ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும் அவர் மீண்டும் பார்முக்கு வர – சீனியர் வீரருக்கு சப்போர்ட் செய்த டிராவிட்

Dravid
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதனை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு இந்திய அணி கேப்டன் விராட்கோலி மீண்டும் அணிக்கு திரும்புவதால் அவருக்கு பதிலாக எந்த வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற கேள்வியே தற்போது அதிகளவில் உள்ளது.

ind

- Advertisement -

மேலும் தொடர்ச்சியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் மோசமான பார்ம் காரணமாக பேட்டிங் செய்ய தவித்து வரும் ரகானே நியூஸிலாந்து அணிக்கு எதிரான இந்த முதல் டெஸ்டின் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 ரன்கள் அடித்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாக அவரே அணியில் இருந்து வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் தற்போது ரஹானேவிற்கு சப்போர்ட் செய்து பேசியுள்ள இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் கூறுகையில் : நான் ரஹானேவின் பார்ம் குறித்து வருத்தப்படவில்லை. நீங்களும் வருத்தப்பட வேண்டாம். ஏனெனில் ரஹானே ரன் குவிக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அவர் ஒரு தகுதியான பிளேயர்.

rahane

இந்திய அணிக்காக கடந்த பல ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். அவரை போன்ற ஒரு அனுபவம் வாய்ந்த வீரருக்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் கிடைத்தால் அவரது ஆட்டம் முற்றிலும் மாறிவிடும், எனவே அவரைப் பற்றி யாரும் கவலை கொள்ள வேண்டாம் என டிராவிட் கூறி உள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க : இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவரை தூக்குங்க. அதுதான் அவருக்கும் நல்லது – டேனியல் வெட்டோரி பேட்டி

இதன்காரணமாக நிச்சயம் இரண்டாவது டெஸ்டில் ரஹானே இடம் பெறுவார் என்று தெரிகிறது. மேலும் அடுத்த டெஸ்ட் போட்டிக்கான பிளேயிங் லெவன் குறித்து பேசிய டிராவிட் : தற்போது எந்த முடிவையும் நாங்கள் எடுக்க முடியாது என்றும் மைதானத்தின் சூழ்நிலை மற்றும் கண்டிஷன் ஆகியவற்றைப் பொறுத்தே அணித்தேர்வு அமையும் என டிராவிட் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement