IPL 2023 : ஓவர் கான்ஃபிடென்ட்ஸ் எப்போதும் வேலைக்கு ஆகாது, ரிங்கு சிங் ஆட்டத்தால் யுவராஜ் அதிருப்தி – காரணம் என்ன

Yuvraj Singh Rinku SIngh
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெற்ற 28வது லீக் போட்டியில் கொல்கத்தாவை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி தங்களுடைய முதல் வெற்றியை பதிவு செய்து அசத்தியது. மழையால் தாமதமாக இரவு 8.30 மணிக்கு நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச்சில் டெல்லியின் தரமான பந்து வீச்சில் 20 ஓவர்களில் 127 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஜேசன் ராய் 43 (39) ரன்களும் ஆண்ட்ரே ரசல் 38* (31) ரன்களும் எடுக்க டெல்லி சார்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா, குல்தீப் யாதவ், அக்சர் படேல், அன்றிச் நோர்ட்ஜெ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 128 ரன்கள் துரத்திய டெல்லிக்கு பிரித்திவி ஷா 13, மிட்சேல் மார்ஷ் 2, பில் சால்ட் 5, மனிஷ் பாண்டே 21 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் கேப்டன் டேவிட் வார்னர் அதிரடியாக விளையாடி 11 பவுண்டரியுடன் 57 (41) ரன்கள் குவித்து வெற்றியை உறுதி செய்து ஆட்டமிழந்தார். இருப்பினும் பந்து வீச்சுக்கு சாதகமாக பிட்ச்சில் துல்லியமாக பந்து வீசிய கொல்கத்தா கடுமையாக போராடியதால் போட்டி கடைசி ஓவர் வரை சென்றது.

- Advertisement -

யுவராஜ் அதிருப்தி:
ஆனாலும் இலக்கு குறைவாக இருந்த காரணத்தால் அக்சர் படேல் 19* (22) லலித் யாதவ் 4* (7) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் 100க்கும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் எடுத்தது ரன்களே டெல்லியின் வெற்றிக்கு போதுமானதாக அமைந்தது. அதனால் வருண் சக்கரவர்த்தி, அங்குள் ராய், நித்திஷ் ராணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்து போராடியும் கொல்கத்தாவை வெற்றி பெற வைக்க முடியவில்லை. அதன் காரணமாக பேட்டிங்க்கு சாதகமான அந்த பிட்ச்சில் இன்னும் 10 – 20 ரன்களை கூடுதலாக எடுத்திருந்தால் கொல்கத்தா வெற்றி பெற்றிருக்கும் என்றே சொல்லலாம்.

முன்னாதாக மழையால் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டிருந்ததால் எதிர்பார்க்கப்பட்டது போலவே டெல்லி பிட்ச் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. அதில் லிட்டன் தாஸ் 4, வெங்கடேஷ் ஐயர் 0, நிதிஷ் ராணா 4 என முக்கிய பேட்ஸ்மேன் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் 32/3 என கொல்கத்தா தடுமாறிய போது களமிறங்கிய மந்திப் சிங் 12 (11) ரிங்கு சிங் ஆகியோர் 4 (7) என முக்கிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் நங்கூரத்தை போடாமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

அதிலும் குறிப்பாக கொல்கத்தாவின் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படும் ரிங்கு சிங் நங்கூரத்தை போட முயற்சித்தாலும் 7 பந்துகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். குஜராத்துக்கு எதிராக கடைசி ஓவரில் கடைசி 5 பந்துகளில் 29 ரன்கள் தேவைப்பட்ட போது 5 சிக்ஸர்களை பறக்க விட்டு அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த அவர் பொறுமையாக விளையாட வேண்டிய இந்த சூழ்நிலையில் சற்று நிதானத்தை வெளிப்படுத்தி 15 – 20 ரன்கள் எடுத்திருந்தால் அது கடைசி ஓவர் வரை பந்து வீச்சில் போராடிய கொல்கத்தா வெற்றிக்கு மிகப்பெரிய உதவி புரிந்திருக்கும் என்றே சொல்லலாம்.

இந்நிலையில் என்ன தான் கடந்த போட்டிகளில் அபாரமாக விளையாடிய அசாத்தியமான வெற்றியை பெற்றுக் கொடுத்த தன்னம்பிக்கையை கொண்டிருந்தாலும் இந்த போட்டியில் சூழ்நிலைக்கேற்றார் போல் விளையாடாமல் ரிங்கு சிங் ரிஸ்க் எடுத்து விளையாடியது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக முன்னாள் வீரர் யுவராஜ் சிங் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஆண்ட்ரே ரசல் போன்ற அதிரடி வீரர் பேட்டிங் செய்ய காத்திருக்கும் நிலையில் 15 ஓவர்கள் வரை பொறுமையாக விளையாடிருக்க வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி ட்விட்டரில் கூறியுள்ளது பின்வருமாறு.

இதையும் படிங்க:மும்பை வான்கடே மைதானத்திற்கு பிறகு எனக்கு பிடிச்ச மைதானம் இதுதான் – சச்சின் டெண்டுல்கர் அளித்த பதில்

“இந்த சூழ்நிலையில் மந்திப் மற்றும் ரிங்கு சிங் ஆகியோருடைய அணுகுமுறை எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கவில்லை. நீங்கள் எவ்வளவு உயர்ந்த தன்னம்பிக்கை உடையவராக இருந்தாலும் விக்கெட்டுகள் விழும் போது ரிஸ்க் எடுப்பதை தவிர்த்து விட்டு 15வது ஓவர் வரை ஒருநாள் போட்டியை போல் விளையாடி நல்ல பார்ட்னர்சிப் உருவாக்கியிருக்க வேண்டும். ஏனெனில் கடைசியில் ஆண்ட்ரே ரசல் களமிறங்க காத்திருக்கிறார்” என்று கூறினார்.

Advertisement