்தனை நாள் ஓட்டுவிங்க – நட்சத்திர இளம் இந்திய வீரரை விளாசும் மைக்கேல் வாகன்

Vaughan
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் தங்களுடைய லட்சிய முதல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் 2013க்குப்பின் 10 வருடங்கள் கழித்து முதல் முறையாக முதல் 5 போட்டிகளில் தோற்று பிளே ஆஃப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை ஆரம்பத்திலேயே 50% கோட்டை விட்டது. அந்த அணிக்கு ரிசப் பண்ட் காயத்தால் பங்கேற்காவிட்டாலும் 2016 ஐபிஎல் கோப்பையை வென்ற டேவிட் வார்னர் தலைமை தாங்கியதால் வெற்றி நடை போடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அக்சர் படேல், குல்தீப் யாதவ், நோர்ட்ஜெ ஆகியோரின் சிறந்த செயல்பாடுகளால் பந்து வீச்சு துறையில் அசத்தியும் பேட்ஸ்மேன்கள் சுமாராக செயல்பட்டது அந்த அணியின் அடுத்தடுத்த தோல்விகளுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

குறிப்பாக அதிரடி தொடக்கத்தை கொடுக்க வேண்டிய இளம் வீரர் பிரிதிவி ஷா 12 (9), 7 (5), 0 (3), 15 (10), 0 (2), 13 (11) என இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளிலும் சொற்ப ரன்களில் அவுட்டாகி மற்றொரு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டேவிட் வார்னருக்கு பெரிய அழுத்தத்தை கொடுத்து வருகிறார். அதனால் மெதுவாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் பெரிய ரன்களை எடுத்த டேவிட் வார்னர் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி தோல்விக்கான பழிகளை ஏற்றுக்கொண்டு வருகிறார்.

பெயரை மட்டும் வெச்சுகிட்டு:
முன்னாதாக 2018 ஐசிசி அண்டர்-19 உலக கோப்பையை கேப்டனாக இந்தியாவுக்கு வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதமடித்து சாதனை படைத்தார். அதனால் அவருடைய பேட்டிங் ஸ்டைல் சச்சின், லாரா, சேவாக் ஆகியோர் கலந்த கலவையை போல் இருப்பதாக அப்போதே பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பாராட்டினார். இருப்பினும் நாளடைவில் அதை தக்க வைத்துக் கொள்ளும் அளவுக்கு சிறப்பாக செயல்படாத அவர் இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டார்.

அதை தொடர்ந்து சயீத் முஷ்டாக் அலி கோப்பை போன்ற உள்ளூர் தொடர்களில் அசத்தியும் தேர்வுக்குழு கண்டுகொள்ளாத நிலையில் சமீபத்திய ரஞ்சிக்கோப்பையில் முச்சதம் அடித்ததால் கடந்த பிப்ரவரி மாதம் மீண்டும் இந்தியாவுக்கு தேர்வு செய்யப்பட்டார். ஆனால் விளையாடும் 11 பேர் அணியில் வாய்ப்பு பெறாத அவர் மீண்டும் நிலையான இடத்தை பிடிப்பதற்கு இந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இப்படி சொதப்பி வருவது ரசிகர்களுக்கு ஏமாற்றமாகும் ஆச்சரியமாகவும் அமைந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக முன்பை விட உடல் எடையை குறைத்து எக்ஸ்ட்ராவாக உழைத்து வருவதால் இந்த சீசனில் பிரிதிவி ஷா உச்சகட்ட செயல்பாடுகளை வெளிப்படுத்துவார் என்று டெல்லியின் பயிற்சியாளர் மற்றும் ஜாம்பவான் ரிக்கி பாண்டிங் ஆரம்பத்தில் தெரிவித்தார். அதே போல இந்தியாவுக்கு மீண்டும் விளையாட தயாராக இருப்பதாக டெல்லி அணியின் இயக்குனர் மற்றும் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியிருந்தார். ஆனால் அவர்களது நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்படாத அவர் தொடர்ந்து சொதப்பலாக செயல்பட்டு வருகிறார்.

Vaughan

அதனால் கடுப்பாகியுள்ள ரசிகர்கள் இவர் இருக்கும் வரை டெல்லியால் தொடர் வெற்றிகளை பதிவு செய்ய முடியாது என்று விமர்சித்து வருகிறார்கள். இந்நிலையில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு எத்தனை நாட்கள் சிறப்பாக செயல்படாமல் டெல்லி அணியில் விளையாடுவீர்கள் என்று அவரை முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி கிரிக்பஸ் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “இத்தொடரின் ஆரம்பத்தில் மார்க் வுட் அவரை போல்டாக்கினார். அவருடைய கால்கள் எங்கும் செல்லவில்லை. மாறாக அவர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்காக காத்திருக்கிறார். ஆனால் பந்து பிட்ச்சான பின் உள்ளே வரும் போது அவர் லைனுக்கு கொஞ்சம் கூட அருகில் இல்லாமல் இருக்கிறார். இத்தொடரில் பிரிதிவி ஷா அதிக ரன்களை அடிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பெயரை மட்டும் வைத்துக் கொண்டு நீங்கள் தொடர்ந்து விளையாட முடியாது”

இதையும் படிங்க:IPL 2023 : ஓவர் கான்ஃபிடென்ட்ஸ் எப்போதும் வேலைக்கு ஆகாது, ரிங்கு சிங் ஆட்டத்தால் யுவராஜ் அதிருப்தி – காரணம் என்ன

“குறிப்பாக கடந்த காலங்களில் செய்த சாதனைகளின் பெயரை வீணடிக்க முடியாது. நீங்கள் அப்போதும் இப்போதும் ரன்களை அடிக்க வேண்டும். இத்தொடரில் அவர் சுமாரான தொடக்கத்தை பெற்று வருகிறார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை தாண்டி அவர் இதுவரை பேட்டிங் செய்ததாக எனக்கு தெரியவில்லை” என்று கூறினார்.

Advertisement