சிக்ஸர் அடித்த பேட்ஸ்மேனை அவுட் செய்ய உதவினார் – தோனியின் மேஜிக் கேப்டன்ஷிப் பற்றி வியக்கும் இளம் வீரர்

Prashant-Solanki-1
- Advertisement -

ஐபிஎல் தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் 5-வது முறையாக கோப்பையை வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 14 கோடிக்கு வாங்கப்பட்ட தீபக் சஹர் ஆரம்பத்திலேயே காயத்தால் விலகியது, அனுபவமில்லாத ரவீந்திர ஜடேஜாவிடம் கேப்டன்சிப் பொறுப்பை ஒப்படைத்து மீண்டும் தோனி வாங்கிக் கொண்டது போன்ற அம்சங்களுடன் சுமாரான பேட்டிங் மற்றும் பவுலிங் ஆகியன அந்த அணிக்கு மோசமான தோல்விகளை பரிசளித்தது. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக 14 போட்டிகளில் 10 தோல்விகளை சந்தித்த அந்த அணி புள்ளி பட்டியலில் 9-வது இடத்தை பிடித்தது.

CSK MS Dhoni Ravindra Jadeja

- Advertisement -

இருப்பினும் 4 கோப்பைகளை வென்று கொடுத்த எம்எஸ் தோனி அந்த அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டது அந்த அணி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியாக அமைந்தது. ஏனெனில் ரவீந்திர ஜடேஜா தலைமையில் சுமாரான பேட்டிங் பவுலிங்கால் முதல் 8 போட்டிகளில் 2 வெற்றிகளை பதிவு செய்து அதே சென்னை தோனி தலைமையில் 6 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றது. அந்த வகையில் தமிழக ரசிகர்களுக்காக 2023 சீசனில் மீண்டும் சென்னைக்கு கேப்டனாக விளையாடுவேன் என்று அவர் அறிவித்தது அந்த அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது.

மேஜிக் கேப்டன்:
பொதுவாக எம்எஸ் தோனி என்பவர் யாருமே எதிர்பாராத வகையில் கேப்டனாக களத்தில் எடுக்கும் முடிவுகளுக்கு மிகவும் பிரபலமானவர். 2007 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் கடைசி ஓவரில் ஜோஹிந்தர் சர்மாவுக்கு வாய்ப்பளித்தது முதல் 2016 டி20 உலக கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் ரன் அவுட்டாவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை கணித்து கையுறையை கழற்றிவிட்டு ரன் அவுட் செய்ய போட்ட திட்டம் வரை பல தருணங்களில் எதிரணியினர் என்ன நினைப்பார்கள் என்பதை சரியாக கணிக்கும் தோனி அதற்கேற்றார்போல் முடிவுகளை எடுத்து மேஜிக் நிகழ்த்தியதை பலமுறை பார்த்துள்ளோம்.

Ravindra Jaddeja MS Dhoni

அதிலும் ஒரு விக்கெட் கீப்பர் கேப்டனாக இருக்கும் அவர் தமது பந்துவீச்சாளர்களை எதிரணி பேட்ஸ்மேன்கள் அடித்தால் உடனே அவர்களின் அருகில் சென்று அவரை அவுட் செய்வதற்கு எப்படி பந்து வீச வேண்டும் என்று சொல்லி கொடுத்து பீல்டர்களை நகர்த்தி பல முறை வெற்றிகரமாக அவுட் செய்ததையும் பார்த்துள்ளோம். அதனால் அவரின் தலைமையில் விளையாடுவதற்கு குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்கள் அதிகமாக ஆசைப்படுகிறார்கள். அதிலும் குல்தீப் யாதவ், யுஸ்வென்ற சஹால் போன்ற பவுலர்கள் எதிரணி பேட்ஸ்மேன்கள் தங்களை அடிக்கும் போதெல்லாம் தோனி எப்படி பந்து வீச வேண்டும் என்று சொல்லிக் கொடுத்து அவுட் செய்ய உதவியதாக பலமுறை வெளிப்படையாகவே கூறியுள்ளனர்.

- Advertisement -

வியக்கும் சோலங்கி:
அந்த வரிசையில் இந்த வருட ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு வாய்ப்பு பறி போனதால் கடைசி கட்டத்தில் இளம் வீரர்களுக்கு கேப்டனாக தோனி வாய்ப்பளித்தார். அதில் டெல்லிக்கு எதிரான ஒரு போட்டியில் முதல் முறையாக வாய்ப்பு பெற்ற மும்பை இளம் வீரர் பிரசாந்த் சோலங்கி ராஜஸ்தானுக்கு எதிரான கடைசி போட்டியில் சிம்ரோன் ஹெட்மையர் தம்மை சிக்ஸர் அடித்ததாகவும் அடுத்த சில பந்துகளில் தோனியின் உதவியால் அவரை அவுட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Prashant-Solanki

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “மஹி பாய் எப்போதும் அனைத்தையும் எளிதாக கடைபிடிப்பார். லெக் ஸ்பின், கூக்லி, டாப் ஸ்பின் என எந்த வகையான பந்தாக இருந்தாலும் நீங்கள் ரன்கள் கொடுக்கவில்லை என்றால் சரியாக பந்துவீசுகிறீர்கள் என்று அர்த்தம். அந்த வகையில் டாட் பந்துகளை வீச முயற்சியுங்கள் என்று மட்டுமே அவர் எங்களுக்கு ஆலோசனை வழங்கினார். டி20 கிரிக்கெட்டில் அதுதான் எதிரணிக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்”

- Advertisement -

“என்னுடைய 2-வது போட்டியில் நாங்கள் பெரிய இலக்கு எடுக்கவில்லை என்பதால் என்னை அவர் தாமதமாகத்தான் பந்துவீச அழைத்தார். அந்த சூழ்நிலையில் நான் வீசிய முதல் பந்திலேயே சிக்சர் அடிக்கப்பட்டேன். அதன் காரணமாக லென்த்தை இழுத்து கொஞ்சம் ஷார்ட் பந்தாக வீசுமாறு தோனி என்னிடம் கூறினார். அதனால் பேட்ஸ்மேன் மைதானத்தின் பெரிய பகுதியில் அடிக்க முயற்சிப்பார் என்று தெரிவித்தார். நானும் அதை வெற்றிகரமாக செய்தேன்”

இதையும் படிங்க : நம்பினோம் ஆனால் ! ஐபிஎல் 2022 தொடரில் கோடிகளை வாங்கினாலும் ஏமாற்றிய தக்கவைக்கப்பட்ட வீரர்கள் – ஒரு அலசல்

“அதில் ஹெட்மையர் என்னை பவுண்டரியாக அடித்தார். அதனால் மீண்டும் என்னிடம் வந்த தோனி மைதானத்தின் பெரிய பவுண்டரி பகுதியை உபயோகப்படுத்துமாறு சொன்னார். அதனால் அடுத்ததாக டாப் ஸ்பின் பந்தை ஹெட்மயரின் காலில் நான் வீசிய நிலையில் அதை அடித்த அவர் டீப் மிட் விக்கெட் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்” என்று வியப்புடன் பேசினார். 1.2 கோடிக்கு இந்த வருடம் சென்னை அணியால் ஏலத்தில் வாங்கப்பட்ட பிரசாந்த் சோலங்கி அந்த குறிப்பிட்ட போட்டியில் தோனியின் உதவியால் 20 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement