ப்ளீஸ் அவரை மட்டும் அடுத்த போட்டியில் விளையாட வைக்காதீங்க – சீனியர் வீரருக்கு வலுக்கும் எதிர்ப்பு

IND
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதலாவது போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இந்த போட்டி இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிவடைந்தது. இந்நிலையில் அடுத்த இரண்டாவது போட்டியில் டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் துவங்க உள்ளது.

Bharat

- Advertisement -

அந்த போட்டிக்கான அணியில் முதல் போட்டியில் ஓய்வில் இருந்த கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்புவதால் மிடில் ஆர்டரில் ஒரு மாற்றத்தை கட்டாயம் செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது வரை இந்திய அணியின் துணை கேப்டனான ரஹானே வெளியேற்றப்பட்டு அந்த இடத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று தெரிகிறது.

ஆனால் ரஹானேவை விட மோசமான வீரராக இருந்து வரும் புஜாராவை வெளியேற்றும்படி ரசிகர்கள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர். நடைபெற்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியின் போது முதல் இன்னிங்சில் 26 ரன்கள் குவித்த புஜாரா இரண்டாவது இன்னிங்சில் போதும் 22 ரன்கள் மட்டுமே குவித்து ஆட்டமிழந்தார்.

pujara 2

அதுமட்டுமின்றி கடைசியாக அவர் விளையாடிய 39 டெஸ்ட் இன்னிங்ஸ்களில் 3வது வீரராக களமிறங்கிய புஜாரா சதம் அடிக்காமல் விளையாடி வருவதால் அவரை அணியில் இருந்து வெளியேற்றி விட்டு அவருக்கு பதிலாக விராட் கோலியை விளையாட வைக்கலாம் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். ஏனெனில் ரஹானே துணைக்கேப்டனாக இருப்பது மட்டுமின்றி மீண்டும் பார்முக்கு வரக்கூடிய தன்மை உடையவர் என்பதால் அணியில் நீடிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

- Advertisement -

இதையும் படிங்க : 2 ஆவது போட்டியில் ஆடுவீர்களா ? வர்ணனையாளரின் கேள்விக்கு – ரஹானேவின் நேரடியான பதில்

அதுமட்டுமின்றி ஷ்ரேயாஸ் அய்யர் தனது முதல் போட்டியிலேயே அசாத்தியமான பேட்டிங் திறமையை வெளிக்கொண்டு வந்தால் நிச்சயம் அவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதன் காரணமாக புஜாரா மீது தற்போது எதிர்ப்பு வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement