ரஹானேவின் பேட்டிங் பெயிலியருக்கு இதுதான் காரணம். தப்பு இங்க தான் நடக்குது – பிரக்யான் ஓஜா பேட்டி

Ojha
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரஹானேவின் செயல்பாடு தற்போது பெரிய விமர்சனத்தை சந்தித்துள்ளது. ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ரஹானே மெல்போர்னில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்து வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த இரண்டு ஆண்டுகளாகவே மோசமாக செயல்பட்டு வரும் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்து வருகின்றன.

rahane

- Advertisement -

அதற்கு முக்கிய காரணமாக அவரது மோசாமான பேட்டிங் ஃபார்ம் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரஹானேவின் பேட்டிங்கில் இருக்கும் குறைக்கு என்ன காரணம் என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிரக்யன் ஓஜா தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

ரஹானேவின் பேட்டிங்கில் பெரிய அளவில் எந்தவித தொந்தரவும் இல்லை. ஆனால் அழுத்தத்தின் காரணமாக ரஹானேவின் பேட்டிங்கில் தவறு ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் சில மாற்றங்களை செய்தாக வேண்டும். குறிப்பாக அவரது கால் நகர்வுகள் தற்போது முன்பு போல் இல்லை.

Rahane-1

முன்பெல்லாம் தெளிவாக பந்துகளை சந்தித்து விளையாடும் ரஹானே இப்போது பந்துக்கள் சந்திக்கும்போது அவரது கால் நகர்வுகளில் தவறினை எதிர்கொள்கிறார். இதன் காரணமாகவே அவரால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியாமல் இருக்கிறது. நிச்சயம் அவர் இந்த தவறை திருத்திக்கொண்டு கண்டிப்பாக மீண்டு வருவார். இந்திய அணியின் சீனியர் வீரரான அவர் நிச்சயம் டெஸ்ட் அணிக்கு தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும் அவர் மீண்டும் பார்முக்கு வர – சீனியர் வீரருக்கு சப்போர்ட் செய்த டிராவிட்

முதல் போட்டியின்போதும் இரண்டு இன்னிங்க்ஸையும் சேர்த்து 39 ரன்களை மட்டுமே அடித்த ரஹானே அணியிலிருந்து வெளியேற்றப்படுவார் என்று பலரும் கூறி வரும் நிலையில் அடுத்த போட்டியில் ரகானே விளையாடுவார் என்பதை பயிற்சியாளர் டிராவிட் உறுதி செய்துள்ளார். மேலும் விராட் கோலி ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாகவே களமிறங்குவார் என்று தற்போது வரை உறுதிப்படுத்தப்படாத தகவல் வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement