விராட் கோலியின் வருகையால் அணியில் இடத்தை இழக்கும் வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ

Kohli
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூரில் நடைபெற்று முடிந்த வேளையில் போட்டி டிராவில் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து முதல் டெஸ்ட் போட்டியில் ஓய்வில் இருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி இந்திய அணிக்கு திரும்புவதால் இரண்டாவது போட்டியில் மிடில் ஆர்டரில் இருந்து ஒருவர் நிச்சயம் வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

kohli 1

- Advertisement -

அப்படி கேப்டன் விராத் கோலி அணியில் இணையும் பட்சத்தில் வாய்ப்பை இழக்க உள்ள மூன்று வீரர்களை இந்த பட்டியலில் காணலாம்.

Rahane

1) அஜிங்கியா ரஹானே : இந்திய அணியின் துணை கேப்டனாக இருக்கும் இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே தனது பேட்டிங் பார்மை இழந்து தவிக்கிறார். குறிப்பாக இங்கிலாந்தில் நடைபெற்று முடிந்த 4 டெஸ்ட் போட்டிகளில் மொத்தமாக சேர்த்து 15 ரன்கள் சராசரியுடன் 109 ரன்கள் மட்டுமே குவித்தார். அதுமட்டுமின்றி நடைபெற்று முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியிலும் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் ரகானே வெளியேற்றப் பட வாய்ப்பு உள்ளது.

Agarwal-2

2) மயங்க் அகர்வால் : ஏற்கனவே துவக்க வீரராக விளையாடி வந்த மாயங்க் அகர்வால் இடையில் பார்ம் அவுட் காரணமாக தனது இடத்தை இழந்தார். இந்நிலையில் மீண்டும் தனது வாய்ப்பை இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் பெற்ற அவர் முதல் இன்னிங்சில் 13 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 17 ரன்கள் மட்டுமே குவித்ததன் காரணமாக இவரும் அணியில் இருந்து வெளியேற்றப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

Iyer-5

3) ஸ்ரேயாஸ் அய்யர் : தனது டெஸ்ட் கிரிக்கெட்டை தற்போதுதான் ஆரம்பித்த ஸ்ரேயாஸ் அய்யர் 16வது இந்திய வீரராக முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமின்றி இரண்டாவது இன்னிங்சிலும் இவர் அரை சதம் அடித்து சாதனை புரிந்து இருந்தாலும் அணியின் துணை கேப்டன் ரஹானே மற்றும் சீனியர் வீரர் புஜாரா ஆகிய இருவரும் முக்கியமான வீரர்கள் என்பதன் காரணமாக ஸ்ரேயாஸ் அய்யர் ஒரு போட்டியில் வெளியில் அமர வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

இதையும் படிங்க : ப்ளீஸ் அவரை மட்டும் அடுத்த போட்டியில் விளையாட வைக்காதீங்க – சீனியர் வீரருக்கு வலுக்கும் எதிர்ப்பு

இவர்களை தவிர்த்து எந்த வீரருக்கு பதிலாக விராட் கோலி அணியில் இடம் பெறலாம் என்பது குறித்த உங்களது கருத்துக்களை கமெண்ட் செய்யலாம் நண்பர்களே.

Advertisement