2 ஆவது போட்டியில் ஆடுவீர்களா ? வர்ணனையாளரின் கேள்விக்கு – ரஹானேவின் நேரடியான பதில்

Rahane
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டி கான்பூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த வேளையில் இரு அணிகளுக்கும் வெற்றி தோல்வியின்றி போட்டி டிராவில் முடிந்தது. அதை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான அடுத்த இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 3ஆம் தேதி மும்பை மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் விராட் கோலி மீண்டும் அணிக்கு திரும்புகிறார்.

Light

- Advertisement -

கோலியின் வருகையால் எந்த வீரர் அணியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்ற கேள்வியே தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் தென்படுகிறது. ஏனெனில் ஏற்கனவே இந்த தொடரில் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் அணியில் பெரிய அளவில் மாற்றம் உள்ளது. குறிப்பாக துவக்க வீரர்களாக விளையாடி வந்த ரோஹித்-ராகுல் ஆகியோர் இருவரும் இன்றி மாயங்க் அகர்வால் மற்றும் கில் ஆகிய இருவரும் ஓப்பனர்களாக விளையாடி வருகின்றனர்.

மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் ஐயர், பின்வரிசையில் அக்சர் பட்டேல் என ஏகப்பட்ட வீரர்கள் தற்போது அணியில் விளையாடி வருகின்றனர். இந்நிலையில் விராட் கோலி அணியில் இணையும் பட்சத்தில் மிடில் ஆர்டரில் ஒரு வீரர் கட்டாயம் வெளியேறி ஆகவேண்டும். ஆனால் முதல் போட்டியின் முதல் இன்னிங்சில் சதம் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் அரைசதம் அடித்ததன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் இரண்டாவது டெஸ்டில் விளையாட வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர்.

Iyer-2

இதன் காரணமாக ரஹானே அணியில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது. ஏனெனில் ரஹானேவின் பேட்டிங் பார்ம் தொடர்ந்து மோசமாக இருப்பதால் அவரை வெளியேற்றிவிட்டு அவருக்கு பதிலாக விராட் கோலி விளையாடலாம் என்று பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல் டெஸ்ட் போட்டி முடிந்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தான் விளையாடுவது என்பது குறித்து வர்ணனையாளர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஹானே கூறுகையில் :

- Advertisement -

இதையும் படிங்க : ஷர்துல் தாகூரின் நிச்சயதிற்கு நேரில் சென்று வாழ்த்திய பிரபல இந்திய அணி வீரர் – வைரலாகும் புகைப்படம்

நிச்சயம் விராட் கோலி அடுத்த போட்டியில் இந்திய அணிக்குள் வருவார். அப்படி வரும்போது நான் விளையாடுவேனே என்பது மும்பை போட்டியின் போதுதான் தெரியும். அதுவரை இந்த விஷயத்தில் நான் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை நிர்வாகம் முடிவு எடுக்கும் என்று ரஹானே கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement