இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இவரை தூக்குங்க. அதுதான் அவருக்கும் நல்லது – டேனியல் வெட்டோரி பேட்டி

Vettori
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்ததை அடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டெஸ்ட் அணியில் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த விராட் கோலி மீண்டும் அணியில் இணைவதால் மிடில் ஆர்டரில் ஏதாவது ஒரு பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு வழிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

kohli rahane

- Advertisement -

அந்த வகையில் அடுத்த இரண்டாவது போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனான டேனியல் வெட்டோரி 2வது டெஸ்ட் போட்டிக்கான அணியிலிருந்து ரஹானேவை வெளியேற்றலாம் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : ரஹானே தற்போது ரன்களை குவிக்கும் தீவிரத்தில் இருந்தாலும் அவரது பேட்டிங் ஃபார்ம் தற்போது அவரை ரன் அடிக்க விடாமல் தடுத்து வருகிறது. இதன் காரணமாக அவருக்கு ஒரு சிறிய இடைவெளி தேவை. அடுத்த போட்டியில் அவருக்கு ஓய்வு கொடுப்பதன் மூலம் மீண்டும் அவரது டெக்னிக்கை அவர் பலப்படுத்த நேரம் கிடைக்கும் என்று விட்டோரி கூறியுள்ளார்.

Rahane-1

மேலும் தொடர்ந்து பேசிய அவர் : பெரிய அணிகளுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் விளையாடும் போது அழுத்தத்தை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அந்த வகையில் தற்போது ரஹானேவின் மீது அதிக அழுத்தம் ஏற்பட்டு உள்ளது. சீனியர் வீரர் என்பதனால் அவர்மீது அதிக எதிர்பார்த்து உள்ளது. அதனை பூர்த்திசெய்ய நினைத்தே சீனியர் வீரர்கள் இதுபோன்ற அழுத்தத்தை சந்திக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : விராட் கோலியின் வருகையால் அணியில் இடத்தை இழக்கும் வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

அதனை சரிசெய்ய அவருக்கு சிறிது நேரம் தேவை. ரகானே சந்தித்திருக்கும் அதே நிலைமையில் தான் தற்போது புஜாராவும் சந்தித்துள்ளார் என விட்டோரி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement