நம்பினோம் ஆனால் ! ஐபிஎல் 2022 தொடரில் கோடிகளை வாங்கினாலும் ஏமாற்றிய தக்கவைக்கப்பட்ட வீரர்கள் – ஒரு அலசல்

Pollard
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடரில் ராஜஸ்தானை தோற்கடித்த குஜராத் தனது முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. இம்முறை லக்னோ, குஜராத் ஆகிய அணிகள் தோற்றுவிக்கப்பட்டதால் அந்த அணிகளுக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்யும் வகையில் கடந்த 2018க்கு பின் அனைத்து அணிகளும் முழுமையாக கலைக்கப்பட்டு மெகா அளவில் வீரர்கள் ஏலம் நடை பெற்றது. அந்த ஏலத்திற்கு முன்பாக 8 அணிகள் ஏற்கனவே தங்களுக்காக விளையாடிய சிறந்த வீரர்களை மீண்டும் தங்களுக்கு சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கையில் மிகப்பெரிய தொகைகளை கொடுத்து தக்க வைத்தது.

- Advertisement -

அதேபோல் புதிய அணிகள் 3 வீரர்களை தேர்வு செய்தன. அப்படி நம்பி தக்க வைக்கப்பட்ட வீரர்களில் முக்கால்வாசி பேர் இந்த ஐபிஎல் 2022 தொடரில் சுமாராக செயல்பட்டு அந்தந்த அணிகளுக்கு தோல்வியை பரிசளித்தனர். அந்த அலசலை பற்றி பார்ப்போம்:

மும்பை: 5 கோப்பைகளை வென்று கொடுத்த வெற்றிகரமான ஐபிஎல் கேப்டனாக சாதனை படைத்த ரோகித் சர்மாவை 16 கோடி என்ற பெரிய தொகைக்கு முதல் ஆளாக மும்பை நிர்வாகம் தக்க வைத்தது. இருப்பினும் 14 போட்டிகளில் 268 ரன்கள் மட்டுமே எடுத்த அவர் கேப்டனாகவும் டிம் டேவிட் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்காமல் சுமாராக செயல்பட்டார்.

Pollard

அதேபோல் கைரன் பொல்லார்ட் 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட நிலையில் பேட்டிங்கில் வெறும் 144 ரன்களும் பந்து வீச்சில் 4 விக்கெட்டுகளை எடுத்த அவர் மோசமாக செயல்பட்டதால் கடைசி கட்டத்தில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார்.

- Advertisement -

அந்த அணிக்கு 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் காயத்தால் முழுமையாக விளையாடவில்லை என்றாலும் களமிறங்கிய போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். அதேபோல் 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவும் முதல் போட்டியை தவிர எஞ்சிய அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டார்.

MS Dhoni Jadeja

2. சென்னை: சிறப்பாக கேப்டன்ஷிப் செய்வார் என்ற நம்பிக்கையில் தோனியை விட 16 கோடிக்கு தக்கவைக்கப்பட்ட ரவிந்திர ஜடேஜா அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியால் பேட்டிங் பவுலிங் என மொத்தமாக சொதப்பி காயத்தால் வெளியேறினார். அதேபோல் 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேப்டன் தோனியும் அவரின் தரத்திற்கு 14 போட்டிகளில் 232 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார். இருப்பினும் 2020, 2021 சீசனில் ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்ததற்கு இந்த வருடம் ஓரளவு சிறப்பாக செயல்பட்டார்.

- Advertisement -

8 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட மொயின் அலி 244 ரன்களும் 8 விக்கெட்டுகளை எடுத்தாலும் கடந்த வருடம் ஏற்படுத்திய தாக்கத்தை இந்த வருடம் ஏற்படுத்தவில்லை. கடந்த வருடம் 635 ரன்கள் விளாசிய காரணத்தால் 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ருதுராஜ் கைக்வாட் இம்முறை 14 போட்டிகளில் 368 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

siraj

3. பெங்களூரு: 15 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட விராட் கோலி 16 போட்டிகளில் 341 ரன்கள் மட்டுமே எடுத்து அவரின் தரத்திற்கு மோசமாக செயல்பட்டது தோல்வியை பரிசளித்தது. அதேபோல் 7 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட முகமது சிராஜ் 10.08 என்ற மோசமான எக்கனாமியில் ரன்களை வாரி வழங்கி மோசமாக செயல்பட்டார்.

- Advertisement -

அந்த அணிக்கு 11 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கிளன் மேக்ஸ்வெல் 301 ரன்களும் 6 விக்கெட்டுகள் எடுத்து ஓரளவு சிறப்பாக செயல்பட்டாலும் கடந்த வருடம் ஏற்படுத்திய தாக்கத்தை இம்முறை ஏற்படுத்தவில்லை.

Varun

4. கொல்கத்தா: 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ஆண்ட்ரே ரசல் 6 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சுனில் நரைன் ஆகிய 2 வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் தங்கமாக மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால் 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் பந்துவீச்சில் 1 விக்கெட் கூட எடுக்காமல் பேட்டிங்கிலும் 182 ரன்கள் எடுத்து மோசமாக செயல்பட்டார்.

அதேபோல் 8 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட தமிழகத்தின் வருண் சக்ரவர்த்தி தினேஷ் கார்த்திக் இல்லாமல் தடுமாறினார். இந்த இருவரும் ஒரு கட்டத்தில் பெஞ்சில் அமர வைக்கப்பட்டனர்.

buttler 1

5. ராஜஸ்தான்: 10 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட ஜோஸ் பட்லர் 863 ரன்களை விளாசி 20 கோடிக்கு தகுதியான வீரரைப் போல சிறப்பாக செயல்பட்டார்.

ஆனால் 14 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சுமாராக செயல்பட்டாலும் கேப்டன்ஷிப்பில் அதை ஈடு கட்டினார். அதேபோல் 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இளம் வீரர் யசஸ்வி ஜெய்ஸ்வால் 10 போட்டிகளில் 258 ரன்கள் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டார்.

Kane Williamson CSK vs SRH

6. ஹைதெராபாத்: டேவிட் வார்னரை கழற்றிவிட்டு 14 கோடிக்கு கேப்டனாக தக்க வைத்து நியமிக்கப்பட்ட கேன் வில்லியம்சன் டெஸ்ட் இன்னிங்ஸ் ஆடி பெரிய பின்னடைவை கொடுத்தார்.

4 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட அப்துல் சமத் பெரும்பாலும் பெஞ்சில் அமர்ந்திருந்தார். ஹைதராபாத் அணிக்கு 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட உம்ரான் மாலிக் மட்டுமே 22 விக்கெட்டுகளை எடுத்து ஆறுதலாக இருந்தார்.

pbks 1

7. பஞ்சாப்: 4 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட இளம் வீரர் அர்ஷிதீப் சிங் 14 போட்டிகளில் 10 விக்கெட்டுகளை 7.70 என்ற எக்கனாமியில் எடுத்து இந்தியாவிற்கு விளையாடும் அளவுக்கு அட்டகாசமாக செயல்பட்டார். ஆனால் 12 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட மயங்க் அகர்வால் கேப்டன்ஷிப் அழுத்தம் காரணமாக 195 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமாக செயல்பட்டார்.

8. டெல்லி: 16 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட கேப்டன் ரிஷப் பண்ட் 14 போட்டிகளில் 340 ரன்கள் எடுத்து சுமாராகவே செயல்பட்டார். 9 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட அக்சர் படேல் 182 ரன்கள் 6 விக்கெட்டுகளும் எடுத்து பரவாயில்லை என்ற அளவுக்கு செயல்பட்டார்.

7.50 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட பிரித்வி ஷா இடையிடையே காயத்தால் 10 போட்டிகளில் 283 ரன்களுடன் சுமாராக செயல்பட்டதைப் போலவே 6.50 கோடிக்கு தக்க வைக்கப்பட்ட தென்ஆப்பிரிக்காவின் அன்றிச் நோர்ட்ஜெ காயத்தால் 6 போட்டியில் 9 விக்கெட்டுகள் மட்டுமே எடுத்தார்.

9. லக்னோ: 17 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு முதலாவதாக வாங்கப்பட்ட கேஎல் ராகுல் 616 ரன்களை எடுத்து கேப்டனாகவும் முடிந்த அளவு சிறப்பாக செயல்பட்டார்.

lucknow 1

இருப்பினும் 9.2 கோடிக்கு வாங்கப்பட்ட மார்க்க ஸ்டோனிஸ் 156 ரன்களும் 4 விக்கெட்டுகளும் 4 கோடிக்கு வாங்கப்பட்ட ரவி பிஷ்னோய் 14 போட்டிகளில் 13 விக்கெட்டுகளை எடுத்து சுமாராக செயல்பட்டனர்.

10. குஜராத்: தலா 15 கோடிகளுக்கு வாங்கப்பட்ட கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரஷித் கான் மற்றும் 8 கோடிக்கு வாங்கப்பட்ட சிமெண்ட் கில் ஆகிய மூவருமே சிறப்பாக செயல்பட்டதாக அந்த அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement